கார் என்பது இன்றைய மத்தியதரக் குடும்பங்களின் கனவாக இருக்கிறது.ஒரு கார் இருந்தா போதும் எங்க வேணாலும் போகலாம். இந்த பஸ், ட்ரெயின் ப்ளைட் டிக்கெட் வாங்கும் அவஸ்தை எல்லாம் இல்லை. ஆனால் பெட்ரோல் விலைதான் ஏறிப் போச்சு. செல்ஃப் ட்ரைவிங் செல்லத் தெரியாவிட்டால்.ட்ரைவரிடம் விட்டால் இன்னும் என்னென்ன கேடு வேறு அதற்கு நிகழுமோ. இந்த பயமும் அனைவரிடமும் உண்டு. அனைவருக்கும் இருக்கும் இந்தக் கார் ஆசையை மெயின் தீமாக வைத்துக் கதை சொன்ன அருண் குமாருக்கும் தயாரித்த கணேஷ் குமாருக்கும் முதலில் ஒரு ஹேட்ஸ் ஆஃப்.
எங்கள் அப்பத்தா வீட்டு ஐயாவிடம் 40 கார்கள் இருந்ததாம். ஆஸ்டின், செவர்லெட், பத்மினி , ப்ளைமவுத், அம்பாசிடர் என்று. அப்ப உள்ள கார்கள் எல்லாம் பிரம்மாண்டமாய் இருப்பதால் அதன் உள்ளே பிள்ளைகள் அமர ரெட்டு சீட்டுப் போட்ட மடக்கு ஸ்டூல்கள் இன்னும் என் அம்மா வீட்டில் இருக்கின்றன.