சனி, 23 நவம்பர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர், ஜீவா நந்தனின் நான் வரைந்த ஓவியமே...


கிட்டத்தட்ட 5 வருடங்களாக என் முகநூல் நண்பர் திரு. ஜீவாநந்தன்.  நகைச்சுவை இவரின் கூடப் பிறந்தது. திரைச்சீலை என்ற இவரது புத்தகத்துக்கு நான் விமர்சனம் எழுதியுள்ளேன்.  

இவரிடம் நம் வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு கேள்வி. 

/////நீங்க ரசிச்சு வரைஞ்ச ஓவியம் எது. ?/// நான் வரைந்த படங்களிலேயே நடிகை மீனாவின் ஓவியம்தான் என்னை மிகவும் படுத்தியது. ஒரு துணிக்கடை விளம்பரத்திற்காக வரைந்தது. வாடிக்கையாளர் தினமும் வருவார். மூக்கு சரியில்லையே என்பார். நானும் அடுத்த நாள் மூக்கை கொஞ்சம் சரி செய்து வைப்பேன். அடுத்த நாள் உதடு...அதுவும் இப்படியே. இப்படி தினமும் ஒரு குறை...

கொஞ்ச நாளில் நான் டச் செய்வதை நிறுத்திவிட்டு. அவர் சொல்வதர்க்கெல்லாம் ஆமாம் போடுவேன். நான் ஒன்றுமே செய்யவில்லை என்பது அவருக்கு தெரியாது. இப்படி ஒரு மாதம் கழித்து அந்த மீனா என் கூடத்தை விட்டு போனாள்.!
 
எனக்கு பிடித்த ஓவியம் என்று ஒன்றும் இல்லை. இனிமேலாவது அதை வரைய வேண்டும்!


கடவுள் உருவங்களை ஒவியமாக வரைவதென்பது எனக்கு சிறிது சிரமமாகவே தோன்றுகிறது. பக்தியோ அல்லது வேறு காரணமோ அல்ல.!!!. நேர்க்கோடுகள் எப்பவுமே கொஞ்சம் வீக்தான். உலகத்துக்கு இந்த ரகசியம் தெரியாது. 

ஈசியாக வரையக்கூடியது மார்டர்ன் பிள்ளையார்தான். !!!

இன்னும் ரசிப்பது நான் வரைந்த ரஜினி ஓவியம். ராஜாத்தி ராஜாவுக்காக. 20 அடிக்கு 10 அடி ஓவியம். ! 

---- ராஜாதி ராஜாவுக்காக வரைஞ்ச ஓவியம் சூப்பர் . நான் உங்க பேஜ் முழுதும் ராஜாத்தி ராஜா, ராஜா ராணின்னு ஏகப்பட்ட ஓவியத்தைத் தேடிப்பார்த்துட்டு கடைசியா அது ராஜாதிராஜான்னு கண்டுபிடிச்சேன் ஜீவா நந்தன். நன்றி உங்க காதல் ஓவியத்துக்கு. :)


6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஓவியங்கள் அருமை... திரு. ஜீவாநந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

sury Siva சொன்னது…

தூரிகை களால் திரையில் வரையும் ஓவியங்கள் ஒரு அழகு தான்.
இருந்தாலும், மனம் கவர்ந்திடும் நாயகன் நாயகி யின் ஓவியம் அதை எண்ணங்களால் சொற்களால் வடிவு தருவது இன்னமும் அழகு.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com

கலாகுமரன் சொன்னது…

பதிவை முகனூலில் பகிர்ந்துள்ளேன் நன்றி

சே. குமார் சொன்னது…

படங்கள் அழகு...
நந்தன் சாருக்கு வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ தொடர்ந்த பின்னூட்டத்துக்கும்.

நன்றி சுப்பு சார் தொடர்ந்த பின்னூட்டத்துக்கும். :)

நன்றி கலாகுமரன் பகிர்ந்தமைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி :)

நன்றி குமார் தொடர்ந்த பின்னூட்டத்துக்கும். :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...