எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 27 டிசம்பர், 2010

ஆஸ்டியோ போரோசிஸ்.. ஒரு விழிப்புணர்வு.. டாக்டர் வேல்ராணி..நம் நாட்டில் ஆறு கோடிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள நோய் ஆஸ்டியோ போரோசிஸ்.. காரணமே இல்லாமல் கை முறிஞ்சிருக்கு என கட்டுப் போட்டிருக்கும் என் தோழி சொன்னார்.. காரணம் எலும்புத்தேய்மானம்.. ஆஸ்டியோ என்றால் க்ரீக்கில் எலும்பு. போரோஸ் என்றால் ஓட்டை உண்டாவது. ஒரு வீட்டின் மரக்கதவுகள்., நிலைச்சட்டம் இவற்றில் இருக்கும் மரம் உள்ளுக்குள்ளே கரையான் அரித்து உளுத்துப்போய் விட்டால் வலுவிழந்து விடுவது போல் மனித உடலில் எலும்புகள் கால்சியம் குறைபாட்டால் அடர்த்தி குறைந்து விடுவதால் முறிந்துவிடுவதுதான் எலும்புத்தேய்மானம் என்ற ஆஸ்டியோ போரோசிஸ்.
சென்னையில் இருக்கும் சுபம் நர்சிங்ஹோமில் பெண்களுக்கு ஆஸ்டியோ போரோசிஸுக்காக ஒரு நாள் இலவச சிகிச்சை முகாம் பக்ரீத் அன்று நடத்தப்பட்டது. அங்கு சென்று டாக்டர் வேல்ராணி அவர்களிடம் நம் வாசகியருக்காக ஆஸ்டியோ போரோசிஸ் பற்றி தகவல்கள் தந்துதவி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டோம். டாக்டர் கூறியவற்றை தொகுத்துள்ளேன்.


எலும்பின் அடர்த்தி 30 வயதுக்குப் பிறகு குறைய ஆரம்பிக்கிறது. எலும்புக்குள் இருக்கும் பல்ப் வயசு ஆகக் குறையும். எனவே எலும்பின் அடர்த்தி குறைந்து வலுவிழக்க ஆரம்பிக்கிறது. இதில்


1. ப்ரைமரி டைப் 1 மற்றும்

2. ப்ரைமரி டைப் 2 மற்றும்

3. செகண்டரி ஆஸ்டியோ போரோசிஸ் என மூன்று வகை உள்ளது.


ப்ரைமரி ஆஸ்டியோ போரோசிஸ் டைப் 1 என்பது போஸ்ட் மெனோபாஸுவல் ஆஸ்டியோ போரோசிஸ்.. அதாவது மாத விடாய் நின்ற பிறகு கிட்டத்தட்ட 45 வயதில் வருவது. மேலும் கர்ப்பப்பை எடுத்த பெண்களுக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாடு காரணமாக இது வரும்.


ப்ரைமரி ஆஸ்டியோ போரோசிஸ் டைப் 2 அல்லது செனைல் ஆஸ்டியோ போரோசிஸ் என்பது 75 வயது உள்ள பெண்களுக்கும் ஆண்களுக்குமே கூட 2:1 என்ற சதவிகிதத்தில் வருவது.


செகண்டரி ஆஸ்டியோ போரோசிஸ் என்பது எந்த வயதிலும் வரக் கூடியது. ஆண்., பெண் இருபாலாரையும் பாதிக்கக் கூடியது. இந்த வகை வரக் காரணம் நாட்பட்ட நோய்க்காக எடுத்துக் கொள்ளும் சில மருந்துகள். ஆஸ்டியோ போரோசிஸ் வந்தால் நம் வாழ்க்கைத் தரத்தைப் பாதித்து எதற்கும் அடுத்தவரை எதிர்பார்க்கும் சூழலைக் கொண்டு வரும். வாழும் ஆவலைக் குறைக்கும். சந்தோஷத்தோடு வாழ்வதற்குப் பதில் வலியோடும்., மாத்திரைகளோடும் வாழும் படி ஆகிவிடும். எனவே வரும் முன் காப்பதே சிறந்தது.


சரியான ஆகாரம் எடுத்துக் கொள்ளாமலிருத்தல்., அதனால் ஏற்படும் கால்சியம் குறைபாடு., எக்சர்சைஸ் செய்யாமலிருத்தல்., வெய்யில் நம் உடம்பில் படாமல் இருத்தல்., இது எல்லாம் இதை உருவாகும் காரணங்கள்..


கோலா போன்ற பானங்களை அதிகமாக எடுத்துக் கொள்வதும் உடலில் பொட்டாசியக் குறைவை ஏற்படுத்தி எலும்பு வலுவிழக்க காரணமாகிறது. அதனால் போன் டென்சிட்டி( எலும்பு அடர்த்தி) குறைந்து கூடு மாதிரி ஆகிவிடும். பீர்க்கங்காய்க் கூடு பார்த்திருப்பீர்கள் வெறும் நாராய்.. அது போல் ஆகிவிடும். லேசாக எங்காவது இடித்துக் கொண்டாலே ரொம்ப வலிக்கும். சட்டென்று உடையக்கூடிய தன்மை இருக்கும். இருப்பது தெரியாமல் முறிந்தபின்தான் தெரியும்., இது எலும்புத் தேய்மானம் என்று. இதுதான் சிம்ப்டம்.


ஒபிசிட்டி எனப்படும் உடற்பருமனும் ஒரு காரணம். பெரியவர்களுக்கு உயரம் குறைவு ஏற்படுவதும் இதனால்தான்., ஸ்பைனல் போன் ஷார்ட்டர் ஆவதால்தான். முக்கியமாக ( WEIGHT BEARING PARTS ) ( இடுப்பு., கால் பாகம் ) இடுப்பெலும்பு ., கால் எலும்பு., மணிக்கட்டு எலும்பு இவற்றில்தான் ஏற்படுகிறது முறிவு.


தொடர்ந்த இடுப்புவலி இருந்தால் பார்க்க வேண்டும். இதனால்தானா ., வேறு காரணமா என்று. கழுத்து வலி., மூட்டு வலி., குதிகால் வலி தொடர்ந்து இருந்தாலும் பார்க்க வேண்டும். பொதுவாக 40 வயது ஆகிவிட்டாலே இரண்டு வருடத்துக்கு ஒரு முறை ஹெல்த் செக்கப் செய்து கொள்வது நல்லது.


இரண்டு டெஸ்ட்டுகள் செய்யப்படுகின்றன. (BMD TEST ) போன் மாஸ் டென்சிட்டி டெஸ்ட் ., ப்ளட்டில் கால்சியம் ., இரும்பு சத்து ஆகியவற்றின் அளவை சோதிக்கும் டெஸ்ட்.


இது வந்துவிட்டால் அதிகம் படிகளில் ஏறாமலிருப்பது., தசைகளை முறுக்கி செய்யும் எக்சர்சைஸுகளை செய்யாமலிருப்பது., வெஸ்டர்ன் டாய்லெட் உபயோகிப்பது., சமதரையில் சிறிது தூரம் நடப்பது., நாற்காலியில் அமர்வது என்பதைக் கடைப்பிடிக்க வேண்டும்.


ஆரம்ப நிலையில் வலி நிவாரண மருந்துகள்., மூட்டுக்களை வலுப்படுத்தும் பிஸியோதெரபி., பயிற்சிகள் தரப்படும். அடுத்த நிலையில் ( KNEE CAPS., KNEE BRACE ) மூட்டுமேல் போடப்படும் உறைகள் போட்டுக் கொள்ள வேண்டும். முற்றிய நிலையில்தான் ஹிப் ரீப்ளேஸ்மெண்ட்., நீ ரீப்ளேஸ்மெண்ட் ( HIP REPLACEMENT ., KNEE REPLACEMENT ) போன்ற அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.


பால்., சோயாபீன்ஸ்., மொலாசஸ்., முட்டைக்கோஸ்., லோ ஃபாட் மில்க்., அதிகம் நார்ச்சத்துக்கள் உள்ள அனைத்துக் காய்கறிகளும்.. கீரை மட்டுமல்ல., எல்லா நிறக் காய்களும்., ( பச்சை ., ஆரஞ்சு., சிவப்பு., மஞ்சள்) மற்றும் பழங்களும் முக்கியமா ப்ரோட்டீன் அதிகமுள்ள முளைவிட்ட பயறு வகைகள்., முட்டை., காளான்., தானியங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.


ஃபாட் ஃப்ரீ டயட் இருக்கணும். எண்ணெய் ., கொழுப்புச்சத்து குறைக்கணும். விட்டமின் கே மற்றும் டி மற்றும் கால்சியம் உள்ள உணவு வகைகள் அவசியம். அதிக உப்பு., இனிப்பு குறைப்பது அவசியம். ட்ரை ஃப்ரூட்ஸ் நல்லது. காட் லிவர் ஆயிலும் சாப்பிடலாம்.


ஆல்கஹால் அருந்தும் பழக்கம் ., சிகரெட் புகைக்கும் வழக்கம் இருந்தால் விட்டுவிடுவது நல்லது. ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியாது. முறையான உணவுப் பழக்கம்., சரிவிகித உடற்பயிற்சி., நடைப் பயிற்சி., கால்சியம்., விட்டமின் டி., கே உள்ள உணவு., சூரிய ஒளி நம்மேல் சிறிது நேரமாவது படுதல்., நார்மல் வேலைகள்., இவைகளை செய்து ஹெல்த்தி லைஃபை வாழ்வது நம் கையில்தான் உள்ளது.
டிஸ்கி 2 :- பின்பற்றுபவர்கள் 250 ஆனது குறித்து மகிழ்ச்சி. என்னை படித்தும்., தமிழ் மணம்., இண்ட்லியில் வோட் செய்தும் ஊக்குவிக்கும் அனைத்து நல்லிதயங்களுக்கும் நன்றி.. ! நன்றி !!..

20 கருத்துகள்:

 1. மிகவும் பயனுள்ள மருத்துவத் தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்கம்மா....

  தொடரட்டும் உங்களின் இந்த பணி....

  பதிலளிநீக்கு
 2. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா

  பதிலளிநீக்கு
 3. தேவையான தகவல்கள்,பகிர்வுக்கு நன்றி அக்கா.

  பதிலளிநீக்கு
 4. தேனம்மை,நல்ல பயனுள்ள அனைவரும் அறிந்து கொள்ள அவசியமானதை பகிர்ந்துள்ளீர்கள்.பத்திரிகை,பேட்டி..ஆஹா..கலக்கறீங்க.வாழ்த்துக்கள்.வளர்க உங்கள் பணி.

  பதிலளிநீக்கு
 5. மிகுந்த பயனுள்ள கட்டுரை.நன்றி. பாராட்டுதல்கள்.

  பதிலளிநீக்கு
 6. மிகவும் பயனுள்ள இடுகை தேனம்மை. நன்றி.

  தொடருபவர் 250 ஆனதற்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. பயனுள்ள தகவல்கள்..

  இதுக்காக தொடர்ந்து வலி நிவாரண மாத்திரைகளை எடுக்கும்போது அது அசிடிட்டியில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது..

  பதிலளிநீக்கு
 8. தொடர்ச்சியாக நல்ல விசயங்களை கொடுத்துக் கொண்டுருக்கும் தேனம்மைக்கு என் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. பக்ரீத் அன்றுதான் எனக்கொரு அறுவை சிகிச்சை நடந்தது...

  மிகவும் பயனுள்ள பதிவு ஜி :)

  பதிலளிநீக்கு
 10. பத்திரிகையப் படிக்க முடியாதவர்களும் பயன்பெற நினைத்து இங்கும் வெளியிடுவதுக்கு நன்றி தேனக்கா!!

  பதிலளிநீக்கு
 11. நல்ல பயனுள்ள பதிவு தேனம்மை.

  அன்பால் இணைந்தவர்கள் 250 என்றுக் கேட்டு மகிழ்ச்சி.

  வாழ்த்துக்கள்!

  புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 12. ரொம்ப அருமையான பகிர்வு. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம். முக்கியமா கோக் பெப்சி பிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

  பதிலளிநீக்கு
 13. மிகவும் தேவையான பதிவு தேனக்கா.பரவி நிற்கிறது உங்கள் பணி.வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
  தொடரட்டும் சேவை !

  பதிலளிநீக்கு
 14. ஆஸ்டியோ போரோசிஸ் பற்றி மிகவும் பயனுள்ள மருத்துவத்தகவல்கள். பகிர்வுக்கு நன்றி அக்கா.

  பதிலளிநீக்கு
 15. நன்றி மாணவன்., ஆசியா., ஸாதிகா., இறையனார்., ராமலெக்ஷ்மி., அமைதிச்சாரல்., ( அத்துடன் ஒரு விட்டமின் மாத்திரையும் எடுத்துக்குங்கப்பா.. சாரல்., பீ காம்ப்ளக்ஸ் அல்லது பிஃளெக்ஸ் ஃபோர்டி மற்றும் ரிபோஃப்ளேவின் எடுத்துக்கலாம் .. தினம் ஒன்று. ) ஜெயந்த்., ஜோதிஜி., அஷோக் ( என்னாச்சு அஷோக்..??) ., ஹுஸைனம்மா., கோமதி., இளம் தூயவன்., ஹேமா., சண்முககுமார்.., ஜிஜி..

  பதிலளிநீக்கு
 16. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 17. மிக அருமையான பகிர்வு தேனக்கா.

  எல்லாரும் சொல்வதால் பழகி விட்டது, தேனக்கா, எனக்கு நீங்க தங்கையா அக்காவானு தெரியல்.

  பதிலளிநீக்கு
 18. நன்றி ஜலீலா

  நன்றி சந்திரமௌளீஸ்வரன்.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...