எனது பதிநான்கு நூல்கள்

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

துபாய் - குளு குளு பேருந்து நிறுத்தமும் வீடுகளும்.


ஃபோட்டோ அப்லோடும்போது ஏர்போர்ட் ஃபோட்டோ முதலில் வந்துவிட்டது. சரி வாங்க ஏர்போர்ட்டிலிருந்து இறங்கிப் போய் எக்ஸலேட்டர்களில் மிதந்து போய் வெளியேறி டாக்ஸி பிடித்து நகரைப் பார்ப்போம். 2015 களில்தான்  நான் ஹைதராபாத்தில் ஏசி பேருந்து நிறுத்தத்தைப் பார்த்துள்ளேன். அதுவும் ஏர்போர்ட் போவது மட்டும். ஆனால் 2009 இலேயே துபாயில் ஏசி பேருந்து நிறுத்தத்தைப் பார்த்து வியந்தேன். 

துபாய் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சியடைந்த ஊர். பெட்ரோலை மட்டும் நம்பியிராமல் ஷாப்பிங் மால்கள், உலகத்தர சுற்றுலாக்களுக்கு ஏற்றபடி டால்ஃபின் ஷோ, சாண்ட் சஃபாரி, பெல்லி டான்ஸ், ஸ்நோ வேர்ல்ட், ஐஸ் விளையாட்டுகள், வான் விளையாட்டுகள் ( க்ளைடிங், பாரா க்ளைடிங், ) மற்றும் ( Dune bashing, Quad biking, Sky diving, Skiing, Scuba diving, Hot air balloon, Water theme parks, Deep sea fishing .) எனத் தொழில் வளத்தைப் பெருக்கி வைச்சிருக்காங்க. 


இதுதான் பஸ் ஸ்டாப். எவ்வளவு அழகா வடிவமைச்சிருக்காங்க ! வெய்யில் தாக்காம இருக்க எல்லா பஸ் ஸ்டாப்புமே ஏஸில குளு குளுன்னு இருக்கு. சாலை எல்லாம் படு தூய்மை.  


லூலூ ஷாப்பிங் செண்டர்ல கிறிஸ்மஸுக்காக உள்ள சாண்டா க்ளாஸ் பொருட்கள் என்னைக் கவர இந்தப் புகைப்படம் எடுத்தேன். 


ஷாப்பிங் மால்.இது நம்மூர் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மாதிரி தெருவுக்குத் தெரு இருக்கு. 


அடுக்கு வீடுகள். பொதுவாக இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கடுக்கு மாடிகள். 

அங்கே ஒவ்வொரு ஃப்ளோரிலும் க்ளீனிங் நடைபெறும்போது அறிவிப்பு ஸ்டாண்ட் ஒன்றும் வைத்திருப்பார்கள்.  இந்த மிக்கி மவுஸ் பொம்மையும் பறந்து கொண்டிருந்தது. ஒரு திருப்பூட்டும் தட்டு வாங்க இங்கே உள்ள ஒரு கடைக்குச் சென்றோம். அந்தக் கடைத்தெரு வீதி இது. 

இது அங்கே உள்ள நாளங்காடி. டெய்லி மார்க்கெட். 


துபாய் முழுவதும் பாலைவனச் சோலை போல நீரூற்றுகளும் பேரீச்சை மரங்களும்தான். 


பச்சைப் புல்வெளிகளும் அழகு. காசு கொடுத்துத் தண்ணீர் வாங்கி செலவழிக்கிறார்கள். கடல் தண்ணீரை நன்னீராக்குறாங்களோ என்னவோ.கார்களின் அணிவகுப்பு. இங்கே உள்ள கார்களையும் அவற்றின் நளினத்தையும் பிரம்மாண்டத்தையும் கண்டு வியந்தேன். 

அடுக்கடுக்காய்ப் பூச்செடிகள்.


அதே பள்ளிக்கூட பஸ்கள். இந்தியன் பப்ளிக் ஸ்கூல். 2012 இல் கந்தர் சஷ்டி விழா நடந்த பள்ளி .

ஷேக் ஸாயத் ரோடு. 


இது துபாயில் வீட்டருகில் இருக்கும் இரு பேருந்து நிறுத்தங்களும் பக்கத்தில் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றும். 


இரவில் ஜொலிக்கும் பேருந்து நிறுத்தம். பேருந்திலிருந்து இறங்கி ரோட்டைக் கடக்கும் மக்கள்.

அம்மக்கள் கடக்கும் வரை மகிழுந்துக்காரர்கள் துளிக்கூட நகர மாட்டார்கள். மேலும் இங்கே அதிக வேகத்தில் நகருக்குள் வண்டி ஓட்ட மாட்டார்கள். அதெல்லாம் ஹைவேஸ், பைபாஸில்தான் மணிக்கு 200 கிமீ வேகம். பத்து மணி நேரத்தில் சௌதியில் இருந்து காரில் 2000 கிலோமீட்டரைக் கடந்து துபாய் வந்ததாக நண்பர் ஒருவர் சொல்லி இருக்கிறார். 

வீடுகளின் அமைப்புப் பலவிதம். அவற்றில் சாளரங்களும் படிகளும் கூட. 

உப்பரிகை ஸ்டைலில் மேலே ஒரு பால்கனி. !

பெரு நகரத்தின் ஏதோ ஒருதெரு. 

துபாயின் விநோதக் கட்டிடங்களில் ஒன்று அவ்வப்போது கவர்ந்து இழுத்ததும் கூட. 

பாரம்பரிய உடை அணிந்த ( அன்று வெள்ளிக்கிழமை மாஸ்க் - எனவே விடுமுறை ) மண்ணின் மைந்தர்கள் பெருமையோடு நடை போடுகிறார்கள். வளரும் இளஞ்சிறார்கள் நிச்சயம் பெருமைப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் முன்னோர்கள், பெற்றோர்கள் பாலையையும் பசுமையாக்கி வைத்திருக்கிறார்கள். உலக அரங்கில் பேரோடும் புகழோடும் முன்னிருத்தி இருக்கிறார்கள். 

நான் பார்த்த ஊர்களிலேயே துபாய் ஷார்ஜா, அபுதாபி மூன்றும் மறக்க இயலாத ஊர்கள். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...