எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 8 ஜூலை, 2022

லேடீஸ் ஸ்பெஷலின் ஸ்ரீசக்தி விருது - 2022.

 லேடீஸ் ஸ்பெஷலின் ஸ்ரீசக்தி விருது - 2022. 

இந்த வருடம் மகளிர் தினத்தை லேடீஸ் ஸ்பெஷலின் ஆசிரியை திருமதி . கிரிஜா ராகவன் மேடம் லேடீஸ் ஸ்பெஷல் சார்பில் மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.  


25 ஆம் ஆண்டை எட்டும் லேடீஸ் ஸ்பெஷல் இதழுடன் ரோட்டரியும் ( இன்னர்வீல் டிஸ்ட்ரிக்ட் 323 இணைந்து பெண் சக்தியின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக தினமும் ஸ்ரீசக்தி & யுவசக்தி என இரு விருதுகளை அளித்தார்கள். 

மார்ச் 28 அன்று மாலை எனக்கும் சினிமா தயாரிப்பாளர் செல்வி அபிநயா செல்வம் என்ற இளம் சக்திக்கும் விருது வழங்கப்பட்டது. 


மார்ச் மாதம் முழுமையும் 62 ஆளுமைகளை அறிமுகப்படுத்தினார்கள். தினம் மாலை இந்திய நேரம் 6.30 - 7 வரை அரை மணி நேரத்தில் கட்டுக்கோப்பாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்கள்.

டிஸ்ட்ரிக்ட் சேர்மன் கமலா செல்வம் அவர்களின் முத்திரையோடு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 

ஸூம் மீட்டில் இறை வணக்கப்பாடல், வரவேற்புரை, சக்தி விருதாளர்கள் அறிமுகம், சிறப்புரை, விருது வழங்கல் எனத் திட்டமிட்டபடி நடத்தி முடித்தார்கள். விருதுகளும் E-AWARDS ஆக அனுப்பி வைக்கப்பட்டன.

அரை மணி நேரத்துக்குள் நிகழ்ச்சியைச் செம்மையாக வழி நடத்திச் சென்ற ஸ்வர்ணலதா ஜோதிகுமார், உமா கேஷவ், சுகன்யா ஸ்ரீராம் ஆகியோருக்கும், சிறப்புரை ஆற்றி இவ்விருதை வழங்கிய கிரிஜாம்மாவுக்கும் அன்பு வாழ்த்துக்களும், நன்றிகளும்.


Shakthi +ve - Season II - 2022 Daily Awards Event Day என்ற தலைப்பில் யூ ட்யூபில் பார்க்கலாம். என்னுடைய நிகழ்வுக்கான யூ ட்யூப் லிங்க் இதுதான். ( கிடைத்ததும் பகிர்கிறேன் ). 


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...