எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 3 அக்டோபர், 2013

நன்றி வாழ்த்துக்களுக்கும் புகைப்படங்களுக்கும்..


Nesamithran Mithra

தாழ் பயிரின் நிறைகனம் எப்போதுமிருக்கும் செல்வத்து பாரம் ,
நாள் சுடர்த்தும் கதிர் போல் ஒளி கூடிய நல்லாயுள் பல்கிப் 
பெருகட்டும் . எந்த கோளும் இணங்கிச் சுழல்க !

வருஞ்சிறப்பும் செல்லும் துயரும் சலனிக்காதிருக்கட்டும் திண்மனதை

துணிந்தே எண்ணுவதும் எண்ணித்துணிவதும் நல்விளைவே
 தந்துவக்கட்டும்

வாழிய பல்லாண்டு ! பிறந்த நாள் நல் வாழ்த்துகள் !
Kumaresan Asak 

·பிறப்பின் அருமை உயிர்த்து வாழ்வதில்.

வாழ்வின் பெருமை நேயம் சூழ்வதில்.

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.வழக்கறிஞர் கண்ணன்.

அருட் பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் , 
எல்லா இடங்களிலும் , எல்லாத் தொழில்களிலும் பாதுகாப்பாகவும், 
உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் அமைய வேண்டுகிறேன் . 
வாழ்க வளமுடன் என் நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.


Dana
அன்புத் தோழி, தமிழ் வளர் கவிசெல்வி, தேன்தமிழ் எழுத்தால் 
முத்திரைகள் பதித்து வரும் "சாதனை அரசி'' தேனம்மை இலட்சுமணன் 
மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள் .

மென்மேலும் எழுத்துலகின் எல்லாப் பரிணாமங்களிலும் 
வெற்றி நடை போட என் அன்பான வாழ்த்துகள் !!

வாழ்க வளங்களுடனும்!!நன்னலங்களுடனும் !! பேரன்புடனும்!!


bala

அன்பு மனத்தால் அனைவரையும் ஈர்த்து

அழகுக் கவிதைகளால் ஆண்மாவை வசீகரித்து

நன்மன நட்பால் நாளும் பழகிவரும்

எங்கள் இனிய கவிமகள் ஈடற்றத் திருமகள்

தங்கமனத்து தமிழ்த் தேனம்மை

மங்காப் புகழோடு வளமெலாம் பெற்று

என்றுமுள தென்தமிழ்போல்

நன்றாக வாழ்க வாழ்க  
tamil

சொல்லெல்லாம்

தேன் சிந்த

மனமெல்லாம் நட்பு வாசம்

ஆராதனை மலர்களில்

அன்பு மலர் நீ

புன்னகை பூவேந்தி

நீ உலா வருமிடமெல்லாம்

கவிதையும், மணம் வீசும் உணவு வகையுமாய்

இதழ் கொள்ளா ப்ரியத்தோடு

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தேனெனச்சொன்னவுடன்

பிணைப்பால் பிசுபிசுக்கிறாய்

சுவையால் இனிக்கிறாயடி தோழி

என்றும் என் அன்புனக்கு என்னவளே..!


Dhavappudhalvan Badrinarayanan A M

சகோ தேனம்மை லட்சுமணன்உமக்குத்தான்....தேன் சிந்தும் கவிமொழியோ ?

காவியத்தின் வழி நடையோ?

இனிக்கும் செங்கரும்போ?

மறுப்பாய் பதிலுண்டோ?

கவி வழி நடைக்கொண்டே,

இசையாய் தமிழை இசைத்திடவே,

என்றும் தொடர்ந்தே பயணிக்க,

நலமுடனும் மகிழ்வுடனும் நீரிருக்க,

வாழ்த்துக்கள் பகிர்ந்தோமே உமக்காக.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ.


Anand

தோள் கொடுக்க தோழனும்...

தோள் சாய தோழியும் ...

கிடைத்தால் ...

தோழன் எனக்கு தந்தை

தோழி எனக்கு தாய் ...!!!

நட்பால் மட்டும் தான் ...

இது சாத்தியமாகும் ...!!!......Best wishes, God Bless you
KrishnanJeyanthi Krishnan Subramaniam

எங்கள் மலேசிய நாட்டில் வெளிவரும் மயில் மாத இதழில் 
உங்களது பெண் மகவைக் கொண்டாடும் 'ங்கா' எனும் 
தலைப்பில் நூல் அறிமுகக் கட்டுரை வெளிவந்துள்ளது. 
அதனைப் படிதத்பின்பு உங்களது அநத கவிதைத்தொகுப்பினை 
படிக்க வேண்டும் என்ற ஆவல் பிறந்துள்ளது. 
வாழ்க உங்கள் படைப்பிலக்கியப் பார்வை....

Ganpat Visvanathan
Wishing you a very happy birthday dear Thens....
may God Bless you with many, many birthdays to share with your loved ones ...... and may you contribute to society much more with your thought  provoking writings.......:)
Rtn Raghu Ram

மிக்க நன்றி..நீங்கள் அன்று சொன்ன ஆறுதல்....இன்று நான் இப்படி..
மறக்க மாட்டேன், என்றும் நன்றி உணர்வுடன்.....

டிஸ்கி :-  கடவுளுக்கு நன்றி. 
நன்றி நேசன் , குமரேசன்,  கண்ணன், தனா, பாலா, தமிழ், தவப்புதல்வன், ஆனந்த், கிருஷ்ணன் ஜெயந்தி ( அந்த விமர்சனம் கிடைத்தால் பகிருங்கள் . ) நன்றி கண்பத் விஸ்வநாதன் ஜி  & ரகுராம். 
புகைப்படங்களில் வாழ்த்திய அன்பு உள்ளங்கள் ரமலான், பன்னீர் செல்வம், இந்திரன் அச்சுதன், வசந்தகுமார் கிராஃபிக்ஸ் டிசைனர் மற்றும் கண்பத் விஸ்வநாதன் ஜி. :)

5 கருத்துகள்:

 1. கடவுளுக்கு நன்றி...

  பறக்க வாருங்கள் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html

  பதிலளிநீக்கு
 2. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 3. உங்கள் பதிவுகளை நான் என் முகநூலில் பார்க்க முடியாமல் போய்விட்டது..காரணம் புரியவே இல்லை.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...