பூத்ததைப் பார்த்தோம் , காய்ச்சதைப் பார்த்துவிட கனிஞ்சதையும் முத்தினதையும் பழுத்ததையும் பார்த்தோம். ஏன்னா நாங்க இருக்கும் வீட்டில் இருந்து மாடித்தோட்டம் போட்ட வீடு தூஊஊரம். சோ வாரம் ஒருமுறைதான் போக முடியும்.
30 லேருந்து 40 வெல் க்ரோ பைகள், அதுல செடியோடவே கொண்டாந்துட்டாங்க. சிலதை மட்டும் அப்ப வந்து தூவுனாங்க.கீரை விதை மாதிரி. ஒவ்வொரு பேகையும் நாலு கல்லு வைச்சு அது மேல வைச்சாங்க. அந்த ஸ்பெஷல் கல்லு ரெண்டு டப்பா வந்தது. அப்புறம் கழி கொண்டு வந்து ஊன்றி அதுல இந்த க்ரீன் நெட்டைப் போட்டு நல்லா கட்டுனாங்க. ஒரு நாள் வேலை. இதெல்லாம் ஒரு வேன்ல வந்துது.
தோட்டம் போட்டவுடன் தோட்டம் போட்டுக் கொடுத்த மனுஷன் அப்பவே சொன்னாரு, பதினைஞ்சாயிரம் கொடுத்துப் போட்டா எல்லாரும் மூணு மாசத்துல 15,000 ரூபாய்க்கு காய் அறுவடை பண்ணனும்னு நினைப்பாங்க. நீங்க அப்பிடி இல்லையே என்றார். இல்லை என்று இடம் வலமாக பலமாகத் தலையாட்டினோம். ஆனா மூணு மாசத்துல முக்கா கிலோ தக்காளி எடுத்திருப்போம். அரைகிலோ கத்திரி, அரை கிலோ வெண்டை ஒரு கொத்து பச்சை மிளகாய். 300 ரூபாய்க்குக் காய் எடுத்திருப்பமா தெரியல. ஆனா நம்ம தோட்டத்துக்காய்னு நினைக்கும்போது விலையாவது ஒண்ணாவது.. உரம், பூச்சி மருந்து, மரபணு காய் என்ற பயமில்லாமல் இருந்ததே அதுவே ஐஸ்வர்யம். ( நாம அதுக்குள்ள இடம் விட்டு இடம் மாத்தி திரும்ப க்ரீன் கொட்டகை லேபர் கூலி, வேன் கூலி எல்லாம் சேர்த்து அது 20,000/- ஆ எகிறிருச்சு )
ஆனால் வாராவாரம் செல்வதால் வெண்டைக்காய் முக்காலே மூணுவீசம் முத்திடும். விடுவமா சூப் வைச்சு சாப்பிட்டோம். லெமன் கிராஸை எதுல போடலாம்னு தெரியல.. :(
பாவக்காய் பழமாய்ப் போயிடும். அதத்தான் ஜூஸ் அடிச்சுக் குடிக்க முடியல :)
தோட்டம் போட்டுக்குடுத்தவர் மீன் கரைசல் & இன்னோரு வெல்லக் கரைசல் கொடுத்தாரு. அதை குடியிருப்பவர்களிடம் கொடுத்து தண்ணீரில் கரைத்துப் பூவாளியில் தெளிக்கும்படி சொல்லி வந்தோம். அவர்களுக்கும் விளைச்சலில் பங்கு உண்டு. :)
கீழே தோட்டத்தில் முருங்கை, பலா, வாழை எல்லாம் உண்டு. அது எல்லாம் அவர்களுக்கே. இந்த வல்லாரை,முருங்கைக்கீரை, பசலைக்கீரை இதெல்லாம் நமக்கு :)