வெள்ளி, 23 மார்ச், 2012

இடப்பெயர்ச்சி.

இடப்பெயர்ச்சி..:_
***********************

கூடாரங்கள் காலியாகின்றன.
கொழுப்பு சுமந்த திமிலில்
நீர் ஏற்றிக் கொள்கிறது
அலுப்போடு ஒட்டகம்

ஆணிகள் பிடுங்கப்பட்டு
சுருட்டப்படும் டார்பாலின்கள்
குடைப்பாய் அமைப்பில்
குறுக்கில் ஏற்றப்பட்டு.


கோப்பைகளும் வட்டில்களும்
சலசலத்து முதுகில் வழிய
மணலும் சூரியனும் எதிர்த்து
கரையேற மிதக்கிறது ஒட்டகம்

கண் தொங்கும் சதைகள்
மணல் காற்றை தடுக்க
வெப்ப நினைவில் உருளும்
கோள விழியசைத்து

இடம் பெயர்த்து செல்கையில்
சிதைந்து புதைந்த கோப்பையொன்றில்
தலை காட்டிச் சிரிக்கிறது..
எப்படி நகர்வதென்றறியாத
மெலிதான பச்சைப் புல் ஒன்று.

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 மே நான்காம் வார உயிரோசையில் வெளியானது.


10 கருத்துகள் :

raji சொன்னது…

வாழ்க்கையில் சில விஷயங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் இடப்பெயர்ச்சி ஏற்படுவதில்லை.

சே.குமார் சொன்னது…

கவிதை அருமை...
வாழ்த்துக்கள் அக்கா.

அம்பலத்தார் சொன்னது…

உணர்வுகளை தட்டி எழுப்பும் அருமையான வார்த்தைகளில் நல்ல கவிதை ஒன்று தந்திருக்கிறிங்க.

அம்பலத்தார் சொன்னது…

மூன்று தசாப்தங்களாக போரின் வலிகளை சுமந்த தாயகத்தில் வாழும் அந்த மக்களுக்குத்தான் இடப்பெயர்வினாலும் இடம்பெயரமுடியாமலும் அனுபவித்த வலிகள் வேதனைகள் தெரியும். அவர்களுக்கே இந்தக்கவிதையை காணிக்கையாக செலுத்திவிடலாம்

கீதமஞ்சரி சொன்னது…

நகரும் தேவையற்றுக் கருகிப்போகலாம் சிறுபுல்,
நீராகாரம் விலக்கப்பட்டுவிட்ட நாளின் இராப்பொழுதுக்குள்.


ஏதேதோ எண்ணவோட்டங்கள்,
கவிதைக்குள் தலைகாட்டுகிறது,
அப்பசியப் புல்லின் இருப்பினைப் போல!

பாராட்டுகள் தோழி.

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

//இடம் பெயர்த்து செல்கையில்
சிதைந்து புதைந்த கோப்பையொன்றில்
தலை காட்டிச் சிரிக்கிறது..
எப்படி நகர்வதென்றறியாத
மெலிதான பச்சைப் புல் ஒன்று.///

கடைசி வரிகள் கவிதையை சிறப்பிக்கிற‌து

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ராஜி

நன்றி குமார்

நன்றி அம்பலத்தார்

நன்றி கீதமஞ்சரி

நன்றி பாண்டியன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

மாதேவி சொன்னது…

வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மாதேவி.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...