புதன், 14 மார்ச், 2012

வாக்கு நீளம். உயிரோசையில்..

ஆழக்கற்கள் புரட்டுவதில்லை
புரளுவதில்லை..
வார்த்தை நதியை
வருடியபடி இருக்கின்றன..
கால் நனைப்பவரைக்
குளிர்வித்தபடி..

நெகிழும் கற்கள்
கரை ஓரமெங்கும்.
நகர்ந்து உதிரும்.
மிதிப்பவர் பொறுத்து..


நதியின் ஓட்டத்தில்
உருண்டு ஆங்காங்கே
வறளும் தரைதட்டி நிற்கும்
பாசம் பிடித்தபடி..

பெய்து தீர்க்கும் அருவிகள்
பெரும்பாறைகளையும்
குகைகளாய்க்
குடைகின்றன..
கடும் கற்களையும்
கூறாய் வெட்டி
கூழாங்கற்களாக்குகின்றன..

குடைவரை குகைக்குள்
சிக்கி உருளும் உடல்களாய்
சில சிக்கிப் போன
வார்த்தைகளும்..
வெளியேறத் தவித்து
உருண்டு கொண்டே..

டிஸ்கி:-இந்தக் கவிதை ஏப்ரல் 2011 உயிரோசையில் வெளிவந்தது.

3 கருத்துகள் :

விச்சு சொன்னது…

வார்த்தைகளும் இப்படித்தான் பாறைகளிலும் பளிங்கிலும் உருண்டபடி ஓடுகின்றன.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி விச்சு

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...