செவ்வாய், 22 அக்டோபர், 2013

எல்லாப் பிறப்பும் புதிய தரிசனத்தில்.

எல்லாப் பிறப்பும்..:-
**************

வாஸ்துவுக்காய்
வைத்திருக்கும் தொட்டியில்
அழகு மீன்கள்
சுவாசிக்கமுடியாமல்
மரிக்கின்றன.

இலைகள் விழுகின்றன என
என் வீட்டு மரத்தின்
கிளைகளைக் கோபமாய்
வெட்டுகிறார்கள்
அண்டை வீட்டார்,


பறவையின் எச்சம் கண்டு
கல் எறிகிறார்
இறக்கைகள் அடிக்கும்
இடம் நோக்கி
வாயிற் காவலர்.

வளர்ப்புப் பிராணிகள்
வைத்துக் கொள்ளக்கூடாது என
கட்டளையிடுகிறது
குடியிருப்போர்
நலச்சங்கம்.

புல்லாய்ப் பூண்டாய்
பல்மிருகமாய்ப் பறவையாய்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்து
தனித்து வாழ்கிறேன்
மனிதன் என்ற கூட்டுக்குள்

டிஸ்கி :- இந்தக் கவிதை ஆகஸ்ட் 1-15 , 2013 புதிய தரிசனம் இதழில் வெளிவந்தது. 

3 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை தான் சகோதரி.. சொன்ன விதம் சிந்திக்க வைத்தது...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...