வியாழன், 28 அக்டோபர், 2010

மார்பகப் புற்று.. முன்னெச்சரிக்கை..

அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.. நண்டூறுது ., என அறியா வயதில் விளையாடி இருக்கலாம்.. பேரிளம் பெண்களுக்கான பருவத்தில் அறியாமல் இருக்கலாமா..

சென்ற மாதம் ஒரு தோழியுடன் பேசியபோது சொன்னார்.. தற்போதெல்லாம் 40 வயதுக்கு மேல் அல்ல ...30 வயது உள்ள பெண்களுக்கும் மார்பகப் புற்று ஏற்படுகிறது என.. மார்பகத்தில் சிறு சிறு கட்டிகள் உருள்வது போல் இருந்தால் மாமோகிராம் செய்வது அவசியம் ..


காரணமேயில்லாமல் ., பரம்பரை வாகு கூட இல்லாமல் புற்று வரும் வாய்ப்புகள் 5 % இருக்கிறது . ஒரு தோழி காய்கறி .,பழம் மட்டுமே சாப்பிடுபவர்., கொழுப்பு சத்து ., பால் .,ஸ்வீட்., எண்ணெய்., அசைவம் எதுவும் சேர்த்துக் கொள்ளவே மாட்டார்.. எதற்கும் அதிகமாக மருந்தும் உண்ணாதவர்.. அவருக்கு 3 மாதத்துக்கு முன் புற்று கண்டுபிடிக்கப் பட்டு அறுவைசிகிச்சை மூலம் சரி படுத்தப் பட்டு தற்போது கீமோதெரஃபி நடந்து வருகிறது..

5FU என்ற டாக்சிக் ட்ரக் கொடுக்கப் படுகிறது.. ஏனெனில் ஒரு சில செல்கள் இருந்தாலும் மீண்டும் உடலில் பரவும் அபாயம் உண்டு என்பதால். இதன் பக்க விளைவுகளாக., முடி கொட்டுதல்., பசியின்மை., வயிற்றுப் பொருமல்., வாய்ப் புண்., மலச்சிக்கல் ., நகம் வளராமை என சைட் எஃப்ஃபெக்ட்ஸ் வருகிறது. ஆனால் வேறு வழியில்லை.. காரம் சாப்பிடவே முடியாது..

இதுவே முன்பே கண்டுபிடித்ததால் இந்த அளவுடன் விட்டது.. இன்னும் இரண்டு மூன்று சிட்டிங்ஸ் போதும் கீமோதெரஃபிக்கு.. எனவே வரும் முன்னே காவுதல் நன்று..

மொத்தம் 12 வகையான மார்பகப் புற்றும் அதை கண்டு பிடிக்கும் முறைகளும்., சிகிச்சை முறைகளும் இந்த http://www.breastcancer.org/ இல் விவரமாக கொடுக்கப் பட்டுள்ளது .. பாருங்கள்..

நம் ரோஹிணி சிவாவும் தன்னுடைய புதிய வார்ப்பு வலைப் பதிவில் சோதனை தேவை என்ற தலைப்பில் இதைப் பற்றிக் குறிப்பிட்டு வருமுன் காக்க சொல்லி இருக்கிறார்..

நண்டு உணவாகலாம்.. நண்டுக்கு நாம் உணவாகலாமா.. எனவே சகோதரிகளே.. முன்னெச்சரிக்கையா இருங்க..

23 கருத்துகள் :

LK சொன்னது…

பதிவுக்கு நன்றி..

யாதவன் சொன்னது…

நல்லா தகவல்

சசிகுமார் சொன்னது…

அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா.

நட்புடன் ஜமால் சொன்னது…

சொன்னா கேட்டாதானே ...

தமிழ் உதயம் சொன்னது…

பதிவு, பகிர்வுக்கு நன்றி. ரோகினிசிவா அவர்களின் பதிவையும் வாசித்தேன்

கலகலப்ரியா சொன்னது…

தேவையான பகிர்வு தேனம்மை...

ராமலக்ஷ்மி சொன்னது…

விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல பகிர்வு.

Mrs.Menagasathia சொன்னது…

thxs for sharing!!

ஆகாயமனிதன்.. சொன்னது…

உபயோகமான பதிவு தேனக்கா...

Chitra சொன்னது…

Nice post, akka. :-)

Thanglish Payan சொன்னது…

Good awareness message from your post..

Really Good message...

Kanchana Radhakrishnan சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.

Balaji saravana சொன்னது…

தேவையான விழிப்புணர்வு..

ஜிஜி சொன்னது…

நல்ல பகிர்வு.பகிர்வுக்கு நன்றி.

வெறும்பய சொன்னது…

உபயோகமான பதிவு..

அந்நியன் சொன்னது…

தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்

சே.குமார் சொன்னது…

அனைவருக்கும் அவசியமான பதிவு.
வாழ்த்துக்கள் அக்கா.

சத்ரியன் சொன்னது…

தேனக்கா,

அனைவரும் தெரிந்துக் கொள்வதுடன், செயல்பட வேண்டிய நல்ல பதிவு.

ஸாதிகா சொன்னது…

அவசிய பதிவு தேனம்மை.அக்டோபர் மாதம் முழுதும் சென்னை பாரத் ஸ்கேனில்மார்பக புற்றுநோய் பரிசோதனை பாதி கட்டணத்தில் செய்கிறார்கள்.சகோதரிகள் இச்சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொள்ளலாம்.

ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

நண்டு உணவாகலாம்!
நண்டுக்கு உணவாகலாமா?
- என்ன ஒரு அருமையான வார்த்தைப் பிரயோகம். இங்கு என்னை
கொஞ்சம், கொஞ்சமாய் ஒரு கம்ப்யூட்டர்
சிஸ்டம் தின்று கொண்டிருக்கிறது...

ஹுஸைனம்மா சொன்னது…

ஆமா, இப்பல்லாம் ஒரு காரணமுமே இல்லாம இந்தப் புற்று நோய் அலைக்கழிக்குது. ரேண்டம் நம்பர்ஸ் முறையில செலக்ட் பண்ணுதோ என்னவோ ஆட்களை? :-((

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி கார்த்திக்., யாதவன்., சசி., ஜமால்., ரமேஷ்., ப்ரியா., ராமலெக்ஷ்மி., மேனகா., ஆகாய மனிதன்., சித்ரா., தங்கிலிஷ் பையன்., காஞ்சனா., பாலாஜி., ஜிஜி., வெறும் பய., அந்நியன்., குமார்., கோபால்., ஸாதிகா., ஆர். ஆர். ஆர்., ( சீக்கிரம் விடுபடுங்க ஆர் ஆர் ஆர் ) ., ஹுஸைனம்மா.,

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிர் ஒற்றுமை ஓங்கட்டும்.!என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...