எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 5 பிப்ரவரி, 2014

அன்ன பட்சி பற்றி புவனேஷ்வரி மணிகண்டன்.

என் வதனப் புத்தகத் தங்கை புவனேஷ்வரி மணிகண்டன்.  என் அன்ன பட்சி கவிதைத் தொகுதி வெளியீடு ஈவண்ட் போட்டவுடன் காலையே வந்து செல்வதாகச் சொன்னவர் மாலையில் எனக்காக வந்தார். முதலில் வந்து கரம்பற்றி வாழ்த்துத் தெரிவித்தார். அவர் அன்று வாங்கிய நூல்களும் அன்னபட்சி பற்றிய அவரது நிலைத்தகவல்களையும்  இங்கே பகிர்வதில் பெருமிதம் கொள்கிறேன். நன்றி புவனா. 



//// காண்டேகரின் யயாதி இரண்டு பாகம்.தி.ஜா.சிறுகதை தொகுப்பு. அன்னபட்சி. சாமானியனின் கதை. மௌன அழுகை. விரல் முனை கடவுள். சொந்த ரயில்காரி. பைத்திய ருசி. இசைக்காத இசைக்குறிப்பு. வாஷிங்டனில் திருமணம். தேவனின் மைதிலி. அனல்காற்று.. தன்வெறியாடல் இதெல்லாம் இந்த வருடம் வாங்கியது////

//// விவசாயம் - நிதர்சனமான இன்றைய நிலத்தின் நிலமையை அருமையா சொல்லி இருக்கீங்க. 


ஆக்கிரமிப்பு - ஒவ்வொரு பெண்ணின் மனதை சொல்வதாக உள்ளது.

முத்துச்சிப்பி - செம.

அறுபடும் பாதை - நெஞ்சை அறுக்கும் நினைவலைகளில் இருந்து தப்பிக்க திரும்பி நடந்தாள் கண்களற்ற பாதையில் - சூப்பர்.

இந்த இரவு - சூப்பர்///

///தேனம்மையின் அன்னபட்சியில் இருந்து
ஆக்கிரமிப்பு
-------------------
காட்டாற்று வெள்ளமாக
கடுங்கோடைஇடியாக ஆட்டுவிக்கிறேன்
அன்பெனும் அதிகாரத்தில்
சுருங்கச் செய்யத் தெரிவதில்லை
எல்லாமே எல்லை மீறி
யாரும் மறு முறை உன்னை
திரும்பி பார்ப்பது கூட பிடிப்பதுஇல்லை
உன் பேச்சுக் கூட
எனக்கு மட்டுமேயான பிரசாதமாய்
யாருக்கும் உண்ணத்தராமல் தடுக்கிறேன்
அன்பின் இம்சையை சகித்துக் கொண்டு
நீ சிந்தும் புன்னகையில்
உயிர்த்துக் கொண்டிருக்கிறேன்
எனக்கான எனக்கு மட்டுமேயான
உன்னைக் காப்பாற்றி
தக்க வைத்துக்கொண்ட திருப்தியில்///


////தேனம்மையின் இன்னொரு கவிதை - நான் என்ற எல்லாம்
----------------------------------------------------------------------------------------
பருவம் தப்பிப் பெய்த மழை போல
என் மேல் நீ விழுந்தாய்
உன்னைத் தேக்கி வைத்திருக்கிறேன்
அணையை மீறும் வெள்ளம் போல்
அலையடிக்கிறது மனது
தளும்புவதெல்லாம் கவிதையாய்
உன் மேல் மனச்சூல் கழட்டி
தேன் போல் வழிந்து
இன்னும் என்னவாகப் போகிறேன்
என்பது ஏதும் அறியாமல்
உன் பின்னே
பட்டாம் பூச்சியாய்சுற்றித் திரிகிறது
நான் என்ற எல்லாமும்///


////நாம் எல்லோருமே மற்றவரிடம் இல்லாத அனைத்தையும் நல்லதாகவே அன்னப்பறவை போல எடுத்துக் கொண்டால் பிரச்சனைகளே இருக்காது இல்லயா? - இந்த நிலையை அடைய நிறையவே மெனக்கெட வேண்டும் என்று தோன்றுகிறது.////

////குழந்தை கை பொம்மையாக
உன் கையில் நான்
////


////தேனம்மையின் இன்னொரு கவிதை -அன்ன பட்சியில் இருந்து
ஒரு வெறுத்தலின் முடிவில்
--------------------------------------------
பட்டியலிட்டுப் பார்க்கிறேன்
உன் அலட்சியத்தை
அகங்காரத்தை ஆணவத்தை
எள்ளலை கோபத்தை
தேவையோ தேவையற்றோ
பூதக்கண்ணாடி கொண்டு விரித்து
வெறுப்பதற்கான எல்லைகளை
வரையறுத்துக் கொள்கிறேன்
நீ கீறியது ஒரு முறை
நான் கிளறிக் கொண்டது பலமுறை
யட்சினியாய் நான் இருக்க
ராட்சனாய்ன் நீயும்
விழுங்கிய பின்னும் மீதம் இருக்கிறோம்
விழுங்காப் படுவதற்காய்
நீ விட்டுச் சென்ற சரங்கள்
பாதியிலேயே தொங்கிக் கொண்டிருக்க
நான் சூட்டும் மாலைகளையும்
நீ ஏற்காமல்
எங்கிருந்தோ வந்து
இரை தேடிக் கூடடையும்
பருவக்காலப் பறவையாய்
பறந்து சென்ற பின்னும்
மிச்சமிருக்கிறது உன் புன்னகையும்
சில பகிர்வுகளும்
எல்‌லா சாத்தியக் கூறுகளையும்
கூறாக்கி விடாமல்
////


எழுத்துக்குப் பரிசே விமர்சனம்தான். இப்போது வெளிவந்திருக்கும் ஒவ்வொரு புத்தகத்தின் பின்னும் ஒரு இதயம் அந்த விமர்சனத்தை எதிர்பார்த்துத் துடித்துக்கொண்டிருக்கும்..
.
.
கண்டுக்காம போறத விட பாராட்டோ திட்டோ சொல்லமாட்டாங்களான்னு காத்துக் கிடக்கும் பல இதயங்கள்..
.
.
.நன்றி புவனா. புத்தகத் திருவிழாவுக்கு முதலில் வந்து கரம் பற்றி வாழ்த்துத் தெரிவித்தமைக்கும் , என் ( அன்ன பட்சி ) கவிதைகளை ஒவ்வொன்றாகப் படித்து அழகாக ஓரிண்டு வார்த்தைகளில் உங்கள் ப்ரொஃபைலில் விமர்சிப்பதற்கும், பகிர்வதற்கும், உங்கள் நேரத்தை எங்களுக்காகவும் அர்ப்பணிப்பதற்கும்.


என்னுடைய நூல்களை வாங்க.
Aganazhigai book store.
390, Anna Salai,
KTS valagam, 1 st floor,
saidapet ,
Chennai – 15.

By post aganazhigai@gmail.com

”அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பைக் கூரியர் மூலம் பெற.

சென்னைக்கு -- புத்தக விலை 80+ கூரியர் சார்ஜ் 20 = 100 ரூபாய்

மற்ற ஊர்களுக்கு - புத்தக விலை 80 + கூரியர் சார்ஜ் 45 = 125 ரூபாய்.http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1795

http://aganazhigaibookstore.com/index.php?route=product%2Fproduct&product_id=1795 — with Thenammai Lakshmanan.


Aganazhgai book store.
390, Anna Salai,
KTS valagam, 1 st floor,
saidapet ,
Chennai – 15.


6 கருத்துகள்:

  1. மிகவும் சந்தோசம் சகோதரி... வாழ்த்துக்கள்...

    // எழுத்துக்குப் பரிசே விமர்சனம்தான்... // இதை விட சிறந்த பரிசு ஏது...?

    புவனேஷ்வரி மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி...

    பதிலளிநீக்கு
  2. பட்டியலிட்டு பார்க்கிறேன்..... அருமை ..தேனாம்மை(அவர்களே) "நீ கீறியது ஒரு முறை
    நான் கிளறிக் கொண்டது பலமுறை " - பல சமயங்களில் இதுதான் உண்மையும் கூட. ஒரு நல்ல கவிதை படித்த மயக்கம்.. தெளிய கொஞ்ச நேரம் பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  3. பட்டியலிட்டு பார்க்கிறேன்..... அருமை ..தேனாம்மை(அவர்களே) "நீ கீறியது ஒரு முறை
    நான் கிளறிக் கொண்டது பலமுறை " - பல சமயங்களில் இதுதான் உண்மையும் கூட. ஒரு நல்ல கவிதை படித்த மயக்கம்.. தெளிய கொஞ்ச நேரம் பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  4. பட்டியலிட்டுப் பார்க்கிறேன் ..படித்தேன்.. அருமை தேனாம்மை அவர்களே..." நீ கீறியது ஒரு முறை நான் கிளறிக் கொண்டது பலமுறை..." எவ்வளவு எதார்த்தமான உண்மை. ஒரு நல்ல கவிதை படித்த மயக்கம்... தெளிய கொஞ்ச நேரமாகும்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி தனபாலன் சகோ

    நன்றி நல்லதம்பி சா

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...