ஞாயிறு, 4 மார்ச், 2012

மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள்.. கைபிடித்து அல்ல..

இந்தக் கதை ஒரு பையனின் பார்வையிலிருந்து..

நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன்.

” அப்பா .. சைக்கிள்..” . ஒன்று வாங்கிக் கொடுத்தார்.

“ஏறி ஓட்டுடா..” ..

” தெரியாதுப்பா ..”.

“முடிஞ்சா ஓட்டு.. இல்லாட்டி விட்டுரு”..

என் தம்பி பின்னாடியே ஓடி வந்து.. “ ஓட்டுடா முடியும்டா..”

இன்றுவரை என் பின்னால் இருக்கும் உந்துசக்தி அவன்தான்.************************************************************

பத்தாவது படிக்கும்போது கைனடிக் ஹோண்டாவில் ( இன்றுவரை சத்தியமாக என்ன நடந்தது என்று தெரியாது) மூஞ்சி மொகரை எல்லாம் பெயர வேண்டியது, ஆண்டவன் அருளால் புருவத்திற்கு அருகில் மட்டும் காயம்...

ஆனால் பெரிய ஆக்ஸிடெண்ட் ( உள்காயம்).. அம்மாவின் “ ஐயோ, தம்பி.. என் கண்ணுக் குட்டி” அழுகுரல் மட்டும் கேட்கிறது.

நான்கு நாட்கள் கழித்து.. என் அப்பா..” புது டி வி எஸ் எக்ஸெல் வாங்கி இருக்கேண்டா.. ஓட்டு..”., நான்..” வேண்டாம்பா.. பயமாயிருக்கு..”
“ ஓண்ணுமாகாது .. ஓட்டுடா.. , நான் இருக்கேன்ல..”இதுதான் அப்பா..

காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்.. அப்பா..” பஜாஜ் டிஸ்கவர் பைக் வாங்கி இருக்கேன். .. “ உள்ளுக்குள் உதறல் எடுத்தது.. ஓட்டச் சொல்லி விடுவாரோவென்று...

ஒரு மாதம் கழித்து விடுமுறையில் ஊருக்கு வந்த போது ,” டேய் .. நாளைக்கு க்ரவுண்டுக்கு போகலாம்.. நீ வண்டியை ஓட்டுறே..” வியர்த்துக் கொட்டியது.

அடுத்த நாள்.. செகண்ட் கியர் போடத்தெரியாமல் கமுத்தி அடித்து விழுந்தேன். என் அப்பா..” ஒண்ணுமில்ல.. கத்துக்கலாம்..”

இரண்டே நாளில் கற்றுக் கொண்டேன். அடுத்த நாளே என் அப்பா சொன்ன வார்த்தை.. “ ஆஃபீசிலே கொண்டே விடுடா..” இதுதான் அவர் என்மேல் வைத்திருக்கும் நம்பிக்கை.

எனக்கு எப்போதுமே தெரியும். என் தம்பியிடம் இது பண்ணனும் , இப்படி பண்ணனும் என பயப்படுவார்கள். ஆனால் என்னை என் போக்கிலேயே விடுவார்கள். ஒரு வளரும் பையனை குழந்தையாய் நடத்தாமல், கண்ட்ரோல் செய்யாமல் இருந்தாலே அவன் வளர்ந்தவனாகிறான்.

மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது நியாயம்தான். ஆனால் கூடவே நின்று இப்படிப் பிடி அப்படிப் பிடி என அவன் கையைப் பிடித்துக் கொண்டே இருப்பது அநியாயம்.

இன்றைய இளைஞர்கள் முறுக்கேறிய ரப்பர் பாண்டுகள் போல.. இழுத்துப் பிடிக்க பிடிக்க அடி பலமாக இருக்கும். விட்டுப் பிடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

-------- இப்படிக்கு தேனுவின் மகன் வெங்கட்.


11 கருத்துகள் :

K.T.ILANGO சொன்னது…

நல்ல பகிர்வு....

கணேஷ் சொன்னது…

முதன் முதலாக ஒரு அழகான குட்டிக் கதை உடன் வந்திருக்கும் வெங்கட்டுக்கு நல்வரவும், வாழ்த்துக்களும்!

கீதமஞ்சரி சொன்னது…

முறுக்கேறிய ரப்பர்பேண்டுகள்! என்னவொரு பொருத்தமான உவமை. புரிந்துகொள்ளவேண்டும் பெற்றோர்கள். எனக்கும் இன்று ஒரு புதிய பாடம். நன்றி தோழி.

ராமலக்ஷ்மி சொன்னது…

மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கணுமா?

தேனுவின் மகன் வெங்கட் அழகாய் விளக்கியிருக்கிறார்:)!

அமைதிச்சாரல் சொன்னது…

பதினாறடி பாய்ஞ்சுருக்கும் குட்டி எழுதிய குட்டிக்கதை நல்லாவேயிருக்கு :-))

Jaleela Kamal சொன்னது…

தேனக்காவின் தேனான மகனுக்கு வாழ்த்துக்கள்

ஹுஸைனம்மா சொன்னது…

//இளைஞர்கள் முறுக்கேறிய ரப்பர் பாண்டுகள் போல//

அழகான உதாரணம்!! இன்றைய இளைஞர்களை, பட்டம் போல பறக்கவும் விட்டு, அதே சமயம் நூல் நம் கையில் இருப்பதுபோலும் பார்த்துக் கொள்ள வேண்டும் போல!!

Asiya Omar சொன்னது…

தேனக்கா மகனின் பகிர்வு மிக அருமை.வாழ்த்துக்கள்.

udayappan சொன்னது…

excellent story,every parent should follow this.give leverage to the child to go along the flow at the same time hold the strings.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி இளங்கோ

நன்றி கணேஷ்

நன்றி கீத மஞ்சரி

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி சாந்தி

நன்றி ஜலீலா

நன்றி ஹுசைனம்மா

நன்றி ஆசியா

நன்றி உடையப்பன்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...