புதன், 26 பிப்ரவரி, 2014

நங்கூரம்.


தத்தளிக்கிறது கடல்.
தடுமாறுகிறது படகு.
மெசையாவோ ஆணிகளுக்குள்.


பூக்கும் ரத்தத் துளிர்களைக்
கூந்தலில் துடைத்தபடி மகதலேனா.,
மாசுமறுவற்ற பாசத்தோடு.
 
மூழ்கத் துவங்குகிறது
நிசப்த அலைகளில்
அலையடிக்கும் அறை.,

நங்கூரமாய்ப் பாய்ச்சிக்கிடக்கும்
சிலுவை நோக்கி.


3 கருத்துகள் :

Jeevalingam Kasirajalingam சொன்னது…

மிக்க நன்று
தங்கள் தளத்தை http://tamilsites.doomby.com/ என்ற Directory இல் இணைத்துத் தமிழுக்கு உதவுங்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜீவலிங்கம்..

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...