முகநூலில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பக்கம் வாசகசாலை. தினமும் கவிதை இரவில் கவிதை வாசிப்பு , மாதத்தில் ஒருநாள் நூல் விமர்சனம் . சிறுகதை, நாவல் விமர்சனம் ஆகியவற்றை முன்னெடுத்து அனைவரின் வாசிப்புத் திறனையும் மேம்படுத்துகிறது. இதுவரை 200 க்கும் மேற்பட்டவர்களின் கவிதைகளைத் தினந்தோறும் வாசித்துப் பல்வேறு கவிஞர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அதில் என் கவிதைகளும் 28 ஆம் நாளில் இடம்பெற்றிருப்பது மகிழ்வு.
தங்கள் அன்றாடக் கடமைகளோடு ஒவ்வொரு கவிஞரின் கவிதைகளையும் தேர்ந்தெடுத்து அவற்றை முகநூலில் சரியாக இரவு பத்துமணிக்கு ரசனையான கருத்துக்களுடன்/விளக்கங்களுடன் இனிமையான குரலில் வாசகசாலைக் குழுவினர் பதிவு செய்து வருகிறார்கள். டெக்னிகல் டிஃபெக்ட் ஆன சில சமயங்கள் தவிர மற்ற நாட்களில் ஒளிபரப்பாகியே வருகிறது.
