பிதார் பற்றி முன்பே நிறைய எழுதி இருக்கிறேன். அங்கே சோலே கம்பா மாஸ்க் எனப்படும் பதினாறு தூண் மசூதியைப் பற்றியும், சிற்பங்கள், அக்கம் பக்கமிருக்கும் வழிபாட்டு ஸ்தலங்கள் பற்றியும் எழுதி உள்ளேன். தங்கள் கோட்டையை குண்டு துளைக்காமல் கட்டி இருக்காங்க. ஆனா அங்கே இருந்த இந்த பீரங்கிகள் எந்தக் காலத்துல உபயோகமாச்சுன்னு தெரியல.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பீரங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பீரங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 14 செப்டம்பர், 2017
சனி, 15 ஜூலை, 2017
டேனிஷ் கோட்டையில் மறைவாய் சில பீரங்கிகள்.
வியாபார நிமித்தமாக
வந்து இந்தியாவை ஆக்கிரமித்த கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்களில் டச்சுக்காரர்கள் ப்ரெஞ்சுக்காரர்கள்,
போர்ச்சுக்கீசியர்கள், ஆங்கிலேயர்கள் இந்த வரிசையில் டேனிஷ்காரர்களுக்கும் ஓரளவு பங்குண்டு.
பதினாறாம் நூற்றாண்டில்
தரங்கம்பாடிக்கு வந்த அவர்கள் ( முதன்முதலில் ஈழத்து சாய்ந்தமருதுவில்தான் இறங்கி இருக்கிறார்கள்
) தஞ்சையை ஆண்ட இரகுநாத நாயக்கரிடம் ஒப்பந்தம் பெற்றனர். ஓவ் கிட் என்ற அதிகாரி மூலம்
1620 இல் கட்டப்பட்டதாம் இந்த டேனிஷ் கோட்டை.
இங்கே ஒரு விடுமுறை
நாளில் சென்றபோது அங்கேயும் கோட்டைக்கு விடுமுறை தினம் எனத் தெரிந்தது. விடுவோமா நாம
சுத்தி சுத்தி கோட்டையை எடுத்திடமாட்டோமா.
இரண்டு நூற்றாண்டுகள்
மட்டுமே அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த இக்கோட்டை வியாபாரச் சரிவு, அலைகளில் மீளமுடியாத
கலங்கள், காலனி ஆதிக்கத்தின் அரசியல் நெளிவுசுளிவுகளில் சிக்கித்தவித்தது, மன்னரின்
ஆணையாலும் ஆதரவின்மையாலும் வியாபாரத்தை நிறுத்தியது, நட்டத்தில் ஓடிய வியாபாரம் என
பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் விற்க நேரிட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)