எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 அக்டோபர், 2013

டைனிங் டேபிள் மேட்டுகளும் டெலிஃபோன் மேட்டுகளும்.

க்ரோஷா வேலைப்பாடுகள் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்.

உல்லனிலும், க்ரோஷா ஒயர்களிலும், க்ரோஷா நூலிலும்  செய்யப்படும் இந்த வேலைப்பாடுகள் மிகுந்த அழகானவை.இது கட்டையில் ஆணி அடித்து அதில் உல்லன் நூலைச் சுற்றிக் கோர்த்துச் செய்யப்பட்டது.


ரோமில் இருக்கும் என் தோழி தனா முஷ்டாஷியா இந்தக் க்ரோஷா வேலைப்பாடுகள் அமைந்த லேஸ்கள் தைக்கப்பட்ட காலுறை, கவுன் ஆகியவற்றை அணிவார். இஸ்லாமிய மக்களின் தொழுகைத் தொப்பிகளில் இதுபோன்ற டிசைன்கள் வடிவமைக்கப்படுகின்றன.

சிதம்பரத்தில் இருக்கும்போது நான் க்ரோஷாவில் ஒயர் கூடை பின்னக்  கற்றுக்கொண்டேன். இரு லஞ்ச் கூடைகள் பின்னினேன். அதில் ஒன்றில் என் சின்ன மகனின் பேரை ப்ளூ பின்ணணியில் சிவப்பு எழுத்துக்களில் பின்னியது மறக்க முடியாது. சில வருடம் உபயோகப்படுத்தினார்கள். இப்போது ஏதோ ஒரு பொட்டியில் அடைசலாய் இருக்கும். இது மிச்ச நூல்களைக் கொண்டு பின்னியது.

தலைக்குச் சிட்டியாகவும் இதைப் பின்னிக் கொண்டிருப்பார்கள். பூமாலையில் இருந்து எடுத்த உல்லனை வைத்து விதம் விதமாகக் காரைக்குடியில் பின்னுவார்கள்.

நான் அதிகம் டெலிஃபோன் மேட், டைனிங் டேபிள் மேட், சேர் மேட்கள்தான் பின்னி இருக்கிறேன். பிறருக்கும் பரிசளித்திருக்கிறேன்.

உல்லனில் டெலிஃபோன் மேட் பின்னுவது எளிது. ஒரு நாளில் முடித்துவிடலாம். டைனிங் டேபிள் மேட் கூட எளிதுதான்.

தொடர்ந்து க்ரோஷா ஒயரில் பின்னும்போது  கை விரல்கள் காய்த்துப் போகும் வாய்ப்பு உண்டு.  க்ரோஷா நூலில் பின்னுவது ரொம்ப நாள் எடுக்கும் வேலை.

பொதுவாக இந்தப் பின்னல் வேலைகள் உடலில் உஷ்ணத்தை உண்டு செய்யும்.

என் அப்பத்தாகூட அந்த நாட்களில் க்ரோஷா மேட்கள் பின்னி இருக்கிறார். எவ்வளவு அருமையான வேலைப்பாடு. பார்க்கவே பிரமிப்பாக இருந்தது.

பொதுவாக இரண்டு வகை  முடிச்சுகள் மட்டுமே கொண்டு இந்த வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. முள்ளு வாங்கியைப் போன்ற ஊக்கில் லூப் லூப்பாக ஆரம்பித்து தொடர்ந்து நூலை அந்த ஓட்டைகளில் விதம் விதமாக கொடுத்துப் பின்னுவதன் மூலம் நூற்றுக்கணக்கான டிசைன்கள் கிடைக்கின்றன.

அவரவர் கற்பனையைப் பொறுத்து எத்தனை டிசைன்களை வேண்டுமானாலும் உருவாக்கலாம். இதில் வால் ஹேங்கர், நிலைப்படி அலங்காரம், ஹேண்ட் பேக் . ஷோல்டர் பேக் போன்றவற்றையும் உருவாக்கி உள்ளேன். பலருக்கும் கொடுத்திருக்கிறேன். ஆனால் இப்போது கைவசம் இருப்பவை இவைதான்.

மனம் ஒருமைப்பட்டு ஒரு  செயலில் ஈடுபட இந்தக் க்ரோஷா உதவுகிறது. டிவி பார்த்துக் கொண்டோ பேசிக் கொண்டோ கூடப் பின்னலாம்.

முடிச்சுகளில் உருவாகும் டிசைன்களைப் பார்த்து மனம் உற்சாகம் கொள்ளும். டைம் கிடைச்சா ஒரு டிசைனாவது பின்னிப் பாருங்க.

7 கருத்துகள்:

 1. மிகவும் அருமை... வாழ்த்துக்கள் சகோதரி...

  பதிலளிநீக்கு
 2. ஸ்பெஷல் பகிர்வு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

  பதிலளிநீக்கு
 3. சூப்பரா இருக்கு. எங்கம்மா இதில் ஸ்பெஷலிஸ்ட்..

  பதிலளிநீக்கு
 4. நன்றி தனபால் சகோ

  நன்றி அமுதா கிருஷ்ணன்.

  பதிலளிநீக்கு
 5. எனக்கு சொல்லிதாங்கள் சகோதரி,மிகவும் அருமையாக உள்ளது

  பதிலளிநீக்கு
 6. மிகவும் அருமை. எனக்கு சொல்லிதாங்கள்

  பதிலளிநீக்கு
 7. இவையும் சூப்பர் போங்க!!! க்ரோஷியோல ஸ்வெட்டர் அப்புறம் ஒரு ரவுன்ட் பேக் செய்திருக்கேன் காலேஜ் படிக்கும் போது. அப்புறம் இந்த மாதிரி எல்லாம் செய்ததில்லை...ரொம்ப அருமையாகச் செய்திருக்கிறீர்கள் தேனு!!!

  கீதா

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...