எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 9 செப்டம்பர், 2019

நமது இலக்கு - ஒரு பார்வை.

நமது இலக்கு.



நமது இலக்கு

ஒருமித்த தமிழரின் ஒரே இலக்கு என்ற பத்ரிக்கை ஈழத்தின் அரசியல், ஈழம்பற்றிய சர்வதேச நிலைப்பாடு, புலம்பெயர்தலுக்குப் பின்னான மக்களின் வாழ்வு, அகதிகள் நாடு கடத்தப்படல் என அனைத்தையும் சாட்டைக் கரம் கொண்டு விளாசுகிறது.

இப்பத்ரிக்கையின் பிரதம ஆசிரியர் அருட்கலாநிதி சி யோ  இம்மானுவேல் அடிகள். முதன்மை ஆசிரியர் திரு கிருட்டிண மூர்த்தி. சிறப்பாசிரியர்கள்  நாகலிங்கம், வி ஆர். வரதராசா, பொறுப்பாளர் முருகதாசன் ஆகியோர். ஆசிரியர் குழுவில் திருமதி கௌசல்யா சொர்ணலிங்கம் , செ. தெய்வேந்திரம்,சி. கண்ணன், விக்னா பாக்கியநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  

இலக்கு நோக்கிய நமது இலக்கியப் பயணம் இதில் புலிப்படைப் ப்ரபலங்களின் பேட்டி எடுக்கப்பட்டிருக்கிறது. தவமாய்த் தவமிருந்து என்று ஒரு சினிமா விமர்சனமும் இடம்பெற்றிருக்கிறது இந்நூலில். திருமதி கௌசல்யா சொர்ணலிங்கம் எடுத்துள்ள பேட்டிகள் சிறப்பானவை. வாழ்த்துக்கள் தோழி

மாவீரர் நாள் 2005. கார்த்திகை மார்கழி. சிறப்புமலரில் நிறைய சிறப்பு விஷயங்கள்.  லெப் கேணல் மாலதி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதற்பெண் வித்து. லெப். சங்கர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன் ஆகியோரின் புகைப்படங்களும் கரும்புலிகளின் சேவைச்சிறப்புக் குறித்தும் கூறப்பட்டுள்ளது. ( தங்கள் சாவு அஞ்சலியைப் பார்த்துவிட்டு இரசித்துவிட்டுக் களம் புகுந்தவர்கள் )

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் பற்றிய புகைப்படம் சோகம் விளைவித்தது. தற்போது அந்த இடம் முற்றிலுமாக சிதைக்கப்பட்டதாக அறிந்தேன். லெப் கேணல் பொன்னம்மான், லெப் கேணல் திலீபன், லெப். கேணல் சங்கர், லெப் கேணல் ராயு , அன்ரன் பாலசிங்கம் ஆகியோரின் சேவை பற்றியும் அறியத்தந்திருக்கிறார்கள்.

உலகத் தமிழர் பேரமைப்பு, தமிழ் நுண்கலைக் கல்லூரி, தமிழ்த்திறன் போட்டி, இலக்கியச் சோலை, நடனப் போட்டி, நினைவெழுச்சி நாள், ஈழத்துத் தமிழ்ப் படைப்புக்களில் நூலியல் அம்சங்கள், பிரபலங்கள் சந்திப்பு , நாடகப் போட்டி, கலைமாலை, விளையாட்டு விழா, நூல் வெளியீட்டு விழா, செஞ்சோலையின் புதிய இல்லம் ஆகியன பற்றிய பதிவோடு சீதனம், துரோகம், ஆளும் அரசின் மனித உரிமை மீறல்களும் கடுமையாக சாடப்பட்டுள்ளன.

தமிழ்ப் பகுதியிலிருந்து சிங்களக் குடியேற்றங்களின் வெளியேற்றம், தமிழீழமே எங்கள் மூச்சு, புலிகளின் வானலை, சர்வதேச மாணவர் தமிழீழப் பேரவை, தமிழ்த் தேசியத்தலைவரின் புலம்பெயர் தமிழ்ப் படையணி பற்றிய தகவல்களோடு இரண்டாயிரம் தமிழர்கள் ஜெர்மனியின் வெஸ்ட்வாலன் மாநிலத்தில் இருந்து நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படலாம் என்ற ( 2005 ஆம் ஆண்டு ) தகவல் அதிர்ச்சியும் வருத்தமும் அளித்தது. பிரேமன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேசமன்னிப்பு அமைப்பின் தலைவர் திரு. விராஜ் மெண்டிஸ் இது மனித உரிமை மீறல் என நமது இலக்கு பத்ரிக்கைக்குத் தெரிவித்துள்ளார்.

தமிழ்ச் சந்ததிகளைப் பேண வளர்பயிர் சிறுவர் அமைப்பு, சிறுகதைப் போட்டிக்குத் தங்கப் பதக்கங்கள் ஆகியன புதுத்தளிர்களுக்கு நம்பிக்கை அளிப்பவனவாகவும் புது இலக்கை நோக்கிச் செலுத்துபவதாகவும் இருக்கின்றன.

ஜெனிவாவில் அரசு புலிகள் பேச்சு, இலங்கையில் மீண்டும் சமாதானப் பேச்சு என்பன பற்றிப் படிக்கும்போது தமிழ் மக்களுக்கு இன்றும் தொடரும் பொது இடர்களும் வன் செயல்களும் வரிசைகட்டி நின்று மனசாட்சியைக் கேள்வி கேட்கின்றன.

டுல்டுங் என்ற தற்காலிக வதிவிட அனுமதி பெற்ற மக்களின் தர்மசங்கடநிலை இன்னும் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் கூட அவர்கள் இங்கே வாழ்ந்துவிட்டபின்னும் அவர்கள் அனுமதி நீட்டிக்கப்படாததால் அகதிகள் விண்ணப்பம் நிராகரிப்பு, அதனால் சலுகை அற்ற நிலை, வேலை இடங்களிலிருந்து நீக்கம் செய்யப்படுதல், கல்வி கற்று வரும் குழந்தைகளோடு பாதியில் திடீரென குடும்பத்தோடு நாடு கடத்தப்படும் நிலை இன்னும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. மனித நேயத்தோடு புகலிடம் கொடுத்த நாடுகள் தங்கள் சட்டங்களை மீள் பரிசீலனை செய்யவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.  

டிஸ்கி:- நமது இலக்கு என்ற பத்ரிக்கையை பண்ணாகம் திருமிகு கிருட்டிணமூர்த்தி அவர்கள் எங்கள் இல்லத்துக்கு வருகை தந்தபோது அளித்தார்கள். அப்பத்ரிக்கை தொடர்ந்து வெளிவரலாம். ஏனோ நின்றுவிட்டது. புலம்பெயர் வாழ்வின் நிலையற்ற தன்மையும் சொந்த நாட்டில் நுழையக்கூட முடியாத தடைகளும் தமிழ்ச் சொந்தங்கள் ஏதிலியாய்ப் படும் பாட்டையும் நினைவுகளில் இன்னும் தங்கள் ஊர்களிலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் அவசத்தையும் விவரித்தன. கையறு நிலையில் இவற்றை என் வலைத்தளத்தில் வருத்தத்தோடு பகிர்கிறேன். விபரங்களை அறியத்தந்தமைக்கு நன்றி திருமிகு கிருட்டிணமூர்த்தி சார் J

2 கருத்துகள்:

  1. நன்றி பண்ணாகம் திருமிகு கிருஷ்ணமூர்த்தி சார்.

    அவரது முகநூல் பக்கத்தில் இருந்து...

    Krishnamoorthy Kandasamy யேர்மனியில் 2005ம் ஆண்டு காலப்பகுதியில் வெளிவந்த "நமது இலக்கு" பத்திரிகையை தற்போது இங்கு கண்ணுற்ற தமிழ்நாடு காரைக்குடியை சேர்ந்த தமிழில் பாண்டித்தியம் பெற்ற பிரபல எழுத்தாளர் திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் எம்மை பெருமைப்படுத்த என தனது இணைய பக்கத்தில் இன்று அவற்ரை பிரசுரித்து மீள்ஞாபகம் செய்தமைக்கு நமது இலக்கின் முதன்மை ஆசிரியர் என்ற முறையில் திருமதி. தேனம்மை அவர்களுக்கு எனது நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...