செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

ராமலெக்ஷ்மி ராஜனின் “அடை மழை. “

ஒரு சிறுகதைத் தொகுப்பு செக்ஸ், கிரைம், திரில்லர், வல்கர் இல்லாமல் சிறப்பாக இருக்க முடியுமா. அட்லீஸ்ட் ஒரு கெட்ட வார்த்தை.. இல்லன்னா காமம் பற்றிய கசா முசா கருத்துக்கள்.. இதெல்லாம் இல்லாம  சிறப்பான மனிதநேயமிக்க சிறுகதைகள் வாசிக்கணும்னா நீங்க அடைமழையை தேர்ந்தெடுக்கலாம்.

நீங்க மட்டுமில்ல உங்க குடும்பம்,  ( குழந்தைகள், அப்பா, அம்மா ) படிக்க நண்பர்களுக்குப் பரிசளிக்க, பெருமையா புத்தக அலமாரியில் அடுக்கி வைத்துக் கொள்ளன்னு இந்தப் புத்தகத்தை நான் பரிந்துரைக்கிறேன்.மொத்தம் 13 சிறுகதைகள். நிறைய கதைகளை நான் வலைத்தளத்திலேயே படித்திருக்கிறேன்.

வசந்தா குழந்தைத் தொழிலாளி பற்றிய கதை .. பொட்டலம் பள்ளியில் குழந்தைகளுக்கு நிகழும் ஒரு எதிர்பாராத அவலம் பற்றியது.

வயலை நேசிப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என உணர்த்திய கதை வயலோடு உறவாடி,

ஈரம் கண்ணைக் கசிய வைத்த கதை. அதே போல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலியும் நிம்மதி இன்மையை உண்டு செய்த கதை. பாசமும், அடைக்கோழியும்  கூட அந்த வகைதான்.

எல்லாவற்றிலும் குழந்தைகள் இருக்கிறார்கள். மையக் கருவாக.. அல்லது இயலாமையின் பங்குதாரிகளாக., கதை கேட்பவர்களாக..

பயணம் திரில்லாகத் தொடங்கி முடிவில் சிரிப்பை வரவழைத்த கதை. 

இந்த உலகம் அழகானது எதிர்கால உலகத்தின் மேல் மனித நேயத்தின் மேல் நம்பிக்கை கொள்ள வைத்த கதை.இதுவும் கடந்து போகுமும் அந்த ரகம்.

எல்லாக் கதைகளும் கிராமம் பற்றியும் வயலும் வாழ்வும் பற்றியும் பேசுகின்றன. நகரத்தில் குடி இருக்க நேர்ந்த போதும் சொந்த ஊர் மண்ணில் நம் ஓவ்வொருவரின் வேரும் புதைந்திருப்பதை உணர வைத்த கதைகள்.

அடை மழையும், அடையாளமும் சிரிப்பும் இதில் அற்புதமான கதைகள். 

அடைமழையில் தன்னைத் தொலைக்காத போலீஸ்காரரும், அடையாளத்தில் தொலைந்த தன் பெயரை உச்சரித்துப் பார்க்கும் மூர்த்தியும், யாரும் தன்னைப் பார்த்தே சிரிக்கின்றார்களோ என்று கருதும் சிங்காரம் தன் சிரிப்பை மீட்டெடுப்பதுமான அற்புதங்கள் நிகழ்கின்றன.

அதிலும் சிரிப்பு மிக நுண்ணிய உணர்வுகளை வரி வரியாகப் படம் பிடித்த கதை. மிகச் சிறப்பான கதையும் கூட. முதல் தடவையில் பெரிதாகத் தோன்றாவிடினும் நம் ஒவ்வொருவரிலும் அந்தச் சிங்காரம் உறைந்திருப்பதைக் காண இயலும். 

பண்ணை வீடு, ஜல் ஜல் எனும் ஜலங்கை ஒலியோடு மாட்டு வண்டி, நெல் வயல், தோட்டம் எல்லாம் மாயக்காரன் தூரிகை போல எளிதில் படம் பிடித்துக் காட்டுகிறார் ராமலெக்ஷ்மி.

எளிய மனிதர்களைப் பற்றி அவர்களின் வாழ்வியல் நெருக்கடிகளை, துயரங்களைப் பற்றி , எதிர் கொள்ள நேர்ந்த  தீர்வுகளைப் பற்றி விவரிப்போடு வந்துள்ளது இந்தத் தொகுப்பு. பேருக்கேனும் ஓரிரு காதல் கதைகள் இருக்கலாம் என்று தேடிப்பார்த்தேன்.. இல்லவே இல்லை.. :)

ஒரு முறை பேசிக் கொண்டிருக்கும்போது , தன்னைச் சூழ்ந்து வாழ்ந்திருந்த மனிதர்களின் அன்றாட நிலைமையைப் பகர்வதும் அதற்கான தீர்வை நோக்கி நகர்வதுமான சிந்தனைகளே தன்னை ஆக்கிரமித்திருந்ததால் இது பற்றி எழுதுவதே தன்னுடைய பெருவிருப்பமாக இருந்ததாகக் குறிப்பிட்டார் ராமலெக்ஷ்மி..

அருமையான தொகுப்பு படித்துப் பாருங்கள்.

அகநாழிகையின் வெளியீடு.

விலை ரூ. 100.

6 கருத்துகள் :

ஸ்ரீராம். சொன்னது…

ஆம்.

ராமலக்ஷ்மி சொன்னது…

அடைமழை நூலுக்கான முதல் விமர்சனத்துக்கும், உங்கள் பார்வையில் ஒவ்வொரு கதையையும் குறித்த அருமையான கருத்துகளுக்கும் மிக்க நன்றி தேனம்மை!! எனது தளத்திலும் விரைவில் பகிர்ந்து கொள்கிறேன் உங்கள் அனுமதியோடு:).

ஸ்ரீராம். சொன்னது…

நான் முதல் கமெண்ட் 'ஆம்' என்று இட்டபோது இந்தப் பதிவில் இவ்வளவு விவரங்கள் இல்லை! இப்போது பதிவில் விவரங்கள் கூடியிருக்கின்றன.

ராமலக்ஷ்மிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

ராமலக்ஷ்மி சொன்னது…

நன்றி ஸ்ரீராம்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஸ்ரீராம்

நன்றி ராமலெக்ஷ்மி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...