எனது பத்தொன்பது நூல்கள்

எனது பத்தொன்பது நூல்கள்
எனது பத்தொன்பது நூல்கள்

திங்கள், 7 மே, 2012

கிடை போடுபவன்...

கிடை போடுபவன்:-
****************************
மொழி புரியாதவனிடம்
சொல்ல வேண்டியதிருக்கிறது
குடும்பத்தைப் பிரிந்து
கிடை போடும் கதையை..

உரிமங்களைப் பதுக்கி
விற்பவனிடம் மட்டும்
விளைந்து கிடக்கிறது
பணமும் ஏராளமாய்.


மொழியறியும் தேவையற்றவன்
விளைவுகளின் தேவைக்காய்
விட்டுக் கொடுக்கிறான்
விளைச்சலுக்கான நிலத்தை.

மண்மணம் வீச கிடைபோட்டவன்
வெய்யிலிலும் மழையிலும்
காய்கிறான், மொழி விளங்காதவனின்
நிலத்தை வளப்படுத்த.

புழுக்கைகளால் நிரம்பிய மண்
செழிப்பாய் விளைந்து
பெருகும் போது சில கிடாய்களை
நரிக்குப் பறிகொடுத்துவிட்டு

சொற்ப ஜீவிதத்தோடு
நகர்கிறான்., கிடைபோடுபவன்
அடுத்த மொழி புரியாதவனின்
நிலத்தை வளப்படுத்த..

--- திரை வாய்ப்புக்காய் கதை சொல்லும் உதவி இயக்குனர்களுக்கு சமர்ப்பணம்.

டிஸ்கி.:- இந்தக் கவிதை ஆகஸ்ட் 8, 2011 உயிரோசையில் வெளிவந்தது. 


6 கருத்துகள்:

 1. வரிகளை
  வாசிக்கையில் சற்று
  நினைவுக்கு வந்தது அந்த பழைய
  கோடம்பாக்கமும்
  சினிமா கனவுகள் சுமந்து
  பித்தர்களாய் திரிந்த திரியும்
  அவர்களை


  இந்த காலத்திலும்
  தொடர்வதை உணர்கையில்
  வலிக்கிறது மனம்  அந்த
  வலியை உணர்ந்தவர்களுக்கே
  வலியின் வன்மம்
  புரியும்

  உண்மையை உரைத்தீர்கள் கவிதாயினி

  பதிலளிநீக்கு
 2. இலைமறை காயாய் உணர்த்திய பொருள் மிக அருமை தேனக்கா..

  பதிலளிநீக்கு
 3. வாசித்தேன்..ரசித்தேன்..அருமை.

  பதிலளிநீக்கு
 4. நன்றி செய்தாலி

  நன்றி வரலாற்று சுவடுகள்

  நன்றி சாந்தி

  நன்றி சந்த்ரு அண்ணா

  பதிலளிநீக்கு
 5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...