எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஏவிசி பொறியியல் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏவிசி பொறியியல் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 மே, 2025

திங்கள், 29 ஏப்ரல், 2013

ஏவிசியில் 2012 சுதந்திரதின உரை யூடியூபில்.

ஏவிசி பொறியியல் கல்லூரியில் 2012 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின உரையாற்ற சிறப்பு விருந்தினராய் அழைக்கப்பட்டிருந்தேன். அந்த உரையை வீடியோவாக எடுத்து அனுப்பி இருந்தார்கள் நிர்வாகத்தினர்.

திங்கள், 22 ஏப்ரல், 2013

சுதந்திர தினத்தில் ஏவிசியில் சிறப்பு விருந்தினராக..

ஏவிசி பொறியியல் கல்லூரியில் சுதந்திர தினத்தன்று உரையாற்ற அழைப்பு வந்தது.

கல்லூரியின் தாளாளர் மதிப்பிற்குரிய நண்பர் திரு சொக்கலிங்கம் செந்தில்வேல் என்னுடைய முகநூல் நண்பர். என் கதை, கவிதை, கட்டுரைகளைப் படித்துவிட்டு தன்னுடைய கல்லூரியின் மாணாக்கருக்கு  உரையாற்ற அழைத்திருந்தார். நன்றி செந்தில்

சனி, 26 ஜனவரி, 2013

நாட்டின் சுதந்திரமும் நமது சுதந்திரமும்.

சுதந்திரத் திருநாளில் (15.8.2012) மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரியில் சிறப்பு விருந்தினராய்ப் பங்கேற்று சுதந்திரதின சிறப்பு உரையாற்ற அழைப்பு வந்தது. சுதந்திரப் போராட்டத்துக்கான வேர் பாய்ந்த சம்பவம், சுதந்திரத்தை இன்னும் பாதுகாக்கும் எல்லைக் காவல் படையினர், ஜவான்கள் பற்றி மற்றும் மாணவ மாணவியருக்கான சுதந்திரத்தின் அளவுகோல் பற்றி உரையாற்றினேன்.

முதன் முதலில் தென்னாப்பிரிக்காவில் 1906 இல் ஏசியாடிக் பதிவு சட்டத்தை அப்போது அங்கிருந்த ட்ரான்சுவால் காலனி அரசாங்கம் கொண்டு வந்தது. அதன்படி வாக்குரிமை மற்றும் இந்தியத் திருமணங்கள் சட்டப்படி செல்லாது , இதுபோல இன்னும் இதுபோல பல ஷரத்துக்கள் அடங்கிய இச்சட்டம் செல்லாது என சத்யாக்கிரக முறையில் காந்தி போராட அழைப்பு விடுத்தபோது மயிலாடுதுறையிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு வேலைக்காகச் சென்றிருந்த சாமி நாகப்பன் படையாட்சி, நாராயணசாமி மற்றும் வள்ளியம்மை முனுசாமி முதலியார் போன்றோர் காந்திஜியின் அழைப்பை ஏற்று இந்தச் சட்டத்தில் பதிவு செய்து கொள்ள மறுத்து சிறை சென்றனர்.
Related Posts Plugin for WordPress, Blogger...