வியாழன், 16 டிசம்பர், 2010

ருக்மணி அம்மாவின் புத்தகங்கள்.. ஒரு பார்வை..

லேடீஸ் ஸ்பெஷல் ப்லாகர் அறிமுக இரண்டாவது இஷ்யூவுக்காக தேடியபோது விதூஷ் எனக்கு பாட்டி சொல்லும் கதைகளை அறிமுகப் படுத்தி வைத்தார்.. அதற்காக ஈ மெயிலில் தொடர்பு கொண்ட போது என் வீட்டருகிலேயே ருக்மணி அம்மா இருப்பது தெரிய வந்தது. சந்திக்க சென்ற போது சில புத்தகங்கள் கொடுத்தார்.. கிட்டத்தட்ட 27 புத்தகங்கள் அச்சில் வந்துவிட்டன.. இன்னும் 3 வர இருக்கின்றன..


அவர்கள் வயது 73.. ஆனால் முயற்சியில் பகீரதன் கூட அடுத்தபடிதான்.. எதையாவது எழுதிக் கொண்டே இருப்பதும்., அடுத்து என்ன எழுதலாம் என யோசிப்பதும்.,” இன்னும் நிறைய இருக்கும்மா சொல்ல..” என்பார்..!!

சுய உதவிக்குழு பற்றிய கருத்தரங்கில் கலந்து கொள்ள சென்ற போது., என் உடன் வந்த அம்மா அங்கே இருந்த தொழில் முனைவோரிடம் பாக்கு மட்டை பொருட்கள் செய்வது பற்றி விசாரித்தார்கள்..,” முடிந்தால் அதையும் செய்து பார்க்கலாமே.,” என்றார்களே பார்க்கணும்.. அம்மா.. அம்மம்மா..

அவர்கள் மகள் சொல்வார்கள் அம்மாவின் கவிதைகள் அருமையாய் இருக்கும் என்று.. கதைகளும், நாடகங்களும் கூட சிறப்பாய் இருக்கின்றன., அவர்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் போல. ஆறு மாதமாய் கம்ப்யூட்டரில் அவ்வப்போது பிரச்சனைகள் வந்தபோதும் திருக்குறள் கதைகள் எழுதி அனுப்புகிறார்கள் லேடீஸ் ஸ்பெஷல் இதழுக்கு..

தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத்தின் மெம்பர் கார்டு வைத்திருக்கிறார்கள். இவர் வெளி பதிப்பகங்களிலும் தங்கள் சொந்தப் பதிப்பகத்திலும் நூல்களை வெளியிடுகிறார்கள்.. புத்தக வெளியீட்டில் பெரிய வருமானம் பொதுவாக இல்லை.. வித்யா தானம் என்பார்கள். நமக்கு தெரிஞ்சதை நாலு பேருக்கு சொல்வோமே என்பார்கள். இவரின் நூல்களை பல நூலகங்களிலும் பள்ளிகளிலும் காணலாம். பலரின் நூல்களுக்கு அணிந்துரை., முகவுரை., விமர்சனம் எழுதிக் கொடுக்கிறார்கள்..

இவர் படைப்பில் 8 புத்தகங்கள் வாங்கி வந்து படித்தேன்.. (அப்பாடா 6 மாசம் கழிச்சு இப்பவாவது படிச்சியே என்கிறீர்களா..:)).. ஆமாம்.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உன்னதம்..

ருக்கு அம்மா அரசுப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்ததால் இவர் சந்தித்த ஒவ்வொரு மாணவனும் இவரின் கதை நாயகர்கள்.. எல்லாம் நீதி போதனை., நன்னெறி., நல்லொழுக்கம் போதிக்கும் கதைகள்..

குழந்தைகளுக்கு இரவு படுக்கும் போது அல்லது விடுமுறை நாளில் ., ட்ரெயினில் செல்லும் போது படிக்க கொடுக்கலாம் . புரியாவிட்டால் விளக்கம் கொடுக்கலாம்..

இவரின் சொந்த பதிப்பகம் சாய் பதிப்பகம் ., இவர் கணவரின் ஊக்கமூட்டுதல் அதிகம். இவர் தன் மனைவியின் புத்தகங்களுக்கு ப்ரூஃப் ரீடிங் பார்த்துக் கொடுப்பாராம்.. இப்படி கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்தானே..!!

1.அம்மா என்றால் அகிலம் சாய் பதிப்பகம்.-- இதில் அன்னையின் மாண்பு பற்றி ஏழு சிறுகதைகள்.

2. உரத்த சிந்தனை அமைப்பின் அறிமுக அலைகள் ( இது 26 கவிஞர்களின்150 கவிதைகள்... இதில் ருக்கு அம்மாவின் முதுமை பற்றிய கவிதை அருமை..
“சேயூரில் தவழ்கின்ற மலரொன்றின் பயணம்
மூதூரில் நுழைந்தபின் சருகாகி விடுகிறது..
சருகாகிப் போனாலும் சத்தற்றுப் போய்விடுமா..
மூதூர். இது அனுபவப் பறவைகளின் வேடந்தாங்கல்”

3.விடுதலைச் சுடர்களில் 10 விடுதலைப் போராட்ட வீரர்கள் .. தீவிர போராட்டவாதிகளாய் அறியப்பட்ட சுபாஷ் முதல் வீர சிவாஜி வரை எழுச்சியூட்டும் 10 கதைகள்.. கீர்த்தனா பிரசுரம்

4. பைந்தமிழ்ப் பாவலரில் கோவூர்க் கிழார் முதல் நப்பசலையார் வரை..சாயி பதிப்பகம்.

5. மாணவர்களுக்கு ஏற்ற நாடகங்களில் உழைப்பின் உயர்வு., சேமிப்பின் சிறப்பு ., கல்வியின் பெருமை., திருடாதே., என 10 கதைகள் .. ஜெம் ஆஃப்செட்டின் அச்சில்.

6. ஒரு கிராமத்து மணம் .. இதில் 12 சீர்திருத்தச் சிறுகதைகள்., சாயி பதிப்பகம்.

7. அகிலம் போற்றும் மேதைகள் .. இதில் சர். சி. வி . ராமன் முதல் ஹிப்போகிரேட்டீஸ் வரை 20 அறிவியல் மேதைகள் பற்றிய கட்டுரை. .அஸ்வினி புக் கம்பெனி..

8. அந்தியிலும் ஒரு அழகு.. மிக அழகான ஒரு நாவல்.. சொர்ணவல்லி பிரசுரம்..

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாய் எழுத்துப் பணியில் இருக்கிறார் ருக்கு அம்மா.. இன்றும் பதிப்பகத்தார் இவர் எழுதியவுடன் வீட்டிற்கு வந்து வாங்கிச் செல்கிறார்கள்..

என்ன மக்காஸ் நீங்களும் புத்தகம் போட கிளம்பிட்டீங்க போல இருக்கே..
ஆசைக்கும் ., சாதனைக்கும் வயசு இருக்கா என்ன.. ஆசைப்படுங்க .. சாதிக்கலாம்.

அடுத்த வாரம் உயிர்மையில் வெளிவரப்போகும் கவிதைத் தொகுப்பிற்காய் என் அன்பிற்குரிய நண்பன் நேசனுக்கு இந்த இடுகை பரிசு.. வாழ்க மக்கா.. வெற்றி நிச்சயம்..

டிஸ்கி:- இது எனது 300 வது இடுகை.. எல்லாம் உங்க ஆதரவும் ஆசீர்வாதமும் மக்காஸ்..:))

19 கருத்துகள் :

Chitra சொன்னது…

அருமையான பகிர்வு, அக்கா..... நன்றி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

அருமை!..அருமை!!...அருமை!!!!

மாணவன் சொன்னது…

//என்ன மக்காஸ் நீங்களும் புத்தகம் போட கிளம்பிட்டீங்க போல இருக்கே..
ஆசைக்கும் ., சாதனைக்கும் வயசு இருக்கா என்ன.. ஆசைப்படுங்க .. சாதிக்கலாம்.//

சரியாக சொன்னீர்கள்...
ஆசையுடன் “பயிற்சியும் முயற்சியும் இருந்தால் ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”

அருமையான தகவல்களை சிறப்பாக பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள்...

தொடரட்டும் உங்கள் பணி

மாணவன் சொன்னது…

//டிஸ்கி:- இது எனது 300 வது இடுகை.. எல்லாம் உங்க ஆதரவும் ஆசீர்வாதமும் மக்காஸ்..:))//

300 ஆவது எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்.....

உங்களின் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வேண்டும்

எப்போதும் உங்களோடு இணைந்திருப்போம்.......

நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

300 ஆவது எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்.....

ஸாதிகா சொன்னது…

300 க்கு வாழ்த்துக்கள் தேனம்மை.விரைவில் 1300 வர வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

பகிர்வுக்கு நன்றி, முன்னூறுக்கு வாழ்த்துக்கள் அக்கா.

செந்தில்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் அக்கா...

அசத்தலான பகிர்வு அக்கா

VELU.G சொன்னது…

நல்ல பகிர்வு

ஸ்ரீராம். சொன்னது…

//"என்ன மக்காஸ் நீங்களும் புத்தகம் போட கிளம்பிட்டீங்க போல இருக்கே.."//

புத்தகத்தை எடுத்துக் கீழே போட வேண்டியதுதான்!
ருக்மிணி அம்மாவின் சாதனை வியக்க வைக்கிறது. நேசனுக்கும் உங்கள் முன்னூறாவது இடுகைக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

அமைதிச்சாரல் சொன்னது…

300முறை வாழ்த்துகிறேன் :-))

கோமதி அரசு சொன்னது…

300 வது இடுகைக்கு என் வாழ்த்துக்கள் தேனம்மை.

வாழ்க வளமுடன்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி. கூடவே 300க்கு வாழ்த்துகளும் தேனக்கா.

நேசமித்ரன். சொன்னது…

300 க்கு வாழ்த்தும்.

என் புத்தகத்திற்கு வாழ்த்திய பிரியத்திற்கு சிரந்தாழ்தலும் ஏற்றுக் கொள்க நட்பே

மிக நல்ல பகிர்வு. நாளொரு மெனியாய் மிளிர்கிறது எழுத்து மீண்டும் வாழ்த்துகள்

விஜய் சொன்னது…

முன்னூறு மூவாயிரம் முப்பதாயிரமாக வளர வாழ்த்துகிறேன் அக்கா

விஜய்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி சித்து., ஆர் ஆர் ஆர்., மாணவன்., (மிக்க நன்றி மாணவன்., ) ., டி வி ஆர்., ஸாதிகா., சை கொ ப., செந்தில் குமார்., வேலு., ஸ்ரீராம்., சாரல்., கோமதி., சிநேகிதன்., நேசன்., விஜய்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Rathnavel சொன்னது…

வாழ்த்துக்கள்.
நிறைய எழுதுங்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

வாழ்த்துக்கு நன்றி ரத்னவேல்சார் :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...