எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 ஜூலை, 2020

பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்.

2721. ப்லாகர் டாஷ்போர்ட், ஃபேஸ்புக் ஹோம்பேஜ் இதெல்லாம் மாத்துறேன் மாத்துறேன்னு ஏன் அப்பப்போ குடைச்சல் குடுக்குறாங்க. இருக்கதே நல்லாத்தானே இருக்கு. எழுதவே நேரம் கிடைக்கலியாம். இது வேற இம்சை

2722. நாளும் கிழமையும் நலிந்தோருக்கு இல்லை. விடுமுறை நாளும் வலைப்பதிவருக்கு இல்லை. 

2723. விவசாயக் கடனை தள்ளுபடி செய்யலாம். அது இயற்கைப் பேரிடரினால் மீளமுடியாதது.

கல்விக்கடனைக் கட்டாமல் இருப்பது நியாயமா? பெற்று வளர்த்த பெற்றோரைப் புறக்கணிப்பது போன்றது அது.

வீட்டுக்கடனை வட்டியோடு மூன்று மாதம் தள்ளுபடி செய்யச் சொல்வதும் சரிதானா? அந்தப் பணமே பலர் போட்ட டெபாசிட்டிலிருந்து கடன் கொடுப்பதுதான். அப்போ அவர்களுக்கும் ( ஏற்கனவே 5.5 பர்சண்ட் ஆகக் குறைந்து விட்டது வட்டி ) மூன்று மாதம் வட்டி தர முடியாது என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா ?

வங்கிகளை திவாலாக்கி விடாதீர்கள். ஏற்கனவே நன்றாக சேவை செய்த பல வங்கிகள் மெர்ஜ் ஆகிவிட்டன.

2724. தயங்காமல் வந்தமர்ந்த தட்டாரப் பூச்சி
 


2725. ஒரு பரிசு

2726. எங்கெங்கோ இருந்தும் முகநூலால் ஒன்று சேர்ந்தோம். கொரோனா கெடுபிடிக்காலத்திலும் பிறந்தநாளை மறவாமல் வாழ்த்திய அன்புத் தம்பியர், தங்கையர், சகோ, தோழர், தோழியர் அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகள். மீண்டும் ஒருமுறை உங்கள் பிரியங்களில் நனைந்து எழுந்தேன். பத்ரமா இருங்க. வாழ்த்திய, வாழ்த்த விரும்பிய அனைவருக்கும் பேரன்பு. 🤩😍வாழ்க வளமுடன்.

2727. சோறு முக்கியம் அமைச்சரே

2728. எங்கள் வீட்டு தேவதைகள்2729. பிறந்தநாள் வாழ்த்து. நன்றி மோகன்ராஜ்.

///கவிஞர்களை பிரசவித்த ஜூலைக்கு நன்றி; நா. முத்துகுமார், வைரமுத்து, பழனிபாரதி என, அடுத்தடுத்து வந்த பிறந்த நாள்கள் கொண்டாடித் தீர்க்கப்பட்டன; அந்த வரிசையில் இன்று பிறந்த நாள் காணும் உங்களுக்கும் இதம் தரும் தேன் தமிழ் சொல்லெடுத்து வாழ்த்துகிறேன்
எங்கள் கவியே
வாழிய நீடுழி///

இன்னும் இரு வாழ்த்துக்கள். :)

///சொல்லாகி பொருளாகி உயிராகி ஊனாகி மெய்யாகி துடிப்பாகி விழியாகி வழியாகி திருவாகி நிறையாகி நிரலாகி நீக்கமற மகிழ்ச்சி நிறைத்திருக்கும் தேனம்மை! வாழிய நூறாண்டு!///

///புதிதாய் பிறந்த புத்தாரகையே! பொங்கும் அறிவுப் புனலே! பேரன்புச் சுனையே!
அளந்தறியா அன்பாழியே!  தண்தழலே! தவிப்பே! தகிப்பே! ஆளுமையே!நன்னீரே! நற்றுணையே!கணையே! கவணே! உருவகமே! உவமேயமே!
திருமுகமே! தீரா நதியே! புவியிலுதித்த புதினமே! இன்று போலென்றும் பொலிவாய் செழிப்பாய் களிப்பாய் உவப்பாய் வாழிய! வாழியவே!////

2730. மிக நீண்ட வேனிலைப் போல
நகர்ந்து கொண்டிருக்கிறது கொரோனா
ஒவ்வொரு வீட்டின் வாசலிலும்
விடியற்காலைக் குடுகுடுப்பைக்காரனைப்போல
உலவி நிமித்தம் சொல்கிறது.
ஒதுங்கி ஒளிந்திருந்து அனைவரும்
ஒட்டுக்கேட்டபடி பதுங்கி இருக்கிறார்கள்.
நல்லகாலம் பொறக்குதோ இல்லையோ
கெட்டகாலம் ஒழியட்டுமென
வீட்டுக்குள்ளேயே பித்துப் பிடித்தவர்கள்போல
புதைகுழிப் பேய்களாய்
விழிவிரித்துக் கிடக்கிறார்கள் மனிதர்கள். 
குடுகுடுப்பைச் சத்தம் தேய்ந்து ஓய்ந்தபின்னும்
வாசல்படிகள் திறக்கப்படுவதேயில்லை.
சுயசிறைக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து மிரண்டு
அவநம்பிக்கையோடு தள்ளியே நிற்கிறார்கள்.

2731.நமது மண்வாசம் ஆரம்பித்து ஐந்து ஆண்டுகளாக அதன் வாசகியாகவும் அதில் எழுதும் எழுத்தாளராகவும் இருந்துள்ளேன். மரபு, அறிவியல், பாரம்பர்யம் , மருத்துவம், உடல்நிலை, மனநிலை , உலக நடப்புப் பற்றி நிறைய விஷயங்களை அதில் எழுத வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதன்மூலம் பல்வேறு வாசகியரையும் பெற்றுள்ளேன். 

எனது கட்டுரைகள் கவிதைகள் இடம் பெற்றதுடன் எனது மூன்று நூல்களும் - ”பெண்மொழி, மஞ்சளும் குங்குமமும், பெண் அறம் ”- தானம் அறக்கட்டளை மூலம் நூலாக்கம் பெற்றுப் பல்வேறு மகளிரையும் சென்றடைந்துள்ளன. மஞ்சளும் குங்குமமும் நூலில் வளரிளம் பெண்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டுப் பரிசில்களும் வழங்கி கௌரவித்துள்ளது தானம் அறக்கட்டளை. 

மகளிர்க்குத் தேவையான எல்லா விபரங்களையும் கொடுத்து மகளிர்குழுக்கள் அனைத்தையும் இணைக்கும் ஒற்றைச் சரடாக விளங்கி வருகிறது நமது மண்வாசம் இதழ். தொடர்ந்து மகளிர்க்கான இதழ் ஒன்று ஐந்தாண்டுகளாக இவ்வாறு சேவை புரிந்து வருவது பாராட்டுக்கு உரியது. வாழ்த்துக்கள் தொடரட்டும் நமது மண்வாசத்தின் சேவையும் அதன் மூலம் எங்கள் எழுத்தாக்கமும். 

அன்பும் நன்றியும்
தேனம்மைலெக்ஷ்மணன்.

2732. நாம செய்றத நச்சுன்னு சொல்லி இருக்கார் ஒரு முகநூல் நண்பர். சமீப காலமா ஆண் குழந்தைகள் & கணவரின் மனப்போக்கை அவதானிக்கும்போது நாம் அவங்களுக்கு எவ்வளவு மனநெருக்கடி கொடுத்திருக்கோம்னு புரியுது. இன்னும் காலம் தாழ்ந்திடல. எல்லாத்தையும் அவங்க பக்கம் தள்ளிவிட்டு நாம மட்டும்தான் கரெக்ட்டுங்கிற எண்ணப்போக்கை மாத்திக்குவோம் .

2733. வீடே கோவில்
வீட்டினரே தெய்வம்
இன்னும் ஒரு வருடத்துக்கு
இதுதான் பாதுகாப்புக் கவசம்
ரணம் ருணம் தவிர்க்கத்
தனிமையைக் கற்பிக்கும்
கொரோனா யட்சிணியோ
ராட்சசனோ பேயோ பூதமோ
பிசாசோ கருப்போ தெரியவில்லை.
ஆனால் நேசம் பாசம் நெருக்கமென
இன்னுமுள்ள ஆயுளை
நெகிழும் உறவுகளோடு
வாழ வாய்ப்பளித்திருக்கும்
கலிகால தெய்வம்.

2734. குட்டிப் பிரச்சனை.
வஞ்சிக்கப்பட்ட குழந்தைகள்
வன்முறையாளராகிறார்கள்.
தூண்டுகருவியாகத் தாயோ தந்தையோ
அவர்களைப் பயன்படுத்தும்போது
எப்போதுமே பிரச்சனைகளின்
மைய அச்சாணியாகிறார்கள்
தாய் தந்தைமேல் சாணியைப் பூசவும்
தயங்குவதில்லை அவர்கள்.
தங்களைப் பயன்படுத்திக் கொண்ட அனைவரையும்
ஒரு கட்டத்தில் விசுவரூபமெடுத்துப்
பயப்படுத்தி விடுகிறார்கள்.
பிரச்சனைக் குழந்தை என்பது
பிரச்சனைப் பெற்றோர் பெற்றெடுத்த
குட்டிப் பிரச்சனையே.
இவர்கள் தங்கள் குழந்தைகளுக்கும்
பிரச்சனைகளைத் தவிர வேறொன்றையும்
உயிலெழுதிவிட்டுப் போவதில்லை.
இதையும் விளம்பரமாக்கிப்
புகழ் வெளிச்சத்தில் மின்னிக்
கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.
நாடே உழன்று கொண்டிருக்கும்
நோய்ப் பிரச்சனையையும் மறந்துவிட்டு
இவர்கள் வாழ்க்கைப் பிரச்சனையில்
சுழன்று கொண்டிருக்கிறது

2735. வனிதா.. முரட்டுத்தனமாய்த் தன்னைத் தகவமைத்துக் கொண்ட குழந்தை.

2736. எழுதுறதுக்கு இந்த வசதி போதுமா. ஆவ்வ்வ். தூக்கம்தான் வருது. ;)

2737. ஜெர்மனியிலும் பெங்களூரிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அமைப்பில் கம்பிகள் தாங்கும் பாலங்கள் !!!. இந்தியாவும் கட்டுமானத்துறையில் முன்னேறி இருக்கு 

முதல் படம் கோலோன் சாக்லேட் ஃபாக்டரிக்கு அருகில், ஜெர்மனி.இரண்டாவது படம் டின் ஃபேக்டரியில் இருந்து கே ஆர் புரத்துக்குப் போகும் பாலம். 

2738. ஜேம்ஸ்பாண்ட் படம் இல்லீங்க. டூயிஸ்பர்க்/டுசில்டார்ஃப் ரயில்வே ஸ்டேஷன். 


2739. இது நாலும் எனக்கே எனக்கு 2740. ஃபோரம் மால்டிஸ்கி :-4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.

137. 

3 கருத்துகள்:

 1. தட்டாம் பூச்சி அதான் ஹெலிகாப்டர் பூச்சி படங்களும் ரயில் ட்ராக் படமும் அழகு

  துளசிதரன்

  கீதா

  பதிலளிநீக்கு
 2. அஹா நன்றி டிடி சகோ & துளசி சகோ & கீத்ஸ்.

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...