ஜெர்மனியில் இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால் அவர்கள் பேசுவது இதுவாகத்தான் இருக்கும். ”ஜெர்மன் மொழி பேசிப் பழகியாச்சா. என்ன டைப் விசாவில் வந்திருக்கீங்க. எவ்வளவு வருடம் ஆனது ஜெர்மனி வந்து ? வேலை எந்த ஃபீல்டு , காண்ட்ராக்டா,” கடைசியாகப் படிக்கும் குழந்தைகள் இருந்தால் அவர்கள் பள்ளி மற்றும் படிப்புப் பற்றி விசாரிப்பார்கள்.
வருடத்தில் 8 மாதம் குளிர் வாட்டி எடுத்தால் கூட அதைப் பற்றிப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை அவர்கள். வீடு மற்றும் ரோடு ரூல்ஸ்தான் அதிகம் இங்கே. வீடு சுகாதாரம் என்றால் அது கழிவறை சுகாதாரத்தையும் பொறுத்ததே. கழிவறை சுகாதாரம் என்றால் துளிக்கூட ஈரமே இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீடு வாடகைக்குவிடும் அக்ரிமெண்ட் ரூல்ஸ் படி பராமரிக்காமல் கழிவறையில் பாசி படிந்ததால் அதை சுத்தமாக்கித் திருப்பி ஒப்படைக்க கிட்டத்தட்ட 3000 யூரோக்கள் வரைகூட செலவு செய்தார் ஒரு மாணவர் !.
இந்தோ ஜெர்மன் உறவு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. பதினெட்டாம் நூற்றாண்டிலேயே பார்த்தலோமா சீகன்பால்க் இந்தியா வந்து தொல்காப்பியத்தை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ் மொழியியல் ஆய்வு செய்து ஜெர்மன் தமிழியல் அளித்த சி எஸ் மோகனவேலு என்ற பேராசிரியரின் பணி சிறப்புக்குரியது.
