எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 1 டிசம்பர், 2010

தேனமுதபாஷிணி..


உன் குரல் கேட்டதில்லை நான்.. எழுத்திலேயே எல்லாம்.. !!! மிக மென்மையானதாகவும்., சமயங்களில் வலிமையானதாகவும் இருக்கும்..

வார்த்தைகளின் சாகசக்காரி நீ.. சூத்திரதாரி நீ ...உன் வார்த்தைச்சரங்களில் தோல்பாவையாய் ஆடிக்கொண்டிருக்கிறேன் நான் நிகழ்வேதும் அறியாமல்.. அன்பால் நீ ஆட்டுவிப்பதும் பின் காணாமல் போவதுமாய் கண்ணாமுச்சியில்.. ஜென்மம் தோறுமோ., யுகங்கள் தோறுமோ ..

மானாய் ஓடிக் கொண்டிருக்கிறாய்.. எனதாக்கிக் கொள்ளும் ஆவலில் பின் தொடர்ந்து. . ஆனால் வேட்டையாட அல்ல.. எதனாலும் காயப்பட்டுவிடாமல் இருக்கிறாயா எனப் பார்க்க..

வலிமையானவள்தான் நீ.. முகம் மட்டுமே காட்டி முகமாத்துச் செய்ய உன்னால்தான் முடிகிறது.. முகம் மட்டுமல்ல .. மூளை பார்த்தும் அதிசயித்து... வெளிக்கிரக வாசிகளும் உன்னை கலங்கரை விளக்காய் நினைத்து வாழ்த்திக் கொண்டிருப்பது பார்த்தேன்..

பொறாமையின் ஊற்றூக் கண்கள் பொங்கி வழிந்தன .. எனக்கு மட்டுமான ஒன்றை எல்லோரும் சொந்தம் கொண்டாடுவதா என்று.. எல்லோருக்கும் உரிமையான ஒன்றை நான் மட்டும் களவாட., பதுக்க முயன்றிருக்கிறேன் என்பது அறியாமல்..

என் கரங்கள் காயப்பட்டபோது கரங்களாகவும்.. என் கண்கள் வழிந்தபோது சேர்ந்தழுத கண்களாகவும்., என்னை வழிஎடுத்துச் சென்ற கால்களாகவும்.. நானாகவே நீ..
நிலவற்ற மழை இரவுகளில் கதை பேசியதில்லை நாம்.. மருதோன்றிச் செடியும் ., மல்லிகையும்., மீன்குழம்பும் உன் நெருக்கத்தையும்., உன் சுவாசத்தையும் என் காதோரம் நெகிழ்த்தி.. மரத்தோரம் நீ சாய்ந்திருக்கும் ஓவியம் என் மனதுள்..

வெர்ச்சுவல் சாட்டிஸ்ஃபாக்‌ஷன் என்ற நெருடல்களோடு எல்லாரும் நெருக்கியபோதும் உன் குரல் கேட்டு விடலாம்., பார்த்துவிடலாம் ரத்தம் சுண்டுமுன் என்ற நப்பாசையில் ..ஒருத்தி..

பாஷைகளற்ற நம் மூவருக்குள்ளும் சொல்லவும் பகிரவும் ஏதுமிருக்கிறதா என்ன.. தன்னைச் செதுக்கும் சிற்பம் போல நீங்கள் இருவரும்.. நான் சாளக்கிராமக் கல்லாய் நதியின் ஓட்டத்தில் செதுங்கி.. ஓரிடத்தில் சந்தித்து..
விந்தைதான்..

நீ முத்தமிட்டதில்லை.. இன்று உன் பிறந்தநாள்.. என்றும் அன்பும் அணைப்பும் அக்காவுக்கு என்றுதான் சொல்லிச் செல்வாய்.. இன்று உன் ஈரம் பதிந்த முத்தம் என் கன்னங்களில் நனைந்து நனைந்து காய்ந்து கொண்டிருக்கிறது.. என் அன்பு மழை உன் மேல் பொழிந்து கொண்டிருப்பது போல்..

நீடூழி வாழ்க கண்மணி.. நீயும் தமிழும் அபியும் போல்.. வாழ்க வளமுடன்., நலமுடன்.. அன்பு அக்கா தேனமுதபாஷிணி..

21 கருத்துகள்:

 1. அன்பால் நனைந்த உள்ளத்தில் இருந்து வந்துள்ள சத்தியமான வார்த்தைகளுடன் கவி மனத்தோடு அன்பும் அரவணைப்பும் கலந்து வந்துள்ள வாழ்த்து.. அம்மு கொடுத்து வைத்தவர்கள். இப்படி ஒரு அக்கா கிடைப்பத்ற்கு

  பதிலளிநீக்கு
 2. How sweet! Akka, it is very touching. You both are blessed with each other's love.

  HAPPY BIRTHDAY, AMUDHU!

  பதிலளிநீக்கு
 3. மகளிர் தினம் ஸ்பெஷல்///

  மகளிர் தினம் மார்ச் 8 தானே. அதற்குள் மகளிர் தின ஸ்பெஷலா,

  பதிலளிநீக்கு
 4. அருமை பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. அன்பு வழியும் வார்த்தைகளுடன் என் தங்கைக்கு அழகான வாழ்த்து சொல்லியிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 6. அன்பு ஊற்று என்பது இது தானோ!அருமை.வாழ்த்துக்கள்.தேனமுதபாஷிணி.

  பதிலளிநீக்கு
 7. பிரியத்தின் வேர்களில் இருக்கும் ஈரப் பதம் கொஞ்சம் பால் வாசனை கொஞ்சம் முத்த கந்தகம்

  வாழ்த்துகள் நன்னாள் கொண்டாடும் பெண்ணுக்கும் நட்பு விம்ம புளகத்தில் பெருகி நிற்கும் பெண்ணுக்கும்

  வாழிய !

  பதிலளிநீக்கு
 8. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அமுதா...(இப்படி ஒரு அக்கா உங்களுக்கு கிடைச்சதர்க்கும் வாழ்த்துக்கள்..) :)))

  பதிலளிநீக்கு
 9. என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அமுதா அக்கா..

  பதிலளிநீக்கு
 10. அமுதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. //டிஸ்கி:- மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப் பாடல் ., அமுதே..! தமிழே.. ! எனதுயிரே..!., அன்பு அனைத்தும் ஆக்கும்.., என்னைக் குழந்தையாக்கியவள்..., நட்பூ., மாயாவி.., இவை எல்லாம் உனக்காய்..!!!//

  அருமை அருமை...

  வாழ்த்தி வணங்குகிறேன்...

  தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

  வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 12. இன்று தான் முதன் முதலாக தங்கள் வலைபூவுக்கு வருகிறேன். அருமையான பதிவு.தொடர்ந்து நல்ல எழுத்துக்களை தாருங்கள். "எமக்கு தொழில் எழுத்து " மிக அருமையான பாரதியின் கூற்று.

  நேரம் இருப்பின் என் வலைப்பூவுக்கு வாருங்கள் http://grajmohan.blogspot.com

  பதிலளிநீக்கு
 13. அக்கா.. சூப்பர் அக்கா... சூப்பர்....

  ரொம்ப நல்லா இருக்கு.. அம்முக்கு என்னோட அன்பும், அணைப்பும், வாழ்த்துக்களும்..!!

  உங்களுக்கும் தான்... :-)) <3

  பதிலளிநீக்கு
 14. நன்றி வெற்றி., சித்து., ரமேஷ்., சசி., செல்வா., ஆசியா., நேசன்., சக்தி., மேனகா., ஆனந்தி., ஸ்டார்ஜன்., டி வி ஆர்., கார்த்திக்., சை கொ ப., மாணவன்.,ஸாதிகா., ராஜ்மோகன்., ஆனந்தி..:))

  பதிலளிநீக்கு
 15. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...