எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
CANNON லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
CANNON லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 செப்டம்பர், 2017

பிதார் கோட்டை பூந்தோட்டத்தில் ரகம் ரகமாய் பீரங்கிகள்.

பிதார் பற்றி முன்பே நிறைய எழுதி இருக்கிறேன். அங்கே சோலே கம்பா மாஸ்க் எனப்படும் பதினாறு தூண் மசூதியைப் பற்றியும்,  சிற்பங்கள், அக்கம் பக்கமிருக்கும் வழிபாட்டு ஸ்தலங்கள் பற்றியும் எழுதி உள்ளேன். தங்கள் கோட்டையை குண்டு துளைக்காமல் கட்டி இருக்காங்க. ஆனா அங்கே இருந்த இந்த  பீரங்கிகள் எந்தக் காலத்துல உபயோகமாச்சுன்னு தெரியல. 


சனி, 15 ஜூலை, 2017

டேனிஷ் கோட்டையில் மறைவாய் சில பீரங்கிகள்.



வியாபார நிமித்தமாக வந்து இந்தியாவை ஆக்கிரமித்த கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்களில் டச்சுக்காரர்கள் ப்ரெஞ்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள், ஆங்கிலேயர்கள் இந்த வரிசையில் டேனிஷ்காரர்களுக்கும் ஓரளவு பங்குண்டு.

பதினாறாம் நூற்றாண்டில் தரங்கம்பாடிக்கு வந்த அவர்கள் ( முதன்முதலில் ஈழத்து சாய்ந்தமருதுவில்தான் இறங்கி இருக்கிறார்கள் ) தஞ்சையை ஆண்ட இரகுநாத நாயக்கரிடம் ஒப்பந்தம் பெற்றனர். ஓவ் கிட் என்ற அதிகாரி மூலம் 1620 இல் கட்டப்பட்டதாம் இந்த டேனிஷ் கோட்டை.

இங்கே ஒரு விடுமுறை நாளில் சென்றபோது அங்கேயும் கோட்டைக்கு விடுமுறை தினம் எனத் தெரிந்தது. விடுவோமா நாம சுத்தி சுத்தி  கோட்டையை எடுத்திடமாட்டோமா.



இரண்டு நூற்றாண்டுகள் மட்டுமே அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த இக்கோட்டை வியாபாரச் சரிவு, அலைகளில் மீளமுடியாத கலங்கள், காலனி ஆதிக்கத்தின் அரசியல் நெளிவுசுளிவுகளில் சிக்கித்தவித்தது, மன்னரின் ஆணையாலும் ஆதரவின்மையாலும் வியாபாரத்தை நிறுத்தியது, நட்டத்தில் ஓடிய வியாபாரம் என பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் விற்க நேரிட்டது.


புதன், 5 ஜூலை, 2017

திருமயம் கோட்டையில் இரும்பு பீரங்கிகள்.



திருமயம் கோட்டையில் வெள்ளையனை மிரட்டிய விஷயங்கள் எனக் குறிப்பிட்டிருந்தது இந்த பீரங்கிகளைத்தான். கோட்டையின் உச்சியில் பாஸ்டியன் எனப்படும் ட்ரப்பீசிய/சதுர அமைப்பின் மேல் நிறுவப்பட்டிருக்கும் இவை வார்ப்பிரும்பில் செய்யப்பட்டவை.




சேதுபதி ராஜா காலத்தில் கட்டப்பட்ட கோட்டையில் இது எப்போது நிறுவப்பட்டது எனத் தெரியவில்லை. அதே 17, 18 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டில் முத்தரையர்கள் ஆண்டிருக்கிறார்கள். அப்போது கோட்டையில் எழுப்பப்பட்ட சிவ விஷ்ணு கோயில்களுக்குத் திருப்பணி செய்திருக்கிறார்கள். அதன் பின் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், இராமநாதபுரம் மன்னர், புதுக்கோட்டை மன்னர் ஆகியோரால் ஆளப்பட்டிருக்கிறது இக்கோட்டை. பாளையக்காரர்களின் யுத்தத்தில் பெரும்பங்கு வகித்திருக்கிறது.




இதை ஊமையன் கோட்டை என்றும் சொல்கிறார்கள். மலையின் ஓரிடத்தில் சிறு கருவறையாக செதுக்கப்பட்டு சிவ லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அதே போல் அதன் எதிர்ப்புறம் ஒரு மறைவிடம் இரும்புக் கம்பிகளால் பாதுகாப்பாக பூட்டப்பட்டுள்ளது. இதை கட்டபொம்மன் தஞ்சமடைந்திருந்த இடம் என்றும், ஊமைத்துரை ஒளிந்திருந்த இடம் என்றும் சொல்கிறார்கள். அதனால் இது ஊமையன் கோட்டை எனவும் வழங்கப்படுது. ஒரே இருட்டாக இருக்கிறது. உள்ளே சில தூண்கள் தெரிகின்றன


இதன் அமைப்பைப் பார்க்கும்போது மிகச் சிறப்பான போர்ப் பாசறையாக இது இருந்திருக்கலாமெனத் தோன்றுகிறது. எதை வைத்துச் சொல்கின்றேன் என்றால் இந்த நன்னீர் சேமிப்புக் கிடங்கைப் பார்த்துத்தான். இது பாதுகாப்பாக இரும்புக் கிராதிகளால் அடைக்கப்பட்டுள்ளது. ஓவர் ஹெட் டாங்க் போல இருக்கும் இதிலிருந்து கோட்டைக்குள் தண்ணீர் குழாய்கள்மூலம் கொடுக்கப்பட்டிருக்கலாம். இது குஜராத், ஜெய்ப்பூர்  கோட்டைகள் போல மழைநீர் சேமிக்க அமைக்கப்பட்டிருக்கலாம்.





தெற்கு வாசலில் இரண்டு பீரங்கிகள் என்று சொன்னார்கள். இன்னும் ஐந்தாறு இருப்பதா சொல்றாங்க. ஒண்ணு இங்கே இருக்கு மிச்சதெல்லாம் எங்கே. ( என்னது அதுதான் இதுவா. ஹாஹா அடுத்த முறை அவற்றையும் தேடி எடுத்துப் புகைப்படம் போடுறேன். )




தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் இதில் வெவ்வேறு இடங்களில் சுரங்கப் பாதைகள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சிவன் விஷ்ணு கோயில்களில் இருந்தும் சிவலிங்க சேம்பரிலிருந்தும் இந்த ஊமையன் ஒளிந்திருந்த இடத்திலிருந்தும் கோட்டையை விட்டு வெளியே வெகுதூரம் செல்லக்கூடியதான சுரங்கங்கள் போரின் போது பயன்பாட்டில் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அத்யாவசிய உணவுத் தேவைகளை நிறைவேற்றவும், அவசரம் என்றால் தப்பிச் செல்லவும் உதவி இருக்கலாம்.




எவ்வளவு தேடியும் ஒண்ணுதான் அம்புட்டுச்சு J ஒண்ணு இங்கே இருக்கு மிச்சதெல்லாம் எங்கே.




டிஸ்கி:- இதையும் பாருங்க. 

திருமயம் கோட்டையில் ஒரு உலா. 


Related Posts Plugin for WordPress, Blogger...