எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 மார்ச், 2012

காலசர்ப்ப தோஷம்

காலசர்ப்ப தோஷம்..:-
***********************************
நல்ல நட்சத்திரக்காரர்
நீங்கள் என்று
புகழப்படுகிறீர்கள்.

இது இதற்கு உகந்தது என்று
ஒரு சுபயோகக்காரனாகப்
பிறப்பித்திருக்கிறது அது உங்களை..


போர்வாளாய்ப் போரிடத்
தயாராயிருக்கும் போதெல்லாம்
மழுங்கடிக்கப்படுகிறீர்கள்.
நீங்கள் ஷத்ரியனல்லவென்று.

வசியமும்., வைசியமும்
செய்யத் தெரியவில்லை
உங்களுக்கு ..வாய்ப்பூட்டும் கூட.

யோகம் கரணம்., சூத்திரம் நீக்கி
ராஜயோகம் என நினைக்க
விபரீத யோகமாய் இருக்கிறது.

நாலு வண்ணத்தில் அடங்கி
அட்டவணையில் சேராமல் போகிறீர்கள்.
சலுகைச் சால்வை கிடைக்காமல்.

சகடயோகம் சடசடவென இறங்க
கால சர்ப்பம் தீண்டித் தோஷமாக்க
பாம்புக்கடியின் விஷப்பல்பட்டு
பரமபதத்திலிருந்து இறங்குகிறீர்கள்.

 நீங்கள் இறங்கிவந்த இடத்திலிருந்து
உங்கள் மகனோ பேரனோ திரும்ப
நடக்கத் துவங்குகிறான், திரும்ப
பாம்புக்கடிபட்டு இறங்க..

 டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 ஜூன் நான்காம் வார உயிரோசையில் வெளிவந்தது.


6 கருத்துகள்:

 1. (: ம்ம்ம் கவித கலக்கல்
  ஆனால் மெய்யான வரிகள் கவிதாயினி

  பதிலளிநீக்கு
 2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 3. எத்தனை சர்ப்பங்கள்
  எத்தனை தலைமுறையாய்
  தீண்டினாலும்
  முயற்சியாளர்கள் தோற்பதில்லை.....
  எத்தனை ஏணிகள்
  எப்படி தூக்கி விட்டாலும்
  சோம்பேறிகள்
  வெல்வதில்லை......

  பதிலளிநீக்கு
 4. நன்றி புதுகை செல்வா

  நன்றி புதுகைத் தென்றல்

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...