சுமந்தவள்:-
************
அவள் கண்கலங்க அமர்ந்திருந்தாள்.
என்னைப் பிரியும் துயரம்.
முன்பே பிரித்திருக்கிறாள்.
பிரித்தபின் மகிழ்ந்திருக்கிறாள்.
எனக்கும் துயரம்தான்
இருந்தும் வலைபின்னிக்
கிடக்கிறது வலியப்
பிரியவேண்டிய வேலை.
வழக்கம்போல அணைத்தாள்.
நெற்றியில் முத்தமிட்டாள்.
முதுகுச் சுமை விட
கனமாய்க் கிடந்தது அவளது அன்பு.
கடக்க நினைக்கிறேன்.
கண்ணீர் பெருகுகிறது.
உப்புமுட்டையாய் இறக்கமுடியவில்லை
வயிற்றில் சுமந்தவளின் அன்பை..
டிஸ்கி:- இந்தக் கவிதை ஆகஸ்ட் 17, 2011 உயிரோசையில் வெளிவந்தது.
************
அவள் கண்கலங்க அமர்ந்திருந்தாள்.
என்னைப் பிரியும் துயரம்.
முன்பே பிரித்திருக்கிறாள்.
பிரித்தபின் மகிழ்ந்திருக்கிறாள்.
எனக்கும் துயரம்தான்
இருந்தும் வலைபின்னிக்
கிடக்கிறது வலியப்
பிரியவேண்டிய வேலை.
வழக்கம்போல அணைத்தாள்.
நெற்றியில் முத்தமிட்டாள்.
முதுகுச் சுமை விட
கனமாய்க் கிடந்தது அவளது அன்பு.
கடக்க நினைக்கிறேன்.
கண்ணீர் பெருகுகிறது.
உப்புமுட்டையாய் இறக்கமுடியவில்லை
வயிற்றில் சுமந்தவளின் அன்பை..
டிஸ்கி:- இந்தக் கவிதை ஆகஸ்ட் 17, 2011 உயிரோசையில் வெளிவந்தது.
அன்புச் சுமை
பதிலளிநீக்குஅருமை கவிதாயினி
//உப்புமுட்டையாய் இறக்கமுடியவில்லை
பதிலளிநீக்குவயிற்றில் சுமந்தவளின் அன்பை..//
அருமை.
வணக்கம் உறவே
பதிலளிநீக்குஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/
ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி
வலையகம்
வலைபின்னிக்
பதிலளிநீக்குகிடக்கிறது வலியப்
பிரியவேண்டிய வேலை.
தன்னைச் "சுமந்தவளை மனதில் சுமந்து சுமையுடன் பயணம்..
அருமை ..!
பதிலளிநீக்குதாய்மை சொல்லும் அழகிய கவிதை.
பதிலளிநீக்குஅருமை அக்கா...
கவிதை வாசிக்கும் பொழுது மனது கனத்தாலும் இதமாக இருக்கிறது.அருமை.தேனக்கா.
பதிலளிநீக்குநன்றி செய்தாலி
பதிலளிநீக்குநன்றி கோபால் சார்
நன்றி வலைஞன்
நன்றி ராஜி
நன்றி வரலாற்று சுவடுகள்
நன்றி குமார்
நன்றி ஆசியா
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!