எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 9 பிப்ரவரி, 2017

வீரம் மிக்க ராணி அவந்திபாய் லோதி.

வீரம் மிக்க ராணி அவந்திபாய் லோதி

சுதந்திரப் போராட்ட வீராங்கனைகளில் ராணி அவந்திபாய் லோதியும் ராணி அப்பக்கா சௌதாவும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள். 

ராணி அவந்திபாய் லோதி :-

மத்தியப் பிரதேசத்திலிருக்கும் ராம்கார்க் ராஜ்ஜியத்தின் ராஜாவான விக்ரமாதித்யசிங்கின் மனைவி ராணி அவந்திபாய் லோதி. வாரிசு இல்லாமல் ராஜா உடல் நலிவுற்று இறந்தார். பிரிட்டிஷ் அரசு ராஜாவின் இறப்புக்குப் பின் ராணி பதவியில் அமர்ந்து அரசாட்சி செய்த் த்.ாடு பிடிக்கும் ஆசையில் இரந்த ங்கிலேய அர ஆண் வாரிசுகள் மட்டுமஆளண்டும் என்று சட்டம் போட்ட. பெண் அரசாள்வதைத் தடுப்பதா எனக் கொந்தளித்த ராணி தனது நாட்டை மீட்க உறுதி பூண்டார். 

1857 இல் நான்காயிரம் வீரர்களைத் திரட்டி ஆங்கிலேயர் அதிகாரத்துக்கு எதிராகப் போர் தொடுத்தார். மிகத்தீரத்துடன் போர் புரிந்தும் கூட நவீனக் கருவிகளுடன் போரிட்ட ஆங்கிலேயப் படைக்கு முன்னால் ராணியின் படைகள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தோல்வியைத் தழுவ விருப்பமில்லாமல் வீரம் மிக்க ராணி அவந்திபாய் 1858, மார்ச்20 ஆம் தேதி தனது வாளினால் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார். 

இவருக்கு வீர வணக்கம் தெரிவிக்கும் முகமாக அரசு ஜபல்பூர் அணைக்கு இவர் பேரைச் சூட்டி உள்ளது. மகாராஷ்டிரா அரசாங்கமும் தபால் துறையும் இவரது வீரத்துக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக அஞ்சல்தலையை வெளியிட்டுள்ள.

4 கருத்துகள்:

 1. நல்ல தகவல். புதிய தகவல். நடுநடுவே எழுத்துருக்கள் ஒரு மாதிரி தெரிவது எனக்கு மட்டும்தானா?

  தம +1

  பதிலளிநீக்கு
 2. நல்ல தகவல். இதுவரை அறியாத தகவல். சரி நடுவே ஏன் எழுத்துகள் சரியாக வரவில்லை? ஏதோ மாதிரி வருகின்றனவே

  பதிலளிநீக்கு
 3. பிறமாநிலக் கதைகள் தெரிவதில்லை தகவலுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 4. அஹா எனக்கு ஒண்ணும் தெரியலையே. சரியா இருக்கமாதிரித்தானே இருக்கு ஸ்ரீராம் & துளசி சகோ

  நன்றி பாலா சார்.

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...