சனி, 25 டிசம்பர், 2010

சும்மா பறத்தலே சுகம்..

பறத்தலுக்காய்தானே சிறகுகள்...
கூடல் இன்பத்துக்காய்
அலகுகள் மருவி..

பசித்தாலும் புல் தின்னாப் புலி
புனுகுப் பூனை மருவுமோ..
வைப்பரில் ஈசல் அல்ல..

கவரி மானோ ., அன்றிலோ
யாத்ராவின் புத்தகத் தலைப்பே
செல்ல விளிப்பாய்..


குழலினிது யாழினிது
வதை இனிது., வனிதையும்..
வாதை விரும்பி..நீ..

குறித்து வைக்கப் படாத
இறக்கைக் குறிப்புகள்
ஜீவாத்மாக்களின் வாழ்வு..

பறத்தலின் சுகத்துக்கே
பறக்கும் பறவைகள்..
அறியும் சுதந்திரம்..

பதிவு செய்யும் திறன்
பரமாத்மாக்களுக்கே
வாய்க்கும்.

வாழ்க படைப்புலக
பரமாத்மாக்கள்..
வெல்க அவர் தம் படைப்பு..

11 கருத்துகள் :

சௌந்தர் சொன்னது…

தலைப்பே சூப்பர் கவிதை அதைவிட சூப்பர்...!

கோமதி அரசு சொன்னது…

தேனம்மை,நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்திக் கொள்கிறேன் படைப்புலக பரமாத்மாக்களை.

நல்ல மனது உங்களுக்கு .

வாழ்த்துக்கள்!

கலாநேசன் சொன்னது…

"படைப்பதால் நானும் பிரம்மா" என்று சொன்ன கண்ணதாசன் வரிகளை நினைவுபடுத்தும் கவிதை அருமை.

வினோ சொன்னது…

அக்கா இப்படிப்பட்ட வாழ்த்து... நல்லா தான் இருக்கு....படிக்க தொடங்கியபோது வாழ்த்து என்று தெரியவில்லை...

அ.வெற்றிவேல் சொன்னது…

நல்ல கவிதை வாழ்த்துகள்

செந்தில்குமார் சொன்னது…

கல்வெட்டு வரிகள் அக்கா...

வாழ்த்துக்கள்

சிவகுமாரன் சொன்னது…

செவியினில் தேனெனும் செந்தமிழ் பாய்ச்சி
புவியினில் பெற்றீர் புகழ்- கவிதைத்தேன்
அம்மா உமது அழகுக் கவிவானில்
சும்மா பறத்தல் சுகம்.

இளம் தூயவன் சொன்னது…

கவிதை அருமை.

philosophy prabhakaran சொன்னது…

வாழ்த்துக்கள் உங்களுக்கும் பரமாத்மாக்களுக்கும்....

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி சௌந்தர்., கோமதி., கலாநேசன்., வினோ., வெற்றி., செந்தில்குமார்., சிவகுமாரன்., இளம்தூயவன்., பிரபாகரன்.,

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...