எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

சாதனை அரசிகள் பற்றி இரத்தினவேல் ஐயா.

வலைப்பதிவராக அறிமுகமான திரு. இரத்தின வேல் ஐயா என்னுடைய கவிதைகளைப் படித்து வாழ்த்துக்கள் சொல்வார்கள். சிறந்ததைப் பகிர்வார்கள்.

என்னுடைய படைப்புக்கள் மட்டுமல்ல. சிறந்த எந்தப் படைப்பைப் பார்த்தாலும் பகிர்வார்கள். அவர்கள் மூலம் பலரையும் நல்ல விஷயங்கள் சென்று சேரும். தண்ணீர் யுத்தம் பற்றி, ப்ளாஸ்டிக் தீமை பற்றி, வெளிநாட்டில் பயிலும் பெண்களின் பாதுகாப்பு பற்றி, ஆன்லைன் கல்வி சேவை பற்றி எல்லாம் பகிர்ந்திருக்கிறார்கள். என்னைப் போல நிறையப் பேரை ஊக்குவித்திருக்கிறார்கள்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் பற்றி அங்கே அருகே  உள்ள மலைக் கோயில்கள் பற்றி எல்லாம் அவர்கள் வலைத்தளத்தில் படித்து அறிந்து கொண்டிருக்கிறேன்.

அவர்களுக்கு என்னுடைய மூன்று நூல்களையும் அனுப்பி வைத்தேன். அவர் அதற்கான விமர்சனங்களை அவ்வப்போது முகநூலில் பகிர்ந்து வந்தார். அதை எடுத்து நான் இங்கெ என்னுடைய வலைத்தளத்தில் பகிர்கிறேன்.


/////நான் படித்த புத்தகம்.

சாதனை அரசிகள் – எழுதியவர் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன்.
வெளியீடு: முத்து சபா பதிப்பகம்
முதல் பதிப்பு: ஜனவரி 2012 – விலை ரூ.50 – பக்கங்கள் 80
விற்பனை உரிமை: டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை.

புத்தகத்தைப் பற்றி:


‘லேடீஸ் ஸ்பெஷல்” இதழில் வந்த கட்டுரைகளை தொகுத்து எழுதியிருக்கிறார்கள். 17 கட்டுரைகளின் தொகுப்பு இது. முகநூலிலும் இந்த கட்டுரைகள் வந்திருக்கின்றன. அற்புதமாக எழுதப் பட்டிருக்கின்றது.

ஆங்கில வார்த்தைகளுக்கு மாற்றாக கூடுமான வரை தமிழ் வார்த்தைகள் பயன்படுத்தியிருக்கலாம். நிறைய செய்திகள் திரும்பத் திரும்ப வருகின்றன. அடுத்த பதிப்பில் தவிர்க்கலாம்.

பெண்கள், ஆண்கள், அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

இந்த புத்தகத்தை எங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் பொது நூலகத்திற்கு அன்பளிப்பாக (திருமதி Thenammai Lakshmanan பெயரில்) கொடுக்கிறேன். அவர்களுக்கு நூலகத்திலிருந்து ஒப்புதல் கடிதம் கிடைக்கும்.

நன்றி நண்பர்களே.


-- மிக்க நன்றி இரத்தினவேல் சார். இனி வரும் பதிப்புக்களில் ஆங்கிலக் கலப்பைத் தவிர்க்கிறேன். கூறியது கூறல் என்னும் தவறையும் திருத்துகிறேன். நன்றி உங்க மதிப்புரைக்கு. வாழ்க வளமுடன். 

என்னுடைய நூல்களை வாங்க.
Aganazhigai book store.
390, Anna Salai,
KTS valagam, 1 st floor,
saidapet ,
Chennai – 15.


By post aganazhigai@gmail.com


5 கருத்துகள்:

 1. நல்ல பல தகவல்களையும், பகிர்வுகளையும் இரத்தினவேல் ஐயாவைப் போல் பகிர்ந்து கொள்வதில், ஐயாவை மிஞ்ச முடியாது சகோதரி...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. திரு.ரத்தினவேல் ஐயா அவர்களின் மிகச் சிறப்பான விமர்சனம்....

  பதிலளிநீக்கு
 3. விமர்சனம் நன்று. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. நன்றி தனபால் சகோ

  நன்றி குமார்

  நன்றி வெங்கட்

  பதிலளிநீக்கு
 5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...