வியாழன், 8 மார்ச், 2012

யசோதரா..


வசீகரா என்றிருக்க
நிராதரவாய் நீ விட்டுச்சென்ற
யசோதரா நான் ..
நிழலாய், நிலையாமையுடன்.

அமிர்தம் அள்ளிஉண்டு
சலித்ததுனக்கு.
நீ சிதறிச் சென்ற
துளிகளின் மிச்சமெனக்கு


ஞானம் முகிழ்க்க
எனக்கும் உண்டு போதிமரம்.
உடமைகளையும்
உருவுக்குள் உருவான
உயிர்களையும் விட்டோட.

நட்டநடு இரவில்
இற்றது அறுத்து
இந்தரப் பிரஸ்தம் நீங்கி
நீ வானப் பிரஸ்தம் ஏக..

விடிந்தது என் இரவு
விடியாமலேயே,
விழிப்பில்லா நிலையில்
என்னை ஆழ்த்தி
விழிப்புற்று நீ..

கடமையாற்றில்
கையறு நிலையிலிட்ட
உன் மேலான
ஆசையும் பற்றும்
அறுத்துத்தான் என் வாழ்வும்.

அமிர்தகலசம்
கலசம் உடைந்து சிதறுகிறது..
ஆற்றலை எனக்குணர்த்தி..
ஆன்மவிழிப்பு நோக்கி
என் கடமை முடித்த களிப்பில் நானும்..


டிஸ்கி:- மகளிர் தின வாழ்த்துக்கள்..!!!.. இது எதிலும் வெளிவரவில்லை.. என் வலைப்பதிவ வாசகர்களுக்காய் ஸ்பெஷலாக..!


5 கருத்துகள் :

செய்தாலி சொன்னது…

பெஷல் கவிதை அருமை

கவி குயிலுக்கு
இனிய மகளீர் தின வாழ்த்துக்கள்

அமைதிச்சாரல் சொன்னது…

ரொம்ப ரொம்ப அருமையாயிருக்கு தேனக்கா..

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

\\\விடிந்தது என் இரவு
விடியாமலேயே,
விழிப்பில்லா நிலையில்
என்னை ஆழ்த்தி
விழிப்புற்று நீ..\\\

நல்ல கவிதை வாழ்த்துக்கள்!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி செய்தாலி

நன்றி சாந்தி

நன்றி பாண்டியன்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...