எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 21 மார்ச், 2012

சூரியச் சிறகுதிர்ந்து.. உயிரோசையில்..

சூரியச் சிறகுதிர்ந்து..
********************************

கலையும் மேகங்களாய்
நகர்ந்து கொண்டேயிருக்கின்றன
பழக்கங்களும் உறவுகளும்.

நிமிடத்துக்கு நிமிடம்
மாறும் மனநிலையில்
கலையவும் உருவாகவும்..


கனத்த மேகங்கள்
உருண்டு திரண்டு முரள்வது
பேரிடியாய் இடம்புரட்டி

முணுமுணுப்போடும்
கூதலோடும் கலையாமல்
இருளோடியபடி பிடிவாத்துடன்.

கரைந்து இறங்குவதும்
உரைந்து சிதறுவதும்
வரையாத பிரிவின் துயர்.

நகர்வதே வாழ்வானதில்
நகர்ந்து செல்லுதல்
துன்பம் விளைவித்து

நெய்தலும் முல்லையும்
மருதமும் குறிஞ்சியும்
பாலையும் நீரோடி புரையோடி..

ஒவ்வொருநகர்தல் முடிவிலும்
ஒலியெழப்பெய்து
ஒளி குடித்த மயக்கத்தில்

சூரியச்சிறகுதிர்க்கும் வானவில்கள்
யவ்வனத்தை கிளறியபடி
கிழக்கு மேற்கை இணைக்கின்றன.

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 மே இரண்டாம் வார உயிரோசையில் வெளியானது.

டிஸ்கி:- இந்தக் கவிதை மே15,  2011 திண்ணையில் வெளியானது.

9 கருத்துகள்:

 1. சூரியச் சிறகுதிர்க்கும் வானவில்கள்.
  அழகான கற்பனையும்..சொல்லாடலும்.

  பதிலளிநீக்கு
 2. சொல்லப்பட்ட
  ஒவ்வொன்றும்
  மெய்

  சிறப்பான கவிதை தோழி

  பதிலளிநீக்கு
 3. அழகான கவிதை.. அர்த்தமுள்ள வர்ணனைகள்..

  நட்புடன்
  கவிதை காதலன்

  பதிலளிநீக்கு
 4. //நகர்வதே வாழ்வானதில்
  நகர்ந்து செல்லுதல்
  துன்பம் விளைவித்து//

  வார்த்தைகள் உங்களுக்கு வளைகின்றது

  பதிலளிநீக்கு
 5. நன்றி தீபிகா

  நன்றி செய்தாலி

  நன்றி சக்தி

  நன்றி கவிதை காதலன்

  நன்றி ராஜி

  பதிலளிநீக்கு
 6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 7. Kalayum megangal alla urayu
  kalaindha pin theriyum neelam dhaan urayu...

  பதிலளிநீக்கு
 8. Kalayum megam alla urayu
  Kalaindha pin theriyum neelam dhaan urayu...


  Mannithu kollungal akka en ariyuku yettiya siru karuthu

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...