எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

ராகுல்.. ஒரு நாயகன் உதயமாகிறான்.


/////ஹாய்,எனக்கு தெரிஞ்ச என் குடும்பத்தில் ஒருவர் அதற்கு மேல சொன்னா என் பையன்..ராகுல் என்பவரை பற்றி ஒரு சிறு அறிமுகம்..

தன்னம்பிக்கை,விடாமுயற்சி,அயராத உழைப்பு வெற்றிக்கான இலக்கை தொட..இந்த வார்த்தைகளை நினைத்தாலே என் மனதில் தோன்றும் முகம் ராகுல் தான்..கோவை தடாகம் செல்லும் வழியில், இடப்புறம்,வடவள்ளி சாலையில் பயணித்தால் ஹரிணி ஆர்கேட் என்ற காலனியில் வசிக்கும் திரு.மணி & திருமதி.மல்லிகா என்பவரின் இளைய மகன் இவர்..இவர்க்கு மேல் ஒரு சகோதரி சுஜிதா..அன்பான பண்பான குடும்பம்..

ராகுல் விஸ்காம் கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் முடித்த இருபது வயது இளைஞன்..வாழ்வில் சினிமா துறையில் தடம் பதித்து சாதிக்கத் துடிப்பவர்..

இவர் எனக்கு நன்கு அறிமுகமானது சென்ற வருடம் ஆகஸ்ட் பதினைந்திற்காக நடந்த ஒரு விழாவில் நடன் பயிற்சிக்காக கோவை ப்ரிமியர் வித்யா விகாஷ் (தொண்டாமுத்தூர் சாலையில் ஓணப்பாளையம் அருகே உள்ளது) பள்ளியில் என் மகளை பயிற்சிக்காக அழைத்து செல்வேன் அப்போது தான் சந்தித்தேன்..ஞாயிற்றுக் கிழமைகளும் பயிற்சி..

முதலில் சந்தித்த போது இவர் தான் நடன ஆசிரியர் என்று எனக்கு தெரியவில்லை..என் சின்ன மகளிடம் என்ன இந்த பையன் பத்தாம் கிளாஸா இவன் என்னா ஆடிகிட்டு இருக்கான் கேட்டவுடன்..என் பொண்ணு மா,சும்மா இரு இந்த அண்ணாதான் டான்ஸ் மாஸ்டர்னு சொன்னா..எனக்கு ஆச்சரியம் இந்த சின்ன பையன் என்னத்த சொல்லித் தரப்போறான்னு கேட்டேன்..அவளுக்கு செம கடுப்பு அந்த அண்ணா டான்ஸ் ஸ்கூல் நடத்தறார் நம்ம வீட்டுக்கு பக்கதுலதான்னு சொன்னவுடன் தான் நினைவு வந்தது..

தெனமும் நா போகிறப்போ அவர் வீட்டில் அருகில் பார்ப்பேன்..ஒரு சின்ன சிரிப்பு மரியாதக்குரிய ஒரு ஹலோ என்று ஸ்னேகத்துடன் சிரிப்பார்..

ஒரு கலைஞன் அவன் நினைத்த வழியில் சென்று சாதிக்கணும்னா அவர் குடும்பம் அவரின் பக்க பலமா இருக்கணும்.. அந்த வகையில் இவர் அதிர்ஷ்சாலி..இவரின் ஆசையும் நோக்கமும் அறிந்து தட்டிக் கொடுத்து வழி நடத்துபவர்கள் இவரின் பெற்றோர்,இவரின் அக்கா சுஜிதா, சுமாக்கா, செல்வம், உஷாம்மாயி இவர்கள் அனைவரும் ராகுலின் சாதனைகளை நனவாக்க அருமையாக ஒத்துழைக்கும் அன்பான மனிதர்கள்..

நல்ல நண்பர்களை தன் சொத்தாக சேர்த்து வைப்பவன் தான் உண்மையில் அதிர்ஷ்டசாலி..அந்த வகையில் ராகுல் ஆசிர்வதிக்கப் பட்டவர்..இவரின் நண்பர்கள் ,ப்ரபீஷ் ,விவேக் ,தாயுமானவன் ,நகுல், சூரஜ், சுபாஷ், திலீப்குமார்,சரவணப் ப்ரபு, ப்ரஷாந்த், ராகேஷ் இவர்கள் அனைவருமே பால்ய கால தோழர்கள்..ஒன்றாக பள்ளி ஆரம்ப காலம் முதல் கல்லூரி வரை இவருடன் பயின்றவர்கள்..சிறந்த நண்பர்கள் துயரத்திலும்,இன்பத்திலும் குடும்ப அங்கத்தினர்களை விட ஒரு படி மேலாக நண்பனுடன் கை கோர்த்து அவரின் வெற்றிக்கு வழி வகுக்கும் தோள் கொடுக்கும் தோழர்கள் என்றால் அது மிகையாகாது..இந்த இளைஞர்களின் நட்பைக் கண்டு நானே ப்ரமித்து போயிருக்கின்றேன்..

என் மகன் இருந்திருந்தால் இவர் வயதுதான்..என்னை மாம் என்றுதான் அழைப்பார்..காரணம் தெரியவில்லை..எனக்கும் பிடித்து இருக்கிறது..அதனால் எனக்கு இவரின் மீது இனம் புரியாத அன்பும்,அலாதி பாசமும்..


இரண்டு மாதம் முன்பாக என் சிறிய மகளின் பள்ளியில் நடந்த ஒரு விழாவில் ஒரு ஷோலோ டான்ஸ்..அதற்காக என் மகள் ராகுலிடத்தில் பயிற்சிக்காக சென்றாள் நான்கு நாட்கள் மட்டும்..விழாவிற்கு முந்திய தினம் பயிற்சி முடிந்தவுடன் ராகுல் சொன்னார் டான்ஸ்க்கு தேவையான உடை,அணிகலன்கள் எல்லாம் வாங்கிவிட்டு அதனை அணிந்து கொண்டு ஒரு முறை ஆடிப் பார்த்துவிட்டு செல்லலாம் என்று சொன்னார்..அவர் நினைத்த பெர்ஃபெக்‌ஷன் வரும் வரை இரவு மணி பதினொன்னு வரை விடவில்லை..அந்த அளவு தனது பணியில் டெடிகேஷனாக இருப்பார்..இதைத் தவிர கோவையில் சில பள்ளிகளிலும் இவர் நடன ஆசிரியராக பணி புரிகிறார்...ராகுல் டான்ஸ் கம்பெனி ( RDC) நடத்திக்கிட்டு இருக்கார்.

ப்ரீமியர் வித்யா விகாஷ்,சாவ்ரா,லிஸ்யூ,சித்விகாஷ் ஆகிய பள்ளிகளில்..மாடலிங்,குறும்படம் தயாரித்தல் குறும்படத்தில் நடிப்பது இப்படி எல்லாத்துறையிலும் சகலகலா வல்லவன்..மலையாளத்திலும் ஒரு ஆல்பம் செய்துள்ளார்..இவர் நடித்த குறும்படங்கள்,நான் மட்டும் (இயக்கம் சரவணப்ரபு இயக்கம்) கனவில் நினைவாய் (இயக்கம் ப்ரியா லக்‌ஷ்மி) இதை நீங்கள் யூ ட்யூபில் சென்றால பார்க்கலாம்..கெட்டவன்,வர்மன் இப்படி பல படங்கள்...

தற்போது இவர் டைரக்ட் செய்து the origins என்ற குறும்படம் ஜனவரியில் வெளி வரவுள்ளது..பணத்தின் அதிகப்படி தேவையில் மனிதன் எப்படிப் மாறுகிறான்..தேவைக்கு அதிகமாக பணம் சேர்க்கும் வழியில் சென்று மனிதம் தொலைந்துவிட்டது என்பதை மிக அழகாக முப்பது நிமிடத்தில் எடுத்துருக்கிறார்..இவரின் கனவு சினிமாத்துறையில் இடம் பிடிப்பது தான்.. ராகுலின் கனவுகள் மெய்ப்படவும்,சிகரம் தொடவும் வாழ்த்துங்கள்../////

முகநூல் தங்கை லலிதா முரளியின் பகிர்வு இது. இதை என் ப்லாகிலும் வெளியிடவேண்டும் என்பது அவரது ஆசை. என் தங்கையின் மானசீக மகன் ராகுல்  வெற்றி நாயகனாக வலம்வர வாழ்த்துக்கள். :)

4 கருத்துகள்:

 1. ஒரு கலைஞ்ஞனைப் போற்றி வாழ்த்தி அவன் சிறந்த படைப்பாளியாகத்
  திகழ வேண்டும் என்ற உயரிய சிந்தனையில் வெளியிட்டப்பட்ட இப் பகிர்வு கண்டு
  நாமும் மகிழ்ச்சியடைதோம் .எங்களுடைய வாழ்த்துக்களும் இங்கே உரித்தாகட்டும் .
  அன்போடு பகிரப்பட்ட இப் பகிர்வுக்கு உங்களுக்கும் எமது நன்றி கலந்த
  வாழ்த்துக்கள் இங்கே உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
 2. படைப்பாளிக்கு வாழ்த்துகள். அவர் வெற்றியடைய எனது பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 3. நன்றி அம்பாள் அடியாள்.

  நன்றி தனபாலன் சகோ

  நன்றி வெங்கட் :)

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...