எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 27 மார்ச், 2012

இன்று போய்..

இன்று போய்:-
**********************

நீ நேரில் வந்து
போரிடும்போதெல்லாம்
உன் சரிபாதி வலிமையை
அபகரித்துக் கொள்கிறேன்.

ஹீனமான குரலுடன் நீ
மறைமுகத் தாக்குதல்
தொடுக்கிறாய்.


உனக்கானது
அபகரிக்கப்பட்டதென்றும்
அது ஒரு போதும் இனி
உன்னுடையதாக
ஆகாதென்றும் உணர்கிறாய்

திரும்பி வராத ஒரு அன்புக்காக
உன் போர் நெறிமுறைகள்
தாறுமாறாகின்றன்.
உன்னையே தாக்கிக் கொள்ளுமளவு.

உத்தராயணம் வரை
அம்பில் கிடக்கிறது
அரைகுறையாய் நம் அன்பு.

தாக்குதல்களை நிறுத்தி நீ
பின்வாங்கி வேறொரு இடம்
செல்லத் தலைப்படுகிறாய்

இணையும் எதிரியும் இல்லா
தனிமையில் தோல்வியுற்றுத்
திரும்புகிறேன்
என் அகலாத ஆணவத்தோடு..

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 ஜூன் இரண்டாம் வார உயிரோசையில் வெளிவந்தது.


6 கருத்துகள்:

 1. ம்ம்ம் ....
  நல்ல வரிகள்
  அருமையான கவிதை கவிக்குயிலே

  பதிலளிநீக்கு
 2. அகலாத ஆணவத்தோடு..

  இன்று போய் நாளையும் தொடரும் போர் !

  பதிலளிநீக்கு
 3. அன்பு...

  கவிதை பிடிச்சிருக்கு

  பதிலளிநீக்கு
 4. நன்றி ஆசியா

  நன்றி செய்தாலி

  நன்றி ராஜி

  நன்றி ஆர் ஆர் ஆர்

  நன்றி மனசாட்சி

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...