எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 2 செப்டம்பர், 2019

டீன்ஸ்டாக் & டோனர்ஸ்டாக் மார்க்கெட் - DIENSTAG UND DONNERSTAG MARKT.

செவ்வாய் வியாழன் சந்தை இதுதான் டீன்ஸ்டாக் & டோனர்ஸ்டாக் மார்க்கெட் என்றால் அர்த்தம். :) டூயிஸ்பர்க்கில் இம்ஷ்லாங்கில் பிரதி செவ்வாய் & வியாழன் தோறும் காலை பத்து மணியில் இருந்து மாலை 4 மணி வரை ஃபிஷ்ஷர் ஸ்ட்ரீட்டில் இந்தச் சந்தை நடைபெறும்.

சல்லிசாக கேக்கிலிருந்து தொட்டிச்செடி, பழவகைகள், துணிமணிகள், புத்தகங்கள், செண்ட் பாட்டில்கள், வாட்சுகள் இன்னபிற சைவ அசைவ உணவு வகைகள் , ஐஸ்க்ரீம் வெரைட்டீஸ் எல்லாம் கொட்டிக்கிடக்கும் இங்கே.

வாங்க ஒரு உலா போய் வருவோம். ஊர்சுத்த ஏத்தமாதிரி கிளைமேட்டும் இதமா 72 டிகிரி,80 டிகிரின்னு இருக்கு.
எல்லாமே ஸ்டால்கள்தான். ஒரு வேன் அல்லது கண்டெயினர் சைஸ் வண்டியின் பக்கவாட்டில் அரைக் கதவு வைத்து உள்ளே மேடைகள் அமைத்துப் பொருட்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

மூவபிள் ஷாப்ஸ். MOVABLE SHOPS. தூரத்தே தெரியும் பச்சைக் கோபுரம் எங்கூரு சர்ச் :)


துணிகளைக் குடைகள் விரித்து ஹேங்கரில் தொங்க விட்டிருக்கிறார்கள்.

எல்லாம் 15 யூரோ, 10 யூரோ , 9 யூரோ என்று விலைப் பட்டியல் கொண்டது.

வண்டியில் இருந்து ஸ்டாண்ட் போல் இழுத்தும் கடைபரப்புகிறார்கள்.

முன்புறம் இருப்பவை புத்தகங்கள். !!!


இது பழக்கடை.

2 யூரோவுக்கு ஒரு கிலோ பழங்கள். 160 ரூபாய். நம்மூரிலும் இதே விலைதானே. இன்னும் 200 என்றெல்லாம் ஆப்பிளின் விலை சொல்லப்போனால் நம்மூரில்தான் கூட.

நாவல்பழம் ( எல்லா வகை பெர்ரிக்களும் ) ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, க்ரேப்ஸ், ப்ளம்ஸ், பியர், ஆப்பிள், ஆப்ரிகாட், ஆரஞ்ச், வாழைப்பழம், நெக்டார், அத்திப்பழம், எக்ஸெட்ரா, எக்ஸெட்ரா.


நர்சரி. தொட்டிச் செடிகள், விதைகள், பூக்கள்.

சொல்லபோனால் ஜெர்மானியர்கள் பூக்களின் காதலர்கள். எல்லா வீட்டிலும் பால்கனியில் மினிமம் இரண்டு மூன்று பூந்தொட்டிச் செடிகளைப் பார்க்கலாம்.

அழகுச் செடிகள், பூச்செடிகள், கீரைகள், லெட்யூஸ்கள், முள்ளங்கி, முட்டைக்கோஸ், நூக்கல், விதம் விதமான புல், க்ரோட்டன்ஸுகள், வேலிச்செடிகள், ஹெர்ப்ஸ் என்று இருந்தன.முன்னே இருக்கும் ப்ளூ குப்பைத் தொட்டி. த்ராஷ் பாக்ஸ் !

பின்னே இருப்பது பழக்கடை .


இது காஃபி & ஸ்நாக்ஸ் கடை.


கேக் ஷாப். ஃப்ரெஷ்லி பேக்டு கேக்ஸ். :)
சுடச் சுட கரமோ கரம் கேக்ஸ். ஹாட்டாக்ஸ், வேபிள்ஸ்,பேகிள்ஸ்,டோநட்ஸ், டாங்கில்ஸ், பர்கர், பிஸா, சாண்ட்விச் , லாண்ட்ப்ராட்ஸ், க்ரைஸான்ஸ் என எல்லாமே கிடைக்கும்.


ஆக்சுவலா சொல்லப்போனா இந்த இடம் மற்ற நாட்களில் ஒரு கார்பார்க்கிங். ஆனால் செவ்வாய் & வியாழன்று மட்டும் இவை சந்தைக்காக ஒழித்துவிடப்படுகின்றன. பக்கவாட்டு ரோடுகளில் காரை பார்க் செய்ய அன்றுமட்டும் அனுமதி. தரையின் அமைப்பைப் பாருங்கள். வெகு அழகு இல்ல. :)


உடுப்பவரை எதிர்பார்த்து உடுப்புக்கள். :)


எல்லாமே டாப்ஸ் & பேண்ட்ஸ்தான். த்ரீஃபோர்த்ஸ், ஷார்ட்ஸ், ட்ரௌஸர்ஸ் , காஷுவல்ஸ், டீஷர்ட்ஸ்,நைட்வேர்ஸ், பாரலல்ஸ், ஜீன்ஸ். சாக்ஸுகள், ஸ்வெட்டர்கள்,ஓவர்கோட்டுகள், ப்ளேசர்கள் , ஜெர்க்கின்ஸ்.


மழையில் துணிகள் நனையாமலிருக்க ஜிப்பர் போட்ட கண்ணாடித் திரைகள் அங்கே பாருங்கள் !!!


இது மாமிசக்கடை. மீட் சாசேஜ் போன்றவை கிடைக்கும். மெயினாக வெள்ளைப் பன்றிக்கறியும் ரெட்மீட் எனப்படும் மாட்டுக்கறியும் கிடைக்கும். எலும்பையே பார்க்க முடியாது. எல்லாவற்றையும் அரைத்துக் கேக்காகிவிடுவார்கள் போலிருக்கு :D

வீட்டுக்குத் திரும்புவோம். திரும்ப செடி கொடி, கனிவகைகள், காய்கறிகளும் உண்டு.


பசித்தால் ஒரு ப்ரெட் பட்டர் ஜாம் வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டே போவோம். அல்லது ஸ்க்ராம்பில்ட் எக் வித் ப்ரெட் கிடைக்கும்.

இது சீஸ் கடை,  20 வகையான சீஸ்கள் உள்ளன. செடார் சீஸ், மோர்செல்லா சீஸ். காட்டேஜ் சீஸ்,  என்று அதே போல் அசைவ வகைகளிலும் சீஸ்கள் உள்ளன.பன்றிக்கறியில் செய்யப்படும் ரோஸ் கலர் சீஸ் இங்கே ஃபேமஸான ஒன்று.


வாட்ச் கடை.செண்ட் பாட்டில்கள், பாடி ஸ்ப்ரேக்கள், பர்ஃப்யூம் கடை.

மாடர்ன் ஜ்வல்லரீஸும் இங்கே உண்டு. ஸ்டட், பெடண்ட், ரிங், ட்ராப்ஸ், செயின், மோதிரம், ப்ரேஸ்லெட்,ப்ரூச் ஆகியவற்றை விரும்பி அணிகிறார்கள்.

இரு வியாபாரிகள் சந்தித்துக் கொண்டபோது .


இதுதான் அந்தச் சந்தைக்குப் போற ரோடு.


இதுதான் அந்தச் சந்தைக்கு வார ரோடு :)


சொல்ல மறந்துட்டேன் . இந்த செவ்வாய் வியாழன் சந்தையன்னிக்கு ஒரு ஸ்பெஷல் இருக்கு. இந்த முறை மழை பெய்ததால் அது மிஸ்ஸிங். இல்லாட்டா இந்த இரு தெருக்களிலும் அங்கங்கே தெருப்பாடகர்கள் இசைக்கலைஞர்களைப் பார்க்கலாம். மிக மிக அருமையாக வாசிப்பார்கள்.

ரோட்டில் சேர் போட்டு அமர்ந்து தங்கள் சூட்கேஸில் இருந்து ஒரு ஸ்டாண்டை எடுத்துப் பாடல்கள் கொண்ட நோட்டை/ஸை வைப்பார்கள். தங்கள் முன் ஒரு சிறு சூட்கேஸ் போன்ற பெட்டியைத் திறந்து வைத்து  தாங்கள் கொண்டு வந்த சேர் அல்லது ஸ்டூலில் அமர்ந்து  இசைக்கத் தொடங்குவார்கள். சுமார் 3 - 4 மணி நேரம் இசைப்பார்கள்.

ஒரு பாடல் முடித்து இன்னொரு பாடல் பாடப்போகும் இடைவேளைகளின் போது செல்ஃபோன்களின் பேசிக்கொண்டிருப்பார்கள்.

இவ்வூரின் முதியவர்களுக்கும் எளியவர்களுக்குமான தேவைகள் நிறைந்த சந்தையாய் இருக்கிறது . வித்யாசமான கிராமமும் சந்தையும் இது. :)

2 கருத்துகள்:

  1. வித்தியாசமான சந்தை. தகவல் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...