செவ்வாய், 8 மே, 2012

நம்பர் ஒன்..

நம்பர் ஒன்...:-
**************
பெட்டிகள் முடிவு செய்கின்றன..
நம்பர்களை..
பெட்டிங்குகள் தீர்மானிக்கின்றன.
காமிராக்களின் ஃப்ளாஷ்களில்
ஷாம்பெய்ன் திறப்பவரை..

சேணங்கள் மாட்டி
திப்புவின் காலத்தில்
போரிட்டவை இன்று
நாட்டியமும்., ஜட்காவும்
மூக்கணாங்கயிற்றில் மாட்டி.


சந்தையில் சுழி பல்பிடித்து
தேர்ந்து வாங்கியது
சேணம் தகர்த்து
சூறாவளிப் பாய்ச்சலில்
பணக் கொள்ளு நோக்கி..

ஆறு அமர ஆடு.,
நாலு ..நின்று ஆடு
ரெயின் ரெயின் கோ அவே
ரன் ரன் கமான்..கமான்..
அதிகப்படி பந்தயத்தில்..

விளம்பரங்களுக்காய் ஆடி
காய்த்துக் காயம்பட்டு
பாய்ச்சல் ஒடுங்கும்போது
பக்கத்துப் பலகைகளில்
தாய்தேசம் நம்பர் ஒன் ஊழல்களில்..

டிஸ்கி:- இந்தக் கவிதை ஆகஸ்ட் 15, 2011 உயிரோசையில் வெளிவந்தது


7 கருத்துகள் :

வரலாற்று சுவடுகள் சொன்னது…

யோசிக்க வைக்கும் அழகிய கவிதை ..!

மனசாட்சி™ சொன்னது…

'சும்மா, சொல்லகூடாது...
நம்பர் ஒன் தான்

செய்தாலி சொன்னது…

ரெம்ப சரியா சொன்னீர்கள் கவிதாயினி

கீதமஞ்சரி சொன்னது…

ஆட்டுவிக்கப்படும் ஆட்டக்குதிரைகளுக்கு ஊட்டப்படுகிறது பணக்கொள்ளு. சவாரி செய்கின்றன முதலைகள். கடமைகளை மறந்து கைதட்டிக் களிக்கின்றன சாமானிய விசிறிகள். அருமையான கருவும் கவியும். பாராட்டுகள்.

dhanalakshmi சொன்னது…

அவலங்களை அழகாகவும் சொல்லியிருக்கீங்க....

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வரலாற்று சுவடுகள்

நன்றி மனசாட்சி

நன்றி செய்தாலி

நன்றி கீதமஞ்சரி

நன்றி தனலெக்ஷ்மி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...