எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 1 டிசம்பர், 2011

பெண்களுக்கு மட்டுமே வரும் நோய். யூராலஜி டாக்டர் ஸ்ரீகலா ப்ரசாத் பேட்டி.. லேடீஸ் ஸ்பெஷலில்

பெண்களுக்கு மட்டுமே என்று ஏற்படக்கூடிய உடற்கூறு சம்பந்தமான ப்ரத்யேகப் ப்ரச்சனைகள் பலவுண்டு. பூப்படைதல்., பின் மாதவிடாய்., பிள்ளைப்பேறு. கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள்., கர்ப்பப்பை கான்சர்., மார்பகக் கான்சர் என்று. அதில் முக்கியமானது சிறுநீர்க் கசிவு. இந்த சிறுநீர்க்கசிவு சிலருக்கு பலமான பிரச்சனையாக அமைந்து நிம்மதியைக் குலைத்துவிடும். இது சம்பந்தமாக ராயப்பேட்டை பொதுமருத்துவமனையில் சிகிச்சையளித்துவரும் டாக்டர் ஸ்ரீகலா ப்ரசாத் அவர்களை சந்தித்து நம் லேடீஸ் ஸ்பெஷல் வாசகியருக்கு தீர்வுகள் வழங்குமாறு கேட்டோம். சென்னையிலேயே இந்தத்துறையில் சிகிச்சையளித்து வரும் பெண் மருத்துவர் இருவர்தான். அதில் இவர் முக்கியமானவர். ஒரு அறுவை சிகிச்சை முடிந்து அப்போதுதான் ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்திருந்தார்.டாக்டர் ஸ்ரீகலா முதன்முதலில் கைனகாலஜிஸ்டாக ப்ராக்டீஸைத் துவங்கியவர்கள். ஏன் இந்தத் துறையை தேர்ந்தெடுத்தீர்கள் என்ற கேள்விக்கு அவர்., சொன்னார்., “இந்த யூராலஜி சம்பந்தப்பட்ட துறையில் பெண் மருத்துவர்கள் சொற்பம். மெயினாக இது பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை . ஆனால் இதை ஆண் டாக்டர்களிடம் காண்பிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்கள். அப்போது நான் ஏன் இந்தத்துறையை தேர்ந்தெடுத்து பெண்களின் பிரச்சனையை தீர்க்கக்கூடாது என நினைத்தேன். ஏனெனில் பெண் டாக்டர்கள் என்றால் அவர்களால் சுலபமாக தன் பிரச்சனைகளை சொல்ல முடியும். எனவே இந்தத் துறையை தேர்ந்தெடுத்தேன் . சிறப்புப் பட்டம் பெற்றிருக்கிறேன்.”

பெண்கள் பொதுவாக டெலிவரி., மாதவிடாய் ஆகிய பிரச்சனைகளுக்கு பெண் டாக்டர்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். சிறுநீர் கசிவது என்பது மிகவும் நுண்ணிய ப்ரச்சனை என்பதால் ஆண் டாக்டர்களிடம் போகவும் கூச்சம். சொல்லவும் காண்பிக்கவும் கூட கூச்சமாகி போகாமல் இருந்து விடுகிறார்கள் . இதை பெண்கள் கட்டாயம் களைந்து பெண் டாக்டர்களிடம் காண்பித்து தீர்வு அடையவேண்டும். தேவையானால் ப்ரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து அறுவை சிகிச்சையும் அளிக்கப்படுகிறது..

கண்ட்ரோல் இல்லாமல் சிறுநீர் கசிவதே முக்கிய பிரச்சனை. இது சிலருக்கு 14 வருஷம்., 20 வருஷம் எல்லாம் இந்தப் பிரச்சனை இருக்கு. தும்மினால் சிரித்தால் சிறுநீர்க்கசிவு ஏற்படும். இதுக்கு என்ன காரணம் என்றால் யூரின் ட்ராக்ட் ( சிறுநீர்ப் பாதை) வீக்காக இருப்பதுதான். சிலசமயம் கர்ப்பப்பை வீக்காக இருந்தாலும் இந்தப் பிரச்சனை ஏற்படும்.

ஈஸ்ட்ரோஜென் ப்ரொடக்‌ஷன் நிற்கும்போதும் ., மெனோபாஸ் சமயத்திலும் டிஷ்யூ ஸ்ட்ரென்த் வீக்காக ஆகிறது.

இதுக்கு காரணங்கள்..

(1) நிறைய குழந்தைகள் பெற்றவர்கள்

(2) மாதவிடாய் நின்ற பின் சிலருக்கு.

(3) அளவுக்கதிகமான எடையுள்ள எந்த வயது பெண்களுக்கும்.

(4) ஆஸ்த்துமா., உள்ள சிலருக்கு.

(5) பெல்விஸ் இறுக்கத்தினால் சுகப்பிரசவம் ஆகாதபோது தாமதப்படுத்தப்படும் சிசேரியனால் சிலருக்கு குழந்தையின் அழுத்தத்தால் சிறுநீர்ப்பை அமுங்கி சிலருக்கு ஓட்டைகூட ஏற்படும்.

ஒபிசிட்டி தவிர்க்கப்படவேண்டும். ஜங்க் ஃபுட்., ரெடிமேட் டப்பா உணவு வகைகள் .,ஃபாஸ்ட் ஃபுட்கள்., இனிப்பு., சிப்ஸ்., கூல் ட்ரிங்க்ஸ்., ஐஸ்க்ரீம்., கேக்., சாக்லெட்டுகள். தவிர்க்கப்படவேண்டும். நிறைய உடற்பயிற்சியும் ., வாக்கிங்கும் தேவை. 8 அல்லது 9 வயதில் சில குழந்தைகளுக்கும் இந்தப் பிரச்சனை உள்ளது.காரணம் வீட்டிலிருந்து வெளிவந்தால் நடப்பதே இல்லை. கார்., ஆட்டோ., ஸ்கூல் வேன் போன்றவற்றில் செல்வது. மேலும் பள்ளிகளில் உடற்பயிற்சி வகுப்போ விளையாட்டு வகுப்போ இல்லை. மெக்டொனால்ட்., கெண்டகி போன்றவை சாப்பிடுகிறார்கள். கீரை., அவரைக்காய்., வாழைத்தண்டு ., போன்றவை அதிகம் சேர்க்கவேண்டும். குழந்தைகள் காலை உணவை சாப்பிடுவது இல்லை. சரியான பாலன்ஸ்ட் டயட் இல்லை. இவை எல்லாம் பின்பற்றினால் இந்தக் குறையத் தவிர்க்கலாம்.

ஆஸ்த்துமா., தொடர் இருமல் இவற்றால் பாதிக்கபடும் சிலருக்கு பிரச்சனை அதிகமா இருக்கும். சிலர் தினமும் அலுவலகத்துக்கோ அல்லது வெளியிலோ செல்லும்போது பாட் வைத்துச் செல்வார்கள். சிலருக்கு எழுந்து நிற்கும் போதும் இருக்கும். அந்த அளவு லீக் அதிகமா இருக்கும். வெயிட் அதிகமா இருந்தா குறைக்கணும். மேலும் கசிவு தொடர்ந்து இருந்தால் டாக்டரிடம் காண்பித்து முறையாக சிகிச்சை எடுக்கணும் , மிக தீவிரமா இருந்த அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். இது மிக எளிதானது.

கிட்டத்தட்ட 25, 000 ரூ செலவு., டாக்டர் செலவு., ஹாஸ்பிட்டல் செலவு இதெல்லாம் இல்லாமல் ராயப்பேட்டை பொது மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை இலவசமா செய்யப்படுகிறது பிரச்சனை உள்ளவர்கள் தயங்காமல் பெண் டாக்டரான ஸ்ரீகலாவிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

இதில் ஸ்லிங் ( SLING) என்பது சிறுநீர்க்குழாயில் பொருத்தப்படுகிறது. இது டிஷ்யூவை இறுக்கிப் பிடிப்பதால் சிறுநீர்க்கசிவு தடுக்கப்படுகிறது.

லேசான பிரச்சனை இருப்பவர்களுக்கு பெல்விக் எக்ஸர்சைஸ் சொல்லித்தரப்படுகிறது. ஆசனவாய் எக்ஸர்சைசும் சொல்லித்தரப்படுகிறது.

ப்ரொலாப்ஸ்ட் யுடரஸ் பிரச்சனைக்கு கர்ப்பப்பை இறக்கத்தினாலும் இது ஏற்படும். லேசாக இருந்தால் எக்ஸர்சைசில் சரிப்படுத்தலாம். பாட் வைக்கும் அளவு தீவிரமாக இருந்தால் அறுவை சிகிச்சை அவசியம்.

(1) ஸ்லிங்கை ஒரு முறைதான் உபயோகிக்க முடியும்.

( 2) ஸ்லிங்கின் விலை 25,000 ரூபாய்.

(3) கர்ப்பப்பை சிகிச்சையின் போது ரெக்டஸ் ஃபேசியா ஸ்லிங் டிஷ்யூ என உடலிலிருந்தே எடுத்தும் பொருத்தப்படுகிறது.


சிறுநீர்க்கசிவின் வகைகள்.

(1) ஸ்ட்ரெஸ் எனப்படும் அழுத்தம் இதனால் மன அழுத்தம் ., புற அழுத்தம் பாதிக்கப்படும்போது வருகிறது.

(2) அர்ஜ் எனப்படும் காரணமற்ற உடனடிக் கசிவு.இது வயதானவர்களுக்கு., நரம்பு வீக்கானவர்களுக்கு., அதிக குழந்தை பெற்றவர்களுக்கு. , மூட்டுவலி உள்ளவர்களுக்கு., அதிக அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு வருகிறது.

(3) ஓவர்ஃப்லோ எனப்படும் கசிவு.சிறுநீர்ப்பை கொள்ளளவு தாங்காமல் கசிவது

(4) மிக்ஸட் வகை. இதெல்லாம் கலந்தது. பொதுவாகப் பெரியவர்களுக்கு வருவது. இது சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பலவகைகளையும் உள்ளடக்கியதால் பன்முறை சிகிச்சை தேவைப்படும்.

(5) ஸ்ட்ரக்சரல் வகை. இது டெலிவரியின் போது குழந்தை வெளிவரமுடியாமல் (பெல்விக்) இடுப்பு எலும்பு இறுக்கமாய் இருக்கும் சமயத்தில் சிசேரியன் செய்து எடுக்காமல் தாமதப்படுத்தும் போது கர்ப்பப்பை சிறுநீர்ப்பையை அமுக்கி ரத்த ஓட்டத்தை நிறுத்தி ஓட்டையை உண்டாக்கும். அப்போது உண்டாவது. இதற்கு பிஸ்டுலா என்று பேர். ( இதற்கு VISICA VEGINAL FISTULA என்று பெயர். இது டெலிவரி சமயத்தில் உண்டாவது. இது இப்போது சிகிச்சை முறையால் குறைக்கப்பட்டுள்ளது.)

(6) ஃபங்க்‌ஷனல் வகை. இது அல்சீமர் எனப்படும் மறதி நோய் உள்ளவர்க்கு., குடித்திருப்பவர்க்கு வரலாம்.

(7) பெட் வெட் வகை. தன்னையறியாமல் படுக்கையை ஈரப்படுத்திவிடுவது. இது குழந்தைகள் மற்றும் பெரியவர்க்கு வருகிறது.

(8) ட்ரான்சியண்ட் வகை:- இது பொதுவாக மனநலக்குறைவுள்ளவர்க்கு வருவது.

(9) கிக்கிள் வகை இது சிரித்தால்., தும்மினால்., இருமினால் வருவது.

இவற்றுக்கெல்லாம் தீர்வு இருக்கிறது. சிறிய பிரச்சனை என்றால் எக்சர்சைஸ் மற்றும் பயிற்சிகள் சொல்லித் தரப்படுகிறது.

கட்டுப்படுத்த முடியாத சிறுநீர்ககசிவினால் துன்பப்பட்டார்கள் என்றால் அறுவை சிகிச்சைதான் தீர்வு. ராயப்பேட்டை பொது மருத்துவமனையில் இதற்கு இலவசிகிச்சையும்., இலவச அறுவை சிகிச்சையும் வழங்கப்படுவதால் பிரச்சனை வைத்து அனுபவித்துக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்காமல் டாக்டர் ஸ்ரீகலா பிரசாத்தை அணுகி தீர்வு காணுங்கள்.

மீடியா மிகச் சிறந்த பவர்ஃபுல்லான இடம். இது பொதுமக்கள் அனைவருக்கும் போய்ச் சேரவேண்டும். இதை பதிவு செய்யுங்கள். இந்த சேவையைப் பெற்று பலர் பலனடைய வேண்டும் என டாக்டர் கூறினார்.

டாக்டர் ஸ்ரீகலா அவர்களும் சிரித்த முகத்தோடு எளிமையானவர்கள் அணுகும்படி இருக்கிறார். காசுதான் முக்கியம் எனக் கருதப்படும் உலகில் சேவைதான் முக்கியம் என சிறப்பு சிகிச்சையளித்துவரும் டாக்டரின் சேவையைப் பாராட்டி விடைபெற்றோம்.


11 கருத்துகள்:

 1. மிகவும் பயனுள்ள பதிவு.

  பாதிப்பு பெண்களுக்கு மட்டுமேன்னு இல்லைப்பா.
  ஆண்களுக்கும் இந்த Incontinence பிரச்சனை இருக்கு. ஆனால் விகிதாசாரம் குறைவு.

  ப்ராஸ்டேட் ப்ராப்லம் இருப்பவர்களுக்கு இது சகஜம்.

  பெரியவர்களுக்கான ஸ்பெஷல் pads, pants எல்லாம் கிடைக்குது இங்கே.

  பதிலளிநீக்கு
 2. மிகமிகப் பயன்தரும் விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி. (இதற்கு மேல் விவரமாய்ச் சொல்ல எனக்கு இந்த சப்ஜெக்டில் அறிவு பற்றாது. இப்போது உங்கள் பதிவின் மூலம்தான் அறிகிறேன்.)

  பதிலளிநீக்கு
 3. மிக மிக அவசியமான தகவல்களை அளித்துள்ளீர்கள். பகிர்வுக்கு பாராட்டுகள். நன்றி

  பதிலளிநீக்கு
 4. நல்ல பதிவு அவசியமான ஒன்றாக இருக்கிறது நன்றி.

  பதிலளிநீக்கு
 5. நன்றி துளசி

  நன்றி கணேஷ்

  நன்றி மாதவி

  நன்றி மணிச்சுடர்

  நன்றி ராஜி

  பதிலளிநீக்கு
 6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 7. மிக மிக பயனுள்ள பதிவு.
  முதன் முதலாக எங்கள் அம்மாவுக்கு வந்த போது அம்மா பட்ட சிரமம்
  இன்னும் நினைவு இருக்கிறது.

  இப்போது நல்ல தீர்வும் இருக்கிறது என்று கேள்விப் பட
  மிகவும் மகிழ்ச்சி. நன்றி தேன்.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் சகோதரி...

  அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 9. பகிர்வுக்கு மிக்க நன்றி தேனக்கா.இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.

  பதிலளிநீக்கு
 10. நன்றி வல்லிம்மா, நன்றி டிடி சகோ

  நன்றி டா ஆசியா :)

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...