எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
BIDAR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
BIDAR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 ஜூலை, 2020

பிதார் - மூன்றடுக்கு அகழியும் இரண்டடுக்குக் கோட்டைச் சுவர்களும்.

ஏழு தர்வாஜாக்கள் அமைந்திருக்கும் பிதார் கோட்டையில் நாம் இப்போது ஏழாவது தர்வாஜாவிலிருந்து திரும்பி முதல் தர்வாஜா வரை வரப்போகிறோம். முன்பே தர்வாஜாக்களைப் (வாயில்கள் )  பார்த்துவிட்டதால் இப்போது அங்கே மினி கோட்டைகளைப் போலக் காட்சி அளிக்கும் களஞ்சியங்களை, கருவூலங்களைப் பார்வையிட்டு வருவோம்.

மண்டூ தர்வாஜா, கல்மகடி தர்வாஜா, டெல்லி தர்வாஜா, கல்யாணி தர்வாஜா, கர்நாடிக் தர்வாஜா எனச் சில வாயில்களுக்குப் பெயர். இவற்றில் நாம் கர்நாடிக் தர்வாஜா பகுதியிலிருந்து திரும்பி மண்டூ தர்வாஜா வரப்போகிறோம் .

இங்கே காபா முறையில் கட்டப்பட்ட மினி கோட்டை ஒன்று காட்சி அளிக்கிறது.

இக்கோட்டையில் மூன்றடுக்கு அகழியும் இரண்டடுக்குக் கோட்டைச் சுவர்களும் நான் கண்ட வித்யாசமான காட்சி.


பாஸ்டியன்ஸ் எனப்படும் மதிற்சுவர்கள். டைனோஸரின் முதுகெலும்பு போல மிக விரிவானவை, அடுக்கடுக்கானவை.

ஞாயிறு, 12 ஜூலை, 2020

விதுரநகரா என்ற மஹமூதாபாத் என்ற பிதார்.

கர்நாடகாவில் அமைந்துள்ள கவின்மிகு கோட்டைகளுள் ஒன்று பிதார். ஹைதையிலிருந்து 130 கிமீ தூரத்திலும் குல்பர்காவிலிருந்து 116 கிமீ தூரத்திலும் உள்ளது. பஹாமனி மன்னர்களின் ஆட்சியில் செழித்துத் தழைத்தோங்கிய கோட்டை இது. சுல்தான் அஹமது வால் என்பவரால் பதினாலாம் நூற்றாண்டில் தக்காணப்பீடபூமியில் கட்டப்பட்டது இக்கோட்டை.  17 ஆம் நூற்றாண்டில் அஹமது ஷா பஹாமனி என்ற அரசர்தான் இதை விரிவுபடுத்தியவர்.

இதுபற்றிப் பல்வேறு இடுகைகள் வெளியிட்டுள்ளேன். 5.5 கிமீ சுற்றளவு உள்ள மதிலால் சூழப்பட்டது இக்கோட்டை.  சிதைந்த கோட்டையே பொக்கிஷம் என்றால் முழுமையான கோட்டை எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் !.

பாரசீக இஸ்லாமியக் கட்டிடக் கலையின் உச்சம் இக்கோட்டை.சோலா கம்பா மாஸ்க், தாரகேஷ் மஹால், முகல் கார்டன், கல்வீணை, ஏழு வாயில்கள், எண்ணற்ற சுரங்கங்கள் , கரேஸ் என்ற நீர்வரத்து முறை கொண்டது இக்கோட்டை. 15 ஆம் 16 ஆம் நூற்றாண்டுகளில் செழித்துக் கிடந்ததுதான் இன்று சிதைந்திருக்கும் இக்கோட்டை.

மஹமூதாபாத் என்று பஹாமனி சுல்தான்களின் காலத்தில் பெயர்பெற்ற இந்நகரம் மகாபாரதத்தில் விதுரர் இங்கே வாழ்ந்ததால் விதுரநகரா எனப் பெயர் பெற்றிருக்கிறது.  ராஜ பீமா மன்னரின் மகளான தமயந்தியும் நளனும் கூட இங்கேதான் சந்தித்துக் கொண்டார்கள் என்று இன்னொரு கதை சொல்கிறது. பித்ரி வேலைப்பாடுகள் என்று சொல்லப்படக்கூடிய உலோகச் சித்திரக் கைவேலைப்பாடுகள் இங்கே ஸ்பெஷல் என்பதால் இந்நகரம் பிதார் என்று அழைக்கப்படுகிறது. !



சனி, 4 ஜூலை, 2020

கல்புராகி புத்தவிஹார், பிதார் அம்ரித்குண்ட். GULBARGA BUDDHA VIHAR, BIDAR AMRITGUNT.

குல்பர்காவின் எல்லா சாலைகளும் மாபெரும் புத்தவிஹாரை நோக்கியே செல்கின்றனவாம். இந்த புத்தவிஹார் 75 ஏக்கர் நிலத்தில் பரந்து விரிந்திருக்கிறது. குல்பர்கா செடாம் செல்லும் ஹைவேஸ் சாலையில் சென்றால் இதை அடையலாம்.

ஒரு பொன்னிறமாலையில் கல்புராகியின் ( குல்பர்கா ) கந்தூர் மாலின் மதுரா இன்ன் ஹோட்டலில் இருந்து இந்த விஹாரைப் பார்க்கப் புறப்பட்டோம். 

மிகப் பிரம்மாண்டமான புத்தவிஹாரத்தின் முன்னால் அம்பேத்காரின் தம்மகிரந்தி யாத்ராவைச் சித்தரிக்கும் சிலைகள் கொள்ளை அழகு. 



புத்த விஹாரை நோக்கி அண்ணல் அம்பேத்கார் செல்வது போலும் அவரைப் பின்பற்றி அவருக்கு நெருக்கமான அநேக தலைவர்கள் புத்தமதத்தைத் தழுவச்செல்வது போலும் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அம்பேத்கார் சிலை செம்பிலும் மற்றையோர் சிலை சிமிண்டிலும் அமைக்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் 14, 1956 இல் நாக்பூரில் நடைபெற்ற தம்ம கிராந்தி யாத்ராவை நினைவூட்ட அமைக்கப்பட்டுள்ளது.

வியாழன், 31 மே, 2018

ஏழு வாயில்களும் எண்ணற்ற சுரங்கங்களும் - பிதார் கோட்டை.

ஏழு தர்வாஜாக்கள் (  ஏழுபக்கம் நுழைவாயில்கள் )  உள்ள கோட்டை பிதார். நுழை வாயில்கள் மட்டுமல்ல. கோட்டையின் உள்ளேயும் ஏகப்பட்ட வாயில்கள். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

கோல்கொண்டா, குல்பர்கா, குவாலியர் கோட்டைகளுடன் பிதாரும் மிகச் சிறந்த கோட்டை ஆனால் மிகச் சிதைந்த கோட்டையும் கூட. பஹாமனியர்கள் ஆட்சிக்காலத்தில் பதினாறு தூண் மசூதிகளும் பல்வகையான மஹால்களும் கொண்ட இக்கோட்டையின் மிச்சத்தையும் எச்சத்தையும் பார்க்கலாம் வாங்க.

வரிசையா ஏழு வாயில்களையும், அங்கங்கே சுரங்கப்பாதைகளையும் பார்த்துக்கிட்டே போகலாம். கோட்டைகளின் காதலி நான்.  கால்வலிக்க நடந்து நடந்து நான் காதலித்த கோட்டைகளில் இதுவும் ஒன்று. :)

குல்பர்க்காவிலிருந்து ஹைதை வரும்வழியில் இருக்கிறது இக்கோட்டை. இதன் ட்ரபீசிய வடிவ மதில்கள் கொள்ளை அழகு. மதிலும் அகழியும் கொண்ட நுழைவாயில் இது.


உள்ளே வந்தாச்சு.

வியாழன், 14 செப்டம்பர், 2017

பிதார் கோட்டை பூந்தோட்டத்தில் ரகம் ரகமாய் பீரங்கிகள்.

பிதார் பற்றி முன்பே நிறைய எழுதி இருக்கிறேன். அங்கே சோலே கம்பா மாஸ்க் எனப்படும் பதினாறு தூண் மசூதியைப் பற்றியும்,  சிற்பங்கள், அக்கம் பக்கமிருக்கும் வழிபாட்டு ஸ்தலங்கள் பற்றியும் எழுதி உள்ளேன். தங்கள் கோட்டையை குண்டு துளைக்காமல் கட்டி இருக்காங்க. ஆனா அங்கே இருந்த இந்த  பீரங்கிகள் எந்தக் காலத்துல உபயோகமாச்சுன்னு தெரியல. 


பிதார் கோட்டையில் கல்வீணை ?!

பஹாமனியர்கள், முகம்மது பின் துக்ளக், பிஜப்பூர் சுல்தான், நிஜாம்கள், முகலாயர்கள் என்று பலர்  கை மாறினாலும் இன்னும் அழகும் எழிலும் மிச்சமிருக்கும் இடம் மொஹமதாபாத் என்று முன்னர் அழைக்கப்பட்ட பிதார் கோட்டை.

பிதார் கோட்டை போட்டோகிராபர்களின் டிலைட் எனலாம். எங்கெங்கு பார்த்தாலும் சிதைந்த இடத்திலும் கொள்ளை அழகு கொட்டிக் கிடைக்குமிடம் பிதார்.

பெர்சியன், துருக்கிய, இஸ்லாமிக் , இந்தியக் கட்டிடக்கலைக்கு கூட்டான எடுத்துக்காட்டு இந்தக் கோட்டை.

இந்தத் தூண் சிற்பத்தில் இந்திய அரசனும் நடனமங்கையரும் . மேலே குதிரை சிங்கம் யாளி யானை ஆகியன அணிவகுக்கின்றன .ரோஜாப்பூக்கள், சிவலிங்கங்கள் நாகங்கள் கூட. பெர்சியன் கலைக்கு  நடுவில் குறுக்கு கோடுகளும், சதுரமும்  பூக்களும்.
கிரானைட் தாமரை இல்லை இது, மினி வாட்டர் ஃபவுண்டன்.

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

குருநானக் ஜிரா சாஹிப்பில் அம்ரித் குண்ட்

பிதாரில் 1948   இல் கட்டப்பட்ட  இந்த குருத்வாரா  சீக்கியர்களின்  சிறந்த வழிபாட்டுத்தலம். இது முதல்  குரு குருநானக்கிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.



Related Posts Plugin for WordPress, Blogger...