சனி, 2 நவம்பர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர். சித்ராசாலமனின் வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா..

கொஞ்சம் வெட்டிப் பேச்சு சித்ராசாலமனை வலைப்பதிவர்கள் யாரும் மறக்கவே முடியாது. என் ப்லாகர் தங்கையான இவரைப் பற்றி சித்ராயணம் என்று என் ப்லாகில் எழுதி இருக்கிறேன்.ஒரு காலத்தில் சூப்பர்மேனை விட அதிகமாகப் பறந்து பறந்து பின்னூட்டமிட்டவர். ஏதோ ஒரு அந்நியநாட்டு சதியால் ப்லாக் பக்கமே ரொம்ப வராம இருக்கார். அவரிடம் நம்ம சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு கேள்வி.// ரொம்ப பளபளன்னு இருக்கீங்களே.உங்க ஹஸ்பெண்ட் என்ன ஃபேஸ்கிரீம் வாங்கித் தரார் ?///

நிச்சயமாக, அந்த தப்பை செய்வதற்கு இன்று வரை அவர் முயன்றது கூட இல்லை. ( கல்யாண வாழ்க்கையில் கணவர் நிம்மதியாக இருப்பது எப்படியின் ரூல் நம்பர் 121 follow செய்கிறார்..

பொதுவாக, மனைவிக்கு பரிசு கொடுக்கும் போது , அவளுக்கு தேவையானதையோ - அவளிடம் இல்லாததையோ - அவளுக்கு பிடித்தமானதையோ தானே பரிசாக வாங்கித் தரணும் .

Face cream வாங்கி கொடுத்தால், என்ன அர்த்தம்?

 - -- உனக்கு இந்த face cream போட வேண்டிய தேவை வந்துடுச்சுன்னு அர்த்தம்.

--- இந்த க்ரீம் அவசியம் உன் முகத்துக்கு தேவைப்படுதுனு அர்த்தம். (இல்லைனா, பாக்க சகிக்கல!)

---- இந்த க்ரீம் தான் உன் முகத்துல அப்பி பிடிக்குதுனு அர்த்தம்.


.......... இப்படி எல்லாம் சொல்ற மாதிரி அர்த்தம் ஆயிடுமே.......

அதுக்குன்னு வம்புக்கு, அப்போ உன்னை வெள்ளாவியில் வச்சு அவர் அவிக்கிறாரானு அடுத்த கேள்வியை கேட்டு வச்சுடாதீங்க. அப்புறம், ப்ளீஸ். ....... நான் அழுதுடுவேன் ........

அவர் எனக்கு எந்த ஃபேஷியல் க்ரீமும், ஃபேஸ் க்ரீமும்  வாங்கிக் கொடுத்ததில்லை.

மற்றபடி எல்லாம் கடவுளோட ப்ளெஸ்ஸிங்ஸ்தான் அக்கா. கடவுள் மேல் கொண்ட விசுவாசத்தினால் நான் வாழ்க்கையில் எதையும் சீரியசா எடுத்துக் கொண்டதேயில்லை. அந்த நம்பிக்கையின் ஜொலிப்பு வேணா  என் முகத்தில் தெரியலாம்.

----- வாவ் ரொம்ப அருமையா சொல்லீட்டீங்க சித்து. மிகச் சரியான கருத்துத்தான். நம்பிக்கைதான் வெளிச்சம். உண்மை. வாழ்க வளமுடன் சித்து அண்ட் சாலமன் :) நன்றி சித்து சாட்டர்டே ஜாலி கார்னரில் உங்க கருத்தைப் பகிர்ந்துகிட்டதுக்கு ..:)


11 கருத்துகள் :

sury Siva சொன்னது…

https://www.youtube.com/watch?v=ufwwcCxpz8E

ஒரு பெண் கருப்பா அல்லது சிவப்பா ( வெளுப்பா ) என்று ஆராய்வதற்கு முன்பே

அவளிடம் ஏதோ ஒன்று வசீகரிக்கிறது என்று மனம் சொல்வதிற்கு காரணம், மூளையில் சுரக்கும் செரோடொனின் தான்.

இந்த செரோடொனின் ப்ள்ஸ் ஆக்சிடோசின் தான் வயசுக்கு வந்த பெண்களையும் ஆண்களையும் படாத பாடு படுத்துகிறது.

அல்டிமேட்டா எல்லாமே ஒரு கெமிஸ்ட்ரி தான்.

நீங்க சொல்ற அந்த கடவுள் அருள் இருக்கும்போது எதற்குமே கவலைப்பட தேவை இல்லை.

நமக்கு வேண்டிய நல்ல துணையை, நல்ல நேரத்தில் அப்பா அம்மாவுக்கு காட்டுவார் அந்தக்கடவுள் என்ற நம்பிக்கை இருந்தால்,
எந்த பேஸ் க்ரீமும் தேவையில்லை.

ஹாப்பி தீபாவளி.

சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.....

Chitra சொன்னது…

பாசம் மிகுந்த அக்காவுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களுக்கும். அக்காவுக்கும் அக்காவின் அன்புக்கும் பாத்திரமான அனைவருக்கும் , எனது இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

KParthasarathi சொன்னது…

உங்கள் பதில் நகைச்சுவையுடனும் யதார்த்தமாகவும் இருக்கிறது.

Manickam sattanathan சொன்னது…

ப்ளாகர் பக்கம் வருவதே பாவம் என்று இருந்தவரை நீண்ட வருடங்களுக்கு பிறகாவது இந்த பதிவின் கையிற்றால் கட்டி இழுத்து வந்த சில (நொடிகளாவது) உங்களின் சாமர்த்தியம் பாராட்டப்படவேண்டும் . :))

Asiya Omar சொன்னது…

வாவ்! சந்தேகத்தை தீர்த்து வைத்த தேனக்காவிற்கு ஒரு ஓ..! அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நம் சித்ரா ‘சித்ரா பெளர்ணமி” அன்று பிறந்தவங்க என்பது பலபேருக்குத்தெரியாததோர் இரகசியம்.

அதனால் மட்டுமே ஜொலிக்கிறாங்க.

இல்லையா சித்ரா?

பிரியமுள்ள கோபு மாமா

பித்தனின் வாக்கு சொன்னது…

ithu ellam illinga nellai alva sapithal vanthathu.

பித்தனின் வாக்கு சொன்னது…

thngai chithra than soloman sir padam inruthan perithaka parkinren thanks to u

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சுப்பு சார்

நன்றி வெங்கட்

நன்றி சித்து

நன்றி பார்த்தசாரதி

நன்றி மாணிக்கம்

நன்றி ஆசியா

நன்றி கோபால் சார்.. அப்பிடியா.. :)

நன்றி பித்தனின் வாக்கு

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...