எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புவனேஷ்வரி மணிகண்டன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புவனேஷ்வரி மணிகண்டன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 ஜூன், 2016

இளமதி பத்மாவின் பார்வையில் பெண்பூக்கள்.

ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் இளமதி பத்மா ! அன்பும் அணைப்பும். <3 span="">

////"பெண் பூக்கள்"

பூக்களைத் தொகுத்து கவிதைகள்
ஒவ்வொன்றும் முத்துகள்...

அற்புதமான வார்த்தைகள் கோர்ப்பு

காதல் பாசம் அன்பு நேசம் அத்தனைப்
பரிமாணங்களையும் அழகாய் சொல்ல ஒரு திறமை வேண்டும்...

அது மட்டும் போதுமா என்றால் போதாது...

படிப்பவர்கள் தொய்வில்லாமல் ரசித்து படிக்க வேண்டும்...!

ஆகா என்றோ சபாஷ் என்றோ மனதிற்குள் ஒரு குரல் ஒலிக்க வேண்டும்
எனக்கு ஒலித்தது...!

நான் கவிதைகளின் காதலி ஒரு நல்ல கவிதையை இனம் காணும் போது மனதிற்குள் ஒரு மலர்ச்சி பொங்கும்!

தும்பை பூவைக் கூட விடாமல் கவிதையாக்கிய தேனம்மையை எண்ணி அதிசயிக்கிறேன்...

இவரின் கட்டுரைகளோ கதைகளோ பரிச்சயமில்லை ஆனால் எல்லாவற்றையும் படித்து விடவேண்டும்
என்றொரு வேட்கை வருகிறது !

வாழ்த்துகள் Thenammai Lakshmanan////
 நன்றி இளமதி பத்மா, புவனா, செல்வகுமார். :)

புதன், 5 பிப்ரவரி, 2014

அன்ன பட்சி பற்றி புவனேஷ்வரி மணிகண்டன்.

என் வதனப் புத்தகத் தங்கை புவனேஷ்வரி மணிகண்டன்.  என் அன்ன பட்சி கவிதைத் தொகுதி வெளியீடு ஈவண்ட் போட்டவுடன் காலையே வந்து செல்வதாகச் சொன்னவர் மாலையில் எனக்காக வந்தார். முதலில் வந்து கரம்பற்றி வாழ்த்துத் தெரிவித்தார். அவர் அன்று வாங்கிய நூல்களும் அன்னபட்சி பற்றிய அவரது நிலைத்தகவல்களையும்  இங்கே பகிர்வதில் பெருமிதம் கொள்கிறேன். நன்றி புவனா. 

Related Posts Plugin for WordPress, Blogger...