எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கோட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 ஜூலை, 2020

பிதார் - மூன்றடுக்கு அகழியும் இரண்டடுக்குக் கோட்டைச் சுவர்களும்.

ஏழு தர்வாஜாக்கள் அமைந்திருக்கும் பிதார் கோட்டையில் நாம் இப்போது ஏழாவது தர்வாஜாவிலிருந்து திரும்பி முதல் தர்வாஜா வரை வரப்போகிறோம். முன்பே தர்வாஜாக்களைப் (வாயில்கள் )  பார்த்துவிட்டதால் இப்போது அங்கே மினி கோட்டைகளைப் போலக் காட்சி அளிக்கும் களஞ்சியங்களை, கருவூலங்களைப் பார்வையிட்டு வருவோம்.

மண்டூ தர்வாஜா, கல்மகடி தர்வாஜா, டெல்லி தர்வாஜா, கல்யாணி தர்வாஜா, கர்நாடிக் தர்வாஜா எனச் சில வாயில்களுக்குப் பெயர். இவற்றில் நாம் கர்நாடிக் தர்வாஜா பகுதியிலிருந்து திரும்பி மண்டூ தர்வாஜா வரப்போகிறோம் .

இங்கே காபா முறையில் கட்டப்பட்ட மினி கோட்டை ஒன்று காட்சி அளிக்கிறது.

இக்கோட்டையில் மூன்றடுக்கு அகழியும் இரண்டடுக்குக் கோட்டைச் சுவர்களும் நான் கண்ட வித்யாசமான காட்சி.


பாஸ்டியன்ஸ் எனப்படும் மதிற்சுவர்கள். டைனோஸரின் முதுகெலும்பு போல மிக விரிவானவை, அடுக்கடுக்கானவை.

ஞாயிறு, 12 ஜூலை, 2020

விதுரநகரா என்ற மஹமூதாபாத் என்ற பிதார்.

கர்நாடகாவில் அமைந்துள்ள கவின்மிகு கோட்டைகளுள் ஒன்று பிதார். ஹைதையிலிருந்து 130 கிமீ தூரத்திலும் குல்பர்காவிலிருந்து 116 கிமீ தூரத்திலும் உள்ளது. பஹாமனி மன்னர்களின் ஆட்சியில் செழித்துத் தழைத்தோங்கிய கோட்டை இது. சுல்தான் அஹமது வால் என்பவரால் பதினாலாம் நூற்றாண்டில் தக்காணப்பீடபூமியில் கட்டப்பட்டது இக்கோட்டை.  17 ஆம் நூற்றாண்டில் அஹமது ஷா பஹாமனி என்ற அரசர்தான் இதை விரிவுபடுத்தியவர்.

இதுபற்றிப் பல்வேறு இடுகைகள் வெளியிட்டுள்ளேன். 5.5 கிமீ சுற்றளவு உள்ள மதிலால் சூழப்பட்டது இக்கோட்டை.  சிதைந்த கோட்டையே பொக்கிஷம் என்றால் முழுமையான கோட்டை எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் !.

பாரசீக இஸ்லாமியக் கட்டிடக் கலையின் உச்சம் இக்கோட்டை.சோலா கம்பா மாஸ்க், தாரகேஷ் மஹால், முகல் கார்டன், கல்வீணை, ஏழு வாயில்கள், எண்ணற்ற சுரங்கங்கள் , கரேஸ் என்ற நீர்வரத்து முறை கொண்டது இக்கோட்டை. 15 ஆம் 16 ஆம் நூற்றாண்டுகளில் செழித்துக் கிடந்ததுதான் இன்று சிதைந்திருக்கும் இக்கோட்டை.

மஹமூதாபாத் என்று பஹாமனி சுல்தான்களின் காலத்தில் பெயர்பெற்ற இந்நகரம் மகாபாரதத்தில் விதுரர் இங்கே வாழ்ந்ததால் விதுரநகரா எனப் பெயர் பெற்றிருக்கிறது.  ராஜ பீமா மன்னரின் மகளான தமயந்தியும் நளனும் கூட இங்கேதான் சந்தித்துக் கொண்டார்கள் என்று இன்னொரு கதை சொல்கிறது. பித்ரி வேலைப்பாடுகள் என்று சொல்லப்படக்கூடிய உலோகச் சித்திரக் கைவேலைப்பாடுகள் இங்கே ஸ்பெஷல் என்பதால் இந்நகரம் பிதார் என்று அழைக்கப்படுகிறது. !



Related Posts Plugin for WordPress, Blogger...