புதன், 1 டிசம்பர், 2010

விட்டுப் போனவை.., வெறுப்பு., கனவு...


1. விட்டுப் போனவை:-
**************************
ஒரு கோப்பைக்குள் பாதரசமாய்
ஏந்தி இருந்தாய் உன் கனவை..
காலம் தீர்ந்த அவகாசத்தில்
கையளித்துச் சென்றாய் என்னிடம் ..
குழியாடிக் குவியாடிக்
கண்களாடிக் கலந்தேன்..
நகரும் வெள்ளிக் கண்ணாடியில்..
அதிகமசைந்து
தங்கம் துளைந்தாடியது அது..
இன்ப அதிர்ச்சியோ என்னவோ..
கை தவறிப் போட்டுடைத்தேன்..
குன்றிமணிகளாய்த் தரையில் சிதறி..
அமில ஓட்டைகள்
கத்தரித்திருந்த
சோதனைச் சாலை அங்கியோடு
தவழ்ந்தேன் தரை முழுதும் ..
ஒன்று சேர்த்துக் கோர்த்துவிடலாமென..
*****************************************************
2. வெறுப்பு:-
**************
கொலைக் கத்திகளும்
கொம்பின் முனைகளும்
முத்தமிடும் உலகில்
தாவரமாகவோ.,
காய்கறியாகவோ வாழ்வது..
கத்திரிக்கோல்களால்
நறுக்கப்படவே தினம்
செய்வதறியாது சிரிக்கும்
செந்நிற ரோஜாவாய்ப் பூத்திருப்பது..
வீட்டின் மேல் பழையதும்
வேண்டாததும் போட்டு
அடைக்கும் பரணாயும்
ட்ரெங்குப் பெட்டியாயும் இருப்பது ...
காலடி எடுத்து வாசலில் வைத்தாலே
திருவிழாவோ., தெப்பமோ
தேரோ., உலாவோ செல்லும்
அம்மனாய்த் தோன்றுவது...
பூப்பல்லக்குகளும்., வாகனங்களும்.,
கோமடங்களும் ., செங்காவியும் சூழ
வணக்கத்திற்குரிய சிலையாய்
சிறையுண்டிருப்பது..
**************************************
3. கனவு :-
**************
ஓவிய வகுப்பில்
ஓயாமல் பென்சில் திருகி...
முனை ஒடித்துக்
குட்டு வாங்கிய
குழந்தையின் இரவில்....
சாபமிட்டு விரல் முறிக்கும்
கொடுந்தேவதைகள்
முளைத்துக் கிடந்தார்கள்
கனவெங்கும்..
டிஸ்கி.. 2..:- விட்டுப் போனவை., வெறுப்பு., கனவு என்ற என் மூன்று கவிதைகளும் நவம்பர் 28., 2010 திண்ணையில்.. தொடர்ந்து வெளியிட்டு வரும் திண்ணைக்கு நன்றி..:))

25 கருத்துகள் :

Nithu Bala சொன்னது…

Vazhthukal Thenu..

ராமலக்ஷ்மி சொன்னது…

மூன்று கவிதைகளும் அருமை. உயிரோசையிலும் தொடர்ந்து வெளிவர மனமார்ந்த வாழ்த்துக்கள். சீக்கிரமா கவிதைத் தொகுப்பு கொண்டு வாங்க தேனம்மை.

Chitra சொன்னது…

அக்கா, எல்லா கவிதைகளும் அருமை. திண்ணையில் வெளியானமைக்கு வாழ்த்துக்கள், அக்கா!

தமிழ் உதயம் சொன்னது…

உங்கள் பார்வையில் படுகிற எல்லாமே கவிதையாகிவிடுகிறது.

Balaji saravana சொன்னது…

உயிரோசையில் உங்கள் கவிதை வந்ததற்கு வாழ்த்துக்கள் அக்கா :)
மூன்றுமே சூப்பர் :)

ஸாதிகா சொன்னது…

அருமையான கவிதைகள்.வாழ்த்துக்கள் தேனம்மை.

அஹமது இர்ஷாத் சொன்னது…

தேன‌க்கா அருமையான‌ க‌விதை வ‌ரிக‌ள்..ந‌ல்லாயிருக்கு..

பிரபு . எம் சொன்னது…

மூன்று கவிதைகளுமே அருமை அக்கா...
கூர்மையான வார்த்தைகள்....
ரொம்ப ரசிச்சுப் படிச்சேன்...
சூப்பர் க்கா.. :))

உயிர்மையில் வந்திருக்கா... வாவ்.. ஒன்டர்ஃபுல்!!
சீக்கிரம் நீங்க பப்ளிஷ் ஆகணும்....
அடுத்த புத்தகக் கண்காட்சியில் உங்க கவிதைத் தொட்குப்பை பார்க்க முடியும்னு தோணுதுக்கா...

சசிகுமார் சொன்னது…

அருமை அக்கா வாழ்த்துக்கள்

sakthi சொன்னது…

மூன்றும் முத்துக்கள்
வாழ்த்துக்கள்!!!

anu சொன்னது…

Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article

ஸ்ரீராம். சொன்னது…


ரு
மை

விஜய் சொன்னது…

மூன்றும் முத்துகள்

வாழ்த்துக்கள் அக்கா

விஜய்

ஹேமா சொன்னது…

அருமை,நல்லாருக்கு,
கலக்கலாயிருக்கு தேனக்கா.உயிரோசையில் படிதுவிட்டேன் திங்களன்றே !

கலாநேசன் சொன்னது…

இம்மூன்றும் மனதுக்கு நெருக்கமான கவிதைகள்.

THOPPITHOPPI சொன்னது…

அருமையான வரிகள்

வெறும்பய சொன்னது…

அருமையான கவிதைகள்

சத்ரியன் சொன்னது…

தேனக்கா,

மூனாவது முதலிடத்தைப் பிடிக்குது.

சிவகுமாரன் சொன்னது…

கனவு கவிதை மிக அழகு.

VELU.G சொன்னது…

மூன்றுமே அழகான கவிதைகள்

மேன்மேலும் உங்கள் கவிதைகளை வாசிக்க ஆவலாய் உள்ளேன்

சௌந்தர் சொன்னது…

கனவு எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு

அமைதிச்சாரல் சொன்னது…

அழகான தேனான கவிதைகள் தேனம்மை..

வினோ சொன்னது…

மூன்றும் சூப்பர்.. இரண்டு முறை படித்தேன்...

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி நிது., ராமலெக்ஷ்மி., சித்து., ரமேஷ்., பாலாஜி., ஸாதிகா., அஹமத்., பிரபு., சசி., சக்தி., அனு., ஸ்ரீராம்., விஜய்., ஹேமா., கலாநேசன்., ஜயந்த்., தொப்பி., சத்ரியன்., சிவகுமாரன்., வேலு., சௌந்தர்., அமைதிச்சாரல்., வினோ.,

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...