எனது பத்தொன்பது நூல்கள்

எனது பத்தொன்பது நூல்கள்
எனது பத்தொன்பது நூல்கள்

திங்கள், 14 மே, 2012

பின் சுழற்சி..

பின் சுழற்சி:-
***************
ஆட்டோக்காரர்
வண்டி விட்டிறங்கி
இளநி அருந்தி
களைப்புத்தீர்கிறார்.
இளநி வெட்டியவர்
அரிவாளைப் போட்டுவிட்டு
பக்கத்து மாவுக்கடை
பெஞ்சில் அமர்கிறார்.

மாவுக்கடைக்காரர்
ஆட்கள் இல்லாததால்
மல்லிகைப்பூக்காரரின்
ஸ்டூலில் அமர்கிறார்.
மல்லிகைப்பூக்காரர்
வாடிக்கையாளரற்ற
வெய்யில் நேரத்தில்
ஆட்டோவில் அமர்ந்து
ஹாரனை அமுக்குகிறார்..
நான்கு வெய்யில்கள்
ஒருசேரக் கடக்கும்போது
மருந்துக் கடைக்காரர்
ஆட்டோவில் சரக்கு
ஏற்றுகிறார்..
ஐந்தாவது வெய்யிலைச்
சுமந்தபடி ஆட்டோ
நகரும்போது
இருக்கைகளின்
பின் சுழற்சியில்
கசிந்து வெளியேறுகிறது
வெப்பமும் களைப்பும்.

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011, செப்டம்பர் முதல் வார  உயிரோசையில் வெளிவந்தது.


9 கருத்துகள்:

 1. பின் சுழற்சி சொன்ன விதம் பிடிச்சிருக்குங்க

  பதிலளிநீக்கு
 2. இது நல்லாயிருக்கே!அருமை.கருத்துள்ள கவிதை..

  பதிலளிநீக்கு
 3. வாழ்க்கை ஒரு வட்டம்,..

  அருமையான பின் சுழற்சி..

  பதிலளிநீக்கு
 4. நன்றி ராஜி

  நன்றி மனசாட்சி

  நன்றி வரலாற்று சுவடுகள்

  நன்றி ஆசியா

  நன்றி குமார்

  நன்றி சாந்தி

  பதிலளிநீக்கு
 5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...