எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

சனி, 8 பிப்ரவரி, 2014

சாட்டர்டே போஸ்ட். திரு.வெற்றிவேல் .தேசியமா.. மாநிலமா..

முகநூல் நண்பர் திரு. வெற்றிவேல் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர். அரசியலில் கூர்நோக்குப் பார்வை உள்ளவர். 

ரஜனி படத்துக்கு சிவாஜி என்று பெயர் வைத்ததில் கோபமடைந்த அதி தீவிர ( நடிகர் திலகம் ) சிவாஜி கணேசன் ரசிகர்.


சௌதியில் வசிக்கும் அவர் இசை அரசியல் பற்றி எழுதி இருக்கிறார்தமிழக அரசியலில் அவரின் ஆதரவு எப்பொழுதுமே யாருக்கு எனத் தெரியும். (நம் வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ) தேசிய அரசியலில் யாரை ஆதரிக்கிறார் என்பதற்காக இந்தக் கேள்வி.

 /// தேசிய அளவுல எந்தக் கட்சியை ஆதரிக்கிறீங்க.. ஏன். . ///
 ஒரே வரில சொல்லிடலாம்.. எப்போதுமே தேசிய கட்சிகளை நான் ஆதரிப்பது கிடையாது.. மாநிலக்கட்சிகளை மட்டுமே ஆதரிப்பேன்..

மாநிலக் கட்சிகள் மைய அரசில் பங்கு பெற வேண்டும் என்பது என் விருப்பம் மட்டுமல்ல.. அது மாநிலத்திற்கு நன்மை பயக்கும் என்பது நிதர்சனமான உண்மை.. 

அதானால் தான் 1988- திமுக பங்கு பெற்று காவிரி நதி நீர் நடுவர் மன்றம் அமைக்க முடிந்தது.. எல்லா மீட்டர் கேஜ் பாதைகளையும் அகலப் பாதையாக மாற்ற அடிக்கல் போடப்பட்டது.. 

2004- ல் இருந்து திமுக இருப்பதால் தான், தமிழகத்திற்கு அதிக பட்ச தொழில் முதலீடு கொண்டு வர முடிந்தது.. 91-96ல்  தவறவிட்ட ஐடி தொழிற்புரட்சியை( பெங்களுரும் ஹைதரபாத்யும் முந்திக் கொண்டன) திமுக 96-ல் வந்து தமிழகத்திலும் கொண்டு வர முடிந்தது.. 

2004 க்குப் பிறகு சாலை வசதி போன்ற அடிப்படைக் கட்டுமானப் பணிகளை எந்த மாநிலத்திலும் இல்லாத மாதிரி கிழக்கும் மேற்கும் நான்கு வழிப்பாதை போட முடிந்தது.. 6 சின்ன துறைமுகங்கள்,2 பெரிய துறைமுகம் வரக்கூடிய சேது சமுத்திர திட்டதிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.. 

கடல்சார் பல்கலைக்கழகம், ஐஐஎம், ஏஐஎமெஸ் போன்ற உயர்தர மருத்துவமனை, தேசிய சட்டப்பள்ளி எல்லாம் தமிழகத்திற்கு திமுக ஆட்சியில் மாநில கட்சி பங்கு பெற்றதால் கொண்டு வர முடிந்த திட்டங்கள்.. 

இது தவிர தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கிக் கொடுக்க முடிந்தமை.. இதெல்லாம் மைய அரசில் மாநில கட்சிகள் பங்கு பெற்ற உண்மையான கூட்டாச்சியில் தான் சாத்தியம்.

-- உங்க பதில் இதுவா இருக்கும் என்றுதான் தோன்றியது. ஆனால் அழகாகப் புள்ளி விவரத்தோடு விளக்கியதுக்கு நன்றி. உண்மைதான் கூட்டு சேர்ந்தால் நல்லதுதான். நிறைய நன்மைகள் கிடைக்கும். நன்றி திரு வெற்றிவேல்.

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...