எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

வியாழன், 11 நவம்பர், 2021

காலங்களைக் கடந்து ஒளிரும் கமலா சினிமாஸ்.

காலங்களைக் கடந்து ஒளிரும் கமலா சினிமாஸ்


 

நெட்ஃப்ளிக்ஸ், அமேஸான் ஆகிய தளங்களில் இன்று சினிமா பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் மக்கள். சினிமா தியேட்டர்கள் எல்லாம் மால் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் தனது தனித்துவத்துடன் மக்கள் சேவை ஆற்றிவரும் கமலா சினிமாஸ் என்னை ஆச்சர்யப்பட வைத்துவிட்டது. டிக்கெட் விலை 95 ரூபாய்தான். உயர்தரமான ஸ்நாக்ஸும் ரீஸனபிள் விலையில். ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கும் அசத்தலாக இருக்கிறது. மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் இருக்கும் அத்தனை நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன்  சும்மா அதிர வைக்கிறது. 

 

ஐம்பது வருடங்களை எட்டப் போகும், மூன்று தலைமுறைகளாகப் பேரோடும் புகழோடும் இருக்கும், சென்னை வடபழனி கமலா சினிமாஸ் அதிபர் மீனாட்சி மைந்தர் திரு வி என் சிடி அவர்களின் மகன், திரு வி என் சிடி வள்ளியப்பன் அவர்களிடம் நமது ஸ்டார்ட் அப் & பிஸினஸின் ஐம்பதாவது இதழுக்காக ஒரு பேட்டி கேட்டிருந்தேன். 42 ஆண்டுகளாக வெளிவரும் தனவணிகன் என்ற இதழின் ஆசிரியராக இருந்தும் எனது வேண்டுகோளை ஏற்று அவர் ஸ்டார்ட் அப் & பிஸினஸ்   இதழுக்காகப் பேட்டி அளித்த மாண்பு  போற்றத் தக்கது. 
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற கொள்கையை ஏற்று கமலா சினிமாஸ் இன்றும் ஒளிர்வதை அவர் வார்த்தைகளிலேயே தருவதில் மகிழ்கிறேன்.  

 


”50வது வருடத்தை எட்டப் போகும் எங்கள் கம்பெனியின் அனுபவங்கள் புதிதாக ‘ஸ்டார்ட் அப்’ தொழில் முனைவோருக்கு ஒரு ஆர்வத்தை உத்வேகத்தை தரலாம்அவர்கள் தொழில் மேம்பாட்டுக்கு அது ஓர் நேர்மறையான அலையை நிச்சயம் ஏற்படுத்தும்.

 

பத்தாண்டுகளுக்கு முன்னர் நவீனப் படுத்தி உலகத்தரம் வாய்ந்த கமலா சினிமாஸை ஸ்கிரீன் 1, ஸ்கிரீன் 2 ஆக உருவாக்கியது ஒருவகையில் ‘ஸ்டார்ட் அப்’ தான்ஆழ்ந்த அனுபவமுள்ள ஆலமரமான கமலா திரையரங்கத்தில் பழமையில் புதுமை புகுத்தியதும் ஒரு காரணமாக இருக்கலாம். 50 வருட கம்பெனி ஸ்டார்ட் அப் 50வது இதழில் வருவது மகிழ்ச்சியான விஷயம்தானே...!

 

எங்கள் தந்தையார் 49 ஆண்டுகளுக்கு முன்னர் வடபழனியில் கமலா திரையரங்கத்தை துவக்கினார்அக்காலத்தில் ‘மல்டிபிள்’ தியேட்டர் கான்சப்ட்’ இல்லாத காலம்ஏசி வசதி கூட இல்லைநிறைய ஃபேன்கள் போட்டு ‘சிங்கிள் ஸ்கிரீனாகத்தான்’ துவக்கினார்வடபழனியில் அருமையான லொகேஷனில் அமைந்ததால் நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறதுஒவ்வொரு காலகட்டத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக ‘இம்ப்ரூவ்’ செய்து வந்தோம்.

 

நான் அமெரிக்காவில் 20 வருடம் ருந்தவன் அங்கே பல சினிமாப் படங்களையும்பல்வேறு தியேட்டர்களையும் பார்த்ததினால் நம்ம தியேட்டரையும் இது போன்று மாற்ற வேண்டும் என்று எண்ணினேன்புதுத் தியேட்டர் எப்படி இருக்க வேண்டும் என்பதில் னக்கு ஒரு கனவு இருந்தது

 


2000
மாவது ஆண்டு என்  தகப்பனாரிடம் தியேட்டரை ”ரெனவேஷன்’ செய்ய வேண்டும்” என்றேன். ‘ரெனவேஷன்’ என்றால் சுவரில் பெயிண்ட் அடித்துப் புதுப்பிப்பது அல்லஃபுல்லாக என்டையர் தியேட்டரையும் மாற்றினால்தான் ‘ரெனவேஷன்’ என்றேன். அதற்கு இப்பொழுது சினிமா செழிப்பமாக இல்லைகொஞ்சம் பொறுத்துப் பண்ணுவோம் என்றார்சரி என்று சில ஆண்டுகள் பொறுத்திருந்தேன்.

 

சினிமாத் தொழில் கொஞ்சம் கொஞ்சமாகச் செழிக்க தொடங்கிய காலம். மறுபடியும் தகப்பனாரிடம் தியேட்டரை ரீபில்ட் பண்ணினால்தான் பிரம்மாண்டமான கமலா தியேட்டர் ன்ற பெயர் காப்பாற்றப்படும்இல்லையெனில் ‘ரியல் எஸ்டேட்’ வேல்யூதான்அதுமட்டுமல்ல நமது அடையாளத்தை இழக்க நேரிடும் என்றேன்.என் தம்பிகளும் என் சிந்தனைக்கு உறுதுணையாக இருந்து செய்வோம் என்றனர்

 

தகப்பனாரும் சரி உனக்கு எல்லாம் தெரியும் என்று என் கனவுக்கும்ஆசைக்கும் பச்சைக் கொடி அசைத்தார்ஆனால் செலவு ‘எஸ்டிமேட்’ பார்த்தவுடன் பயம் வந்ததுஏனென்றால் அன்றைய நிலையில் நல்லமுறையில் திரையரங்கம் நடந்து வந்ததுதியேட்டர்தான் எங்கள் குடும்ப பிஸினஸ். குடும்ப வருமானம், தியேட்டர் ‘ரெனவேஷன்’ பட்ஜெட் எல்லாம் எப்படி சமாளிப்பது என்ற தயக்கமும் வந்ததுதியேட்டர் கட்டி நல்லமுறையில் நடத்திச் செலவுகளைச் சமாளித்து மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை மட்டும் என்னுள் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

 

ரெனவேஷன்’ பணிகளை 100 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற லக்கு நிர்ணயித்துத் துவக்கினேன்ஃப்ரண்ட் காம்பவுண்ட் வால், பார்க்கிங் லாட்கேபிடேரியாஇன்டீரியர் ஆடிட்டோரியம்ரூப் சைடு சுவர்பாத்ரூம்பேக் வால்பேக் காம்பவுண்ட் வால்பழை ஃபுளோரிங் மொசைக் மாற்றி கிரானைட்சேர்கள் ஒரே கலரில்ஆடிட்டோரியத்திற்குள் பில்லர் வரக்கூடாது பக்கச் சுவரை தகர்த்து ருபுறமும் பில்லர்கள் நிறுவி 70 அடி அகலமுள்ள பகுதியில்  கிரேன் மூலம் இரும்பு பீம் நிறுத்தி அதன்மீது சுவர் அமைத்தது ஒரு சேலஞ்சாக இருந்தது.

 


ஒரு
 ஸ்கிரீனை இரண்டு ஸ்கிரீனாக மாற்றினோம்கீழ்தளத்திலிருக்கும் தியேட்டரின் சவுண்ட் மேல்தளத்தில் உள்ள தியேட்டருக்கு டிரான்ஸ்பர் ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஜெர்மனியிலிருந்து ஒரு டாக்ட்ரேட் படித்த நிபுணரை அழைத்து வந்து அவரின் ஆலோசனைப்படி சவுண்ட் சிஸ்டம் தற்கால டிரெண்டிங்குக்கு ஏற்ப அமைத்தோம்.

 

இன்றைக்கு ஆக்குபென்ஸ் ரேட்டில் தமிழ்நாட்டில நாங்க ‘டாப் 5’ ல் இருக்கிறோம். புதுப்படம் ரிலீஸ் ஆனதும் முதலில் கமலா சினிமாஸ் தான் விநியோகஸ்தர்களின் சாய்ஸாக உள்ளது.

 

 தியேட்டர் வேலை நடந்து கொண்டிருக்கும்போது வீண் முதலீடு என நினைத்துப் பேசியவர்கள் எல்லாம் இன்று வியந்து பார்க்கிறார்கள்என் தந்தையார் கொடுத்ததை நாங்கள் மேம்பாடு செய்து மூன்றாம் தலைமுறைக்குக் கொடுத்துள்ளோம்எனது மகன் அமெரிக்காவில் டாக்டராக இருக்கிறான்என் முதல் தம்பி மகன் பெரிய உற்பத்தித் தொழிற்சாலை நடத்தி வருகிறான்எனது இரண்டாவது தம்பி மகன் கல்லூரியில் படித்துக் கொண்டே தியேட்டரைத்  திறம்படப் பார்க்கிறான்இவர்கள் அடுத்த தலைமுறைக்குக் கமலா தியேட்டரை மேம்படுத்தித் தருவார்கள்கமலா சினிமாஸ் காலகாலத்திற்கும் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

 

WE WILL STILL DO IT. WE WILL STRIVE TO MAKE  IT EVEN BETTER.

 

KAMALA CINEMAS WILL ALWAYS SHINE.” 

நிச்சயமாக 50 வருடக் கம்பெனி, ஸ்டார்ட் அப் & பிஸினஸின் 50 வது இதழில் வருவது பெருமையான விஷயம்தான். ஸ்டார்ட் அப் இதழ்களை முழுமையாகப் படித்து விட்டு அதன்பின் எனக்கு நீங்கள் இந்தப் பேட்டி அளித்தது உங்கள் கூர்ந்த அவதானிப்பைக் காட்டுகிறது. 


எத்தனையோ இடர்ப்பாடுகளைக் கடந்து உங்கள் கடின முயற்சியாலும் அயராத உழைப்பாலும் ஆழ்ந்த நம்பிக்கையாலுமே கொரோனாவுக்குப் பின்னும் ஒளிர்கிறது கமலா சினிமாஸ். 


பொன்விழாக் கொண்டாடும் கமலாசினிமாஸ் நூறாண்டுகள் கடந்தும் மக்கள் சேவை செய்ய வாழ்த்துகள். 


 

டிஸ்கி:- நன்றி சாத்தப்பன் சார் & ஹுமாயூன் சார், ஸ்டார்டப் & பிஸினஸ் நியூஸ் 50ஆவது இதழில்  இதுவரை ( அவ்வப்போது ) பங்களிப்புச் செய்து வரும் எங்கள் புகைப்படங்களையும் வெளியிட்டுக் கௌரவம் அளித்தமைக்கு :) 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...