எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ராமலெக்ஷ்மி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராமலெக்ஷ்மி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 4 பிப்ரவரி, 2014
சனி, 19 அக்டோபர், 2013
சாட்டர்டே ஜாலி கார்னர். ராமலெக்ஷ்மி ராஜனின் காமிரா காதலும் பள்ளிக்கூட நட்பும்.

பெண் பதிவர்களில் முக்கியமானவர், புகைப்படப் பதிவுகளுக்காக சிறப்பாக அறியப்பட்டவர் என்னுடைய தோழி ராமலெக்ஷ்மி ராஜன். கவிதை, கதை, கட்டுரைகள்ல அசத்தினாலும் இவரோட புகைப்படங்கள் ஒவ்வொண்ணும் கல்லில் வடித்த சிற்பங்கள் மாதிரி. பார்த்துப் பார்த்துச் செதுக்கி இருப்பார். இவர்கிட்ட நம்ம குண்டக்க மண்டக்க கேள்வி எல்லாம் கேக்கமுடியாது . அதே சமயம் நம்ம டாபிக்கை தொடவும் வேணும். எனவே இப்பிடி ஒரு கேள்வி கேட்டு பதிலை வாங்கினேன். :)
காமிராவை எப்போலேருந்து காதலிக்க ஆரம்பிச்சீங்க.. இது நடக்கும்னு நினைச்சீங்களா..?
வீட்டில பெரியவங்க பலரும் படமெடுப்பதில் ஆர்வமுள்ளவங்களா இருந்ததால இயல்பாவே எனக்கும் அந்த ஆர்வம் வந்திருக்கும்னு நினைக்கிறேன். அவங்கல்லாம் எடுத்த படங்களே எனக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தது. +1 படிக்கும் போது யாஷிகா-D-யில் படமெடுக்க ஆரம்பிச்சேன். 120 ரோல் ஃப்லிமில் 12 படமே எடுக்க முடியும். அதுல ஒவ்வொரு படமும் எடுத்து முடிச்சதும் அடுத்த படம் எடுக்க ரோலை திருப்பணும். ஆரம்பத்துல அதுல தப்பு விட்டே 12-ல 4 கதை கந்தலாயிடும்:)!
செவ்வாய், 19 மார்ச், 2013
ராமலெக்ஷ்மியின் “ங்கா” விமர்சனமும் மகளிர்தினச் செய்தியும்.
“ங்..கா..”
குழந்தையின் முதல் மழலைச் சொல்.
ஒவ்வொரு குழந்தையும் முதன் முறை இதை உச்சரிக்கையில் குடும்பமே குதூகலிக்கிறது. அந்தக் குதூகலம் குழந்தையையும் தொற்றிக் கொள்ள ‘படீர் படீர்’ எனக் காலைப் படுக்கையில் ஓங்கி அடித்துக் கால் தண்டையோ கொலுசோ ’ஜல் ஜல்’ எனப் பக்கவாத்தியம் வாசிக்க, பொக்கை வாய் மலரச் சிரித்து, கண்கள் மினுங்க இன்னும் சத்தமாய் ‘ங்கா.. ங்கா’ எனத் தொடரும் போது அன்னைக்கும், அனைவருக்கும் உலகமே மறந்து போகிறது.
குழந்தையின் முதல் மழலைச் சொல்.
ஒவ்வொரு குழந்தையும் முதன் முறை இதை உச்சரிக்கையில் குடும்பமே குதூகலிக்கிறது. அந்தக் குதூகலம் குழந்தையையும் தொற்றிக் கொள்ள ‘படீர் படீர்’ எனக் காலைப் படுக்கையில் ஓங்கி அடித்துக் கால் தண்டையோ கொலுசோ ’ஜல் ஜல்’ எனப் பக்கவாத்தியம் வாசிக்க, பொக்கை வாய் மலரச் சிரித்து, கண்கள் மினுங்க இன்னும் சத்தமாய் ‘ங்கா.. ங்கா’ எனத் தொடரும் போது அன்னைக்கும், அனைவருக்கும் உலகமே மறந்து போகிறது.
திங்கள், 19 மார்ச், 2012
சாதனை அரசிகள் பற்றிய மிகச் சிறப்பான விமர்சனத்துக்கு நன்றி ராமலெக்ஷ்மி.
தன் வலிமை, அறிவு, திறமை, ஆற்றல் இவற்றை வெளிப்படையாக உலகறிய நீரூபிக்கும் பெண்கள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுகிறார்கள். உழைப்பும் முயற்சியும் சேராமல் வெற்றி எளிதாக வாய்த்திடுவதில்லை. போற்றப்படும் எல்லாப் பெண்களின் வெற்றிக்கும் காரணிகளாக அவை இருப்பதை மறுக்கவே முடியாது. சிலருக்கு சாதகமான சூழல்கள், குடும்பம் மற்றும் நட்புகளின் ஆதரவு, தட்டத் தட்டத் திறக்கும் வாய்ப்புகள் இவற்றால் ஓடும் களம் அதிக மேடு பள்ளங்களற்று அமைகின்றன. சிலருக்கோ முட்களும், கற்களும், தடங்கல்களும் நிறைந்ததாக இருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் புயலின் சீற்றத்துடனும் அக்னியின் வெம்மையுடனும் பேரலைகளின் ஆவேசத்துடனும் விழுங்கப் பிழக்கும் பூமியின் வேட்கையுடனும் பேரிடியின் ஆக்ரோஷத்துடனும் ஐம்பூதங்களின் துணைபெற்றாற் போல எந்தத் திக்கிலிருந்து வருமென்றே தெரியாது எழும் எதிர்ப்புகளைச் சமாளித்துக் கடக்க வேண்டியதாக இருக்கிறது. இத்தகையோருக்கு தன்னம்பிக்கை, உழைப்பு, முயற்சியுடன் கூடுதலாகத் மனோ தைரியமும், தளராத போராட்ட குணமும் தேவையாகின்றன. ஆதிசக்தியாய் விஸ்வரூபமெடுத்து அப்படிப் ‘போராடி ஜெயித்த பெண்கள்’ பதினேழு பேரையே ‘சாதனை அரசிகள்’ ஆக நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் தேனம்மை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



