எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 2 மார்ச், 2012

நன்றி கோமதி அரசு, மை,பாரதிராஜா, வேடியப்பன். (சாதனை அரசிகள் விமர்சனம்.)

கோமதி அரசு.. வலைப்பதிவர். ( வலைச்சரத்தில்)

////’சும்மா’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் திருமதி .தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் ’போராடி ஜெயித்த கதைகள்’ என்று எழுதி இருக்கிறார்.

அதில் தலைமை ஆசிரியர் திருமதி. லூர்துராணி அவர்களைப் பற்றி எழுதி இருக்கிறார். ஹீமோக்ளோபின் அளவு குறைவுக்காக ஸ்டிராய்டின் தொடர்ந்து சாப்பிட்டதால் அவரிடம் அது ஏற்படுத்திய பக்க விளைவுகள் -அதை போக்கி சாதனைகளச் சாதித்து கொண்டு இருப்பது- பற்றி எல்லாம் எழுதி இருக்கிறார்.

//டயாபட்டீஸ்., ரத்த அழுத்தம்., காடராக்ட்., கிட்னியிலும் நெஃப்ரான்கள் வீக், 2000 ஆம் வருடத்தில் கான்சர் வந்து மார்பக நீக்கம்., கீமோதெரஃபி., மற்றும் ரேடியேஷன் 55 நாட்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.


வாழ்நாள் பூரா இது எல்லாவற்றுக்கும் தனித்தனி மாத்திரை சாப்பிட வேண்டும். இவை எல்லாம் சமாளித்து இவர் பள்ளிக்கு பங்சுவலாக காலை 8 3/4 க்கு வந்தாரென்றால் மாலை 4 மணிக்கு பள்ளி பூட்டியபின்தான் வீடு செல்வார்.இதுவரை ஆஸ்பத்ரியில் படுத்திருந்த நாள் தவிர லீவே எடுத்ததில்லை. பிள்ளைகளுக்கு மெட்ரிக்குலேஷன் கல்விக்கு இணையாக இங்கும் கல்வி அளிக்கப்படுவதாக சொன்னார் //


திருமதி.லூர்துராணி அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துவோம்.///


வாழ்வில் எல்லா சுவைகளும் அளவோடு இருந்தால் தான் மகிழ்ச்சி.
******************************************************************

மை. பாரதிராஜா. ( சூரியக் கதிர், இவள் புதியவள் எடிட்டர்.)

தேனம்மை லெட்சுமணனின் எழுத்துக்களில் எப்போதும் வசீகரமும் நகைச்சுவையும் மிளிரும். இந்த சாதனை அரசிகளில் கொஞ்சம் கூடுதலாக உழைப்பும் தன்னம்பிக்கையும் தகதகக்கிறது.

தேனம்மை என்றால் உழைப்பு. இவள் புதியவள் இதழுக்கு ஒரு வி.ஐ.பி. பேட்டி வேண்டும்.. என்று கேட்டால் கொஞ்சமும் பிரமிக்காமல், அதெல்லாம் முடியுமாவென கேட்காமல், கொடுத்த வொர்க்கை டேட் லைன் வரை காத்திருக்காமல், முன்பே முடித்துக்கொடுத்துவிட்டு அடுத்தடுத்த வேலையை கேட்டு வாங்குவார். புதிதாக எழுத்துத் துறைக்கு வருபவர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய வித்தைகளில் இதுவும் ஒன்று.

போராடி ஜெயித்த பெண்களை இங்கே சொல்லும், தேனம்மை கூட ஒரு சாதனை அரசிதான்! தேனம்மை தொடர்ந்து நிறைய நூல்கள் கொண்டுவரவேண்டும் என்பதே என் விருப்பம்! வாழ்த்துக்கள்.

அன்புடன்
மை.பாரதிராஜா
இணை -ஆசிரியர்
சூரியகதிர் - இவள் புதியவள்

**************************************************************************


வேடியப்பன். ( டிஸ்கவரி புத்தக நிலைய உரிமையாளர்.)
Product Description

வெற்றிக்கதைகள் படிப்பது எப்போதுமே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாகத்தான் இருக்கும். சாதித்த மனிதர்களின் வெற்றியின் பின்னணியில் இருந்த இடர்களைப் படிக்கும்போது அந்த உழைப்பின் மேன்மை உரைக்கும் செய்திகள் ஏராளம்!

அந்த வகையில் ‘நமது பதிவரும்..பிரபல கவிஞர், எழுத்தாளர் என்று அறியப்படுபவருமான தேனம்மை லட்சுமணன் அவர்கள் எழுதி சாதனை அரசிகள்’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் புத்தகம் சொல்லும் சாதனை மனிதர்கள் உண்மையிலேயே என்னை பிரமிக்க வைத்துவிட்டார்கள்.

மொத்தம் பதினேழு பெண்மணிகள். வெவ்வேறு துறை சார்ந்தவர்கள். ஆனால், அவர்கள் அனைவரது வெற்றிக்கும் பின்னால் இருந்த ஒரே ஒற்றுமை, -உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை.! மேலும் அவர்கள் ஜப்பானிலோ, ஜமைக்காவிலோ இல்லை.. நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். நம் நகரத்தில்..நம் மாநிலத்தில்… நம்முடன் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஒரு உண்மையும், நெருக்கமும் உணரமுடிகிறது..///

நன்றி கோமதி அரசு .. !

நன்றி மை. பாரதி ராஜா... !!

நன்றி வேடியப்பன்..!!!


5 கருத்துகள்:

 1. போராடி ஜெயித்த பெண்களை இங்கே சொல்லும், தேனம்மை கூட ஒரு சாதனை அரசிதான்! தேனம்மை தொடர்ந்து நிறைய நூல்கள் கொண்டுவரவேண்டும் என்பதே என் விருப்பம்! வாழ்த்துக்கள்.//


  மை. பாரதிராஜா அவர்கள் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.

  நிறைய நூல்கள் கொண்டு வாருங்கள் தேனம்மை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. தொடரும், தொடரவிருக்கும் வெற்றிகளுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் தேனக்கா....

  பதிலளிநீக்கு
 3. //போராடி ஜெயித்த பெண்களை இங்கே சொல்லும், தேனம்மை கூட ஒரு சாதனை அரசிதான்! தேனம்மை தொடர்ந்து நிறைய நூல்கள் கொண்டுவரவேண்டும் என்பதே என் விருப்பம்! //

  எங்க விருப்பமும் இதுவேதான்.. :-)

  பதிலளிநீக்கு
 4. பகிர்வுக்கு நன்றி தேனக்கா.தொடர்ந்து சாதனை படைக்க என் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. நன்றி கோமதி

  நன்றி கணேஷ்

  நன்றி சாந்தி

  நன்றி ஆசியா

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...