எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 25 அக்டோபர், 2010

தாம்பத்யம்..

என்றுமே புரி்ந்து கொள்ளாத தன்மைக்கு
என்ன பெயரிட்டாலென்ன..?

வருடங்கள் மட்டுமே வாழ்க்கையல்ல..
வருடல்கள் மட்டுமேயும்..

வாழ்க்கைக்குள்ளும் ஒரு நெகிழ்வு.,
ஒரு புரிவு., பரிவு..

எனக்கான பிரபஞ்சத்தில் நானும்..
உனக்கான பிரபஞ்சத்தில் நீயும்..


அவ்வப்போது விண்கற்களாய்..
தவறாய் முட்டிக்கொண்டும்.,
தவறாமல் மோதிக்கொண்டும்..

அவரவர் இலக்கில் அநாமதேயமாய்..
எங்கோ எரிந்து வீழும் வால்நட்சத்திரங்களாய்...

பால் வீதியின் சிதறல்களில்தான் இருக்கிறோம்...
நான் மட்டும் உன் நினைப்பில் சிறுகோளாய்..
உன்னை மட்டுமே சுற்றி..

இருக்கட்டும் எல்லாம் ..
அவரவர் ஹீலியப் பந்து எரியும் வரை..
முழுமையும் வெண்சாம்பலாய் மாறும் வரை...

கிரகணங்களும்., அமாவாசைகளும்
நம் உயிர்ப்பையும் இருப்பையும் உணர்த்த..
எப்போதோ பௌர்ணமிகளும் ப்ரகாசமாய்..

டிஸ்கி:- இது அக்டோபர் 24., 2010 திண்ணையில் வெளிவந்துள்ளது.

24 கருத்துகள்:

 1. ஆஹா...அருமை தேன் டா...இதுதான் வாழ்க்கை..இதுதான் தாம்ப‌த்ய‌ம்...ஹும்ம்ம்ம்...

  பதிலளிநீக்கு
 2. சகோ,

  புத்தகமாய் போட முயற்ச்சிகலாமே?

  பதிலளிநீக்கு
 3. என்றுமே புரி்ந்து கொள்ளாத தன்மைக்கு
  என்ன பெயரிட்டாலென்ன..?///

  அதானே....? நல்லா இருக்கு...க்கா

  பதிலளிநீக்கு
 4. சில சமயம் தோன்றும்....
  ஒரு சுயநலத் தேவையின் விளைவாகத்தான் அன்பு என்றும் பாசம் என்றும் பெயரிட்டு ஒருவரை ஒருவர் ஏமாற்றுகிறோம் என்று...
  திண்ணையில் வெளியானதற்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 5. வருடங்கள் மட்டுமே வாழ்க்கையல்ல..
  வருடல்கள் மட்டுமேயும்..///

  செம்மொழியை பாராட்டுவதா... உங்களை பாராட்டுவதா...

  பதிலளிநீக்கு
 6. வாழ்க்கையை இவ்வளவு கவிதையில் அழகாக சொல்லி அசத்திவிட்டீர்கள் தேனம்மை.

  பதிலளிநீக்கு
 7. நிதர்சனம்

  வாழ்த்துக்கள் அக்கா

  விஜய்

  பதிலளிநீக்கு
 8. நல்ல கவிதை தேனம்மை. திண்ணையில் வாசித்தேன். மற்ற மூன்றையும் பதிவிடுங்கள் விரைவில்:)!

  பதிலளிநீக்கு
 9. அக்கா செம..
  நானே பிரபஞ்சம், இப்போ தாம்பத்யம் பிரபஞ்சம் :)

  பதிலளிநீக்கு
 10. கவிதை நல்லா இருக்கு தேனம்மை.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. கவிதை நல்லா இருக்குங்க.
  அழகா சொல்லிருக்கிங்க.
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 12. நன்றி வாணி., கார்த்திக்., ஜமால்., ஆசியா., கணேஷ்., டி வி ஆர்., மேனகா., ராம்ஜி., சௌந்தர்., ஸ்ரீராம்., ரமேஷ்., வினோ., ராஜி., ஸாதிகா., விஜய்., ராமலெக்ஷ்மி., வசந்த்., முனியப்பன் சார்., பாலாஜி., கோமதி.,ஜிஜி

  பதிலளிநீக்கு
 13. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...