எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஆர்கானிக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆர்கானிக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 ஜூன், 2018

என் மாடித் தோட்டத்தில் ஏகப்பட்ட அறுவடை.

பூத்ததைப் பார்த்தோம் , காய்ச்சதைப் பார்த்துவிட கனிஞ்சதையும் முத்தினதையும் பழுத்ததையும் பார்த்தோம். ஏன்னா நாங்க இருக்கும் வீட்டில் இருந்து மாடித்தோட்டம் போட்ட வீடு தூஊஊரம். சோ வாரம் ஒருமுறைதான் போக முடியும்.

30 லேருந்து 40 வெல் க்ரோ பைகள், அதுல செடியோடவே கொண்டாந்துட்டாங்க. சிலதை மட்டும் அப்ப வந்து தூவுனாங்க.கீரை விதை மாதிரி. ஒவ்வொரு பேகையும் நாலு கல்லு வைச்சு அது மேல வைச்சாங்க. அந்த ஸ்பெஷல் கல்லு ரெண்டு டப்பா வந்தது. அப்புறம் கழி கொண்டு வந்து ஊன்றி அதுல இந்த க்ரீன் நெட்டைப் போட்டு நல்லா கட்டுனாங்க. ஒரு நாள் வேலை. இதெல்லாம் ஒரு வேன்ல வந்துது.

தோட்டம் போட்டவுடன் தோட்டம் போட்டுக் கொடுத்த மனுஷன்  அப்பவே சொன்னாரு, பதினைஞ்சாயிரம் கொடுத்துப் போட்டா எல்லாரும் மூணு மாசத்துல 15,000 ரூபாய்க்கு காய் அறுவடை பண்ணனும்னு நினைப்பாங்க. நீங்க அப்பிடி இல்லையே என்றார். இல்லை என்று இடம் வலமாக பலமாகத் தலையாட்டினோம். ஆனா மூணு மாசத்துல முக்கா கிலோ தக்காளி எடுத்திருப்போம். அரைகிலோ கத்திரி, அரை கிலோ வெண்டை ஒரு கொத்து பச்சை மிளகாய். 300 ரூபாய்க்குக் காய் எடுத்திருப்பமா தெரியல. ஆனா நம்ம தோட்டத்துக்காய்னு நினைக்கும்போது விலையாவது ஒண்ணாவது..  உரம், பூச்சி மருந்து, மரபணு காய் என்ற பயமில்லாமல் இருந்ததே அதுவே ஐஸ்வர்யம். ( நாம அதுக்குள்ள இடம் விட்டு இடம் மாத்தி திரும்ப க்ரீன் கொட்டகை லேபர் கூலி, வேன் கூலி எல்லாம் சேர்த்து அது 20,000/- ஆ எகிறிருச்சு )

ஆனால் வாராவாரம் செல்வதால் வெண்டைக்காய் முக்காலே மூணுவீசம் முத்திடும். விடுவமா சூப் வைச்சு சாப்பிட்டோம். லெமன் கிராஸை எதுல போடலாம்னு தெரியல.. :(

பாவக்காய் பழமாய்ப் போயிடும். அதத்தான் ஜூஸ் அடிச்சுக் குடிக்க முடியல :)

தோட்டம் போட்டுக்குடுத்தவர் மீன் கரைசல் & இன்னோரு வெல்லக் கரைசல் கொடுத்தாரு. அதை குடியிருப்பவர்களிடம் கொடுத்து தண்ணீரில் கரைத்துப் பூவாளியில் தெளிக்கும்படி சொல்லி வந்தோம்.  அவர்களுக்கும் விளைச்சலில் பங்கு உண்டு. :)

கீழே தோட்டத்தில் முருங்கை, பலா, வாழை எல்லாம் உண்டு. அது எல்லாம் அவர்களுக்கே. இந்த வல்லாரை,முருங்கைக்கீரை, பசலைக்கீரை இதெல்லாம் நமக்கு :)


புதன், 10 மே, 2017

இயற்கை விவசாயத்தின் தேவை குறித்து ஆரண்யா அல்லி.


ஆரண்யா அல்லி. இயற்கை விவசாய ஆலோசகர். உரங்கள், பூச்சிக் கொல்லிகள், இரசாயனங்கள் மூலம் இயற்கை பாழ்பட்டதோடு உடல் மனம் சார்ந்த நோய்க்கூறுகளுக்கு மனித இனம் பகடைக்காயாய் ஆகிவிட்டதையும் அதிலிருந்து மீள்வது பற்றியும் அவரிடம் மகளிர் தரிசனத்துக்காகக் கேட்டோம்.

வியாழன், 13 ஏப்ரல், 2017

மாடித்தோட்டமும் மலைப்பயிர்களும்.

மாடித்தோட்டம் போடவேண்டும் என பல நாட்களாக ஆசை . ஆனால் தற்போது இருக்கும் ஃப்ளாட்ஸில் மேலே முழுக்க மூடி ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்/இரும்பு ஷீட்ஸ் போட்டுப் பக்காவா இருக்கு. அது புறா பறவை எச்சங்கள் நிறைந்து வாக்கிங் போகவும் அசௌகர்யமா இருக்கு. சின்னஞ்சிறு நிகழ்ச்சிகள் நடத்தலாம். ஆனால் வருடாந்திரம் கூட யாரும் அங்கே ஒரு கெட்டுகெதர் கூட கொண்டாடியதில்லை.

அதை எடுத்தால் சோலார் பவர் நிர்மாணம் செய்யலாம் என்று ரங்க்ஸின் எண்ணம். எனக்கோ என் பழைய வீட்டைச் சுற்றி இருக்கும் தோட்டம் போல மாடி பூரா தோட்டம் அமைக்க எண்ணம். உஷாவின் தோட்டம் பார்த்து நப்பாசையும் கூட.

என் அன்புத் தோழி ஆரண்யா அல்லியை சேலத்தில் அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்தேன். ஆர்கானிக் ஃபார்மிங்கில் அவர் எக்ஸ்பர்ட். உரம் பூச்சிக்கொல்லி இல்லாமல் இயற்கை விவசாயம் செய்யவும், மாடித்தோட்டம், பால்கனித் தோட்டம் அமைக்கவும் வழிகாட்டுகிறார்.

அவரது மாடித்தோட்டமே இது.

மூன்று டைப்பான வெல்க்ரோ பேக்குகள் வைத்து அவற்றில் மண், தென்னைக் கழிவான பித்,  இயற்கை உரம் நிரப்பி உயரத்துக்குத் தகுந்தவாறு புதினா, கொத்துமல்லி, வெந்தயக் கீரை, துளசி, அடுத்த லெவல் பேகில் கத்திரிக்காய் வெண்டை, தக்காளி, அதற்கு அடுத்த லெவல்பேகில் வாழை , முருங்கை எனப் பயிரிட்டு இருக்கிறார்.

பசுமஞ்சள் நல்ல பெரிய கிழங்காக அறுவடை செய்ததைக் காண்பித்தார். ( பேலியோவாசிகளின் கவனத்துக்கு ) . கொத்துக் கொத்தாய் கத்திரியும் தக்காளியும் காய்த்திருந்தது. !

அவரது மாடித் தோட்டத்தைச் சுட்டு வைத்திருக்கிறேன். ஆங்... சொல்ல மறந்துட்டேன் அந்த வெய்யிலிலும் வெள்ளை சாமந்தியும் காலிஃப்ளவரும் கூட இந்தத் தோட்டத்தில் மலர்ச்சியாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தன. :)
மடல் பிரியும் வாழை.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

ஆரண்யா ஆர்கானிக் ஃபார்மிங் சிறப்புப் பயிற்சி.

மருந்து தெளிச்ச காய்கனிகளையே வாங்கி சாப்பிட்டுட்டு இருக்கோம். இயற்கை முறையில் விவசாயம் பத்தி ஆரண்யா அல்லி நிறைய சொல்லித்தராங்க.

நிறையப்பேருக்கு ஆர்கானிக் ஃபார்மிங்னா என்ன அதை எப்பிடி செய்றதுன்னு தெரிஞ்சிக்க ஆர்வம் இருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...